"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Veenai pesum - Vaazhvu en pakkam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Mar 28, 2008 3:21 am    Post subject: Lyrics - Veenai pesum - Vaazhvu en pakkam Reply with quote

படம்: வாழ்வு என் பக்கம் பாடியவர்கள்: கே.ஜே. யேசுதாஸ், சசிரேகா (humming)
இசை: மெல்லிசை மன்னர்

வீணை பேசும் அதை மீட்டும் விரல்களைக்கண்டு
தென்றல் பேசும் அது மோதும் மலர்களில் நின்று

நாணம் ஒரு வகை கலையின் சுகம்
மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே
(வீணை பேசும்)

காதல் தருவது ரதியின் கதை
கண்ணில் வருவது கவிதை கலை
வார்த்தை இல்லாத சரசம் கண்ணே
வாழ்வில் ஒன்றான பின்னே
தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே
நெஞ்சில் தாலாட்டு கண்ணே
(வீணை பேசும்)

இந்த படத்தில் முத்துராமன் ஒரு பணக்காரராகவும், முற்போக்கு எண்ணங்களை கொண்ட மனிதராகவும் வந்து ஊமையாக வரும் லஷ்மியை திருமணம் செய்துகொள்வார். ஊமையான தனக்கு இப்படி ஒரு வாழ்வு கிடைத்ததை கண்டு சந்தோஷமும், சிறிது அச்சமும் கொண்டவராகவும் இருக்கும் லஷ்மியிடம் அவர் முதலிரவில் பாடும் பாடல் இது.

இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும், அவளின் குறையை அவன் ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று, ஆறுதலாக சொல்வது போலவே அமைந்திருக்கும். கவிஞர் இந்த பாடலுக்கு உவமையாக தேர்ந்தெடுத்திருக்கும் வார்த்தைகளும் மிகவும் அழகு.

வீணையின் அழகான இசை பாஷை, அதை மீட்டுபவருக்கு புரியும்.
தென்றலின் பாஷை, அது சென்று மோதும் மலர்களுக்கு புரியும். அது போல நீ பேசும் மௌன மொழி எனக்கு புரியும் என்று அவன் அவளிடம் சொல்வது போல அமைந்துள்ள பல்லவியின் வரிகள் மிகவும் அழகானவை.

//மௌனம் ஒருவகை மொழியின் பதம்
தீபம் எப்போது பேசும் கண்ணே
தோன்றும் தெய்வத்தின் முன்னே
தெய்வம் சொல்லாத வார்த்தைகள் எல்லாம்
தீபம் சொல்லாதோ கண்ணே//

உன்னுடைய மௌனமும் ஒரு மொழியின் வார்த்தைதான் என்று கூறி உடனே அடுத்த வரியில் பேசாத தெய்வத்தின் முன்னே, அங்கு அழகாக சிறிய சுடர் விட்டு எரியும் தீபம் சொல்லும் வார்த்தைகள் ஏராளம்தான் என்ற வரிகள் அற்புதம். சற்று சிந்தித்து பார்த்தால், நாம் தெய்வத்தின் சன்னதியில் கண்மூடி சிறிது வினாடிகள் நின்ற பின், கண் திறந்து பார்த்தால் அந்த விளக்கின் சுடரில் நம் மனம் நம்மை அறியாமல் சிறிது நேரம் லயிப்பது நிஜம் என்று தோன்றும்.

'கண்ணில் வருவது கவிதை கலை' உன் வாயில் இருந்து வார்த்தைகள் வராவிட்டால் என்ன, உன் கண்களில் இருந்து கவிதையே வருகிறதே என்று சொல்லும் நயமான வரிகள்.

கவிஞர் 'வீணை பேசும்' என்று பல்லவியை துவக்கி இருப்பதால், மெல்லிசை மன்னரும் இந்த பாடலை வீணையில் துவக்கி இருக்கிறார். வீணையை தொடர்ந்து வரும் வயலினும் அந்த புல்லாங்குழலும் இசைக்கும் ராகம் சுகமோ சுகம். இந்த பாடலில் முதலில் வரும் பல்லவியில் மட்டும், பின்னணியாக வீணை வருவது வார்த்தையில் வர்ணிக்க முடியாத அழகு. பல்லவியின் ஒவ்வொரு வார்த்தைக்கும் இந்த வீணை பதில் பேசுவது போல வரும்.

அது போல பாடலை முடிக்கும்போது மறுபடியும் பல்லவியை பாடாமல், இந்த பாடலின் கடைசி வரியில்

'தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே, நெஞ்சில் தாலாட்டு கண்ணே'

என்று வருவதால், மெல்லிசை மன்னரும், சசிரேகா humming-il தாலாட்டு பாட வைத்து, அவரை தொடர்ந்து ஜேசுதாஸ் அவர்களும் தாலாட்டு பாடுவது போல பாடலை முடித்திருப்பது கொள்ளை அழகு.

இரவின் அமைதியில் இந்த பாடலை கேட்கும்போது இந்த தாலாட்டில் நம் மனமும் உறங்க தொடங்கும்.
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Mar 28, 2008 9:03 am    Post subject: Reply with quote

Excellent writing of a wonderful song Ms.Meenakshi ! IMO, this song would have captivated all the fans of MSV . Did you notice a similarity of the theme with Mouname paarvayaal ( another Muthu – Vijayakumari ) fm Kodimalar ?
As you rightly put it , the lyrics are poetic, the soothing tune , the lovely orchestration with Veena dominating all makes this song a real classic

அது போல பாடலை முடிக்கும்போது மறுபடியும் பல்லவியை பாடாமல், இந்த பாடலின் கடைசி வரியில்

'தாய்மை கொண்டாடு பிள்ளையும் நானே, நெஞ்சில் தாலாட்டு கண்ணே'

என்று வருவதால், மெல்லிசை மன்னரும், சசிரேகா humming-il தாலாட்டு பாட வைத்து, அவரை தொடர்ந்து ஜேசுதாஸ் அவர்களும் தாலாட்டு பாடுவது போல பாடலை முடித்திருப்பது கொள்ளை அழகு.

இரவின் அமைதியில் இந்த பாடலை கேட்கும்போது இந்த தாலாட்டில் நம் மனமும் உறங்க தொடங்கும்.

True. this may even qualify for a thalattu genre !

Sasirekha's humming shows the homework done for the situation

Madam, all your writings have double qualification ….. both in as well as Song lyrics thread analysis thread !
Back to top
View user's profile Send private message Send e-mail
tvsankar



Joined: 24 Jan 2007
Posts: 229

PostPosted: Fri Mar 28, 2008 8:59 pm    Post subject: Reply with quote

இரவின் அமைதியில் இந்த பாடலை கேட்கும்போது இந்த தாலாட்டில் நம் மனமும் உறங்க தொடங்கும்.

Dear Meenakshi,
Azhagana varthaigal - indha padalai patri.

Iravin amaidhiyil, indha padlai kettal, nichayam manadhil
vandhu utkarndhu konda sangadangal ellam kanamal poi vidum.
Appadi patta oru isai - MSV idam irundhu...
Maraka mudiyadha padal.
indha padalai ninaivu paduthiyadharuku mikka nanri.

With Love,
Usha Sankar.
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Mar 29, 2008 6:02 am    Post subject: Reply with quote

Thanks Balaji and Usha.

பாலாஜி, நான் இந்த பாடலைப் பற்றி எழுதும் போது உங்களைப்போலவே என் மனதிலும் 'மௌனமே பார்வையால்' பாடல்தான் நினைவுக்கு வந்தது. ஏனென்றால், ஏறத்தாழ இந்த இரண்டு பாடலும் ஒரே மாதிரி சூழ்நிலைக் கொண்ட காட்சிக்கு எழுதப்பட்டதுதான். இந்த இரண்டு அருமையான பாடலுமே முத்துராமன் அவர்கள் நடித்ததுதான்.

'மௌனமே பார்வையால்' இந்த பாடலின் வரிகளும் மிகவும் அற்புதமானவை. இந்த பாடலின் இசையும், இரவு நேரத்தில் நம்மை தாலாட்டும்.

'முத்து சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழிவேண்டும்
முன்னம் இருக்கும் இந்த பிஞ்சு முகத்தில்
பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்'

இந்த வரிகளும், ஒரு மொழி அல்ல, பல மொழிகள் உன் முகத்தை பார்த்தே பாடம் கேட்கும்போது, நீ இதழ் திறந்து பேச வேண்டிய அவசியம் என்ன? என்று அவன் அவளுக்கு கூறும் இதமான ஆறுதல்தான். இந்த இதமான வரிகள், மெல்லிசை மன்னரின் இசையுடன் சேர்ந்து வரும்போது நம் மனதில் தோன்றும் உணர்வும் இதமானதுதான்.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Apr 19, 2008 7:44 am    Post subject: Veenai adhu paesum Reply with quote

Dear Meenakshi mam and Mr. Balaji,
I profusely thank both of you for the nice write-up on this number. To me, this single song by MSV has all the message regarding the far-reaching prowess of MSV as the supreme MD of the TF industry. Once again his orchestration for this number stands in robust elegance with minimum embellishments using veena and bango as the lead donors. Look at the way he has availed of KJ Jesudoss. Msv's dimensions are countless if we try to understand him as an MD. Undoubtedly he is the Numero UNO MD on matters of harmonious blending - no matter how apparently unrelated the instruments may seem. For him SEAMLESS presentation is Second nature and year after year how he has perfected this nuance is a matter for research. Another quality of MSV's compilation is that, he always chooses to have a congenial 'end' [for the song] that progressively tapers off slowly declining in volume and complexity. MSV-- thoroghly blessed by GODDESS SARASWATHY has used the right styles innovation. In this song, his use of B.S.SASIREKA for a letterless humming is a case in point. On such occasions he employs an uncommon voice and right away steals the show. The letterless humming was a well thoughtout strategy that augurs well for a speech-impaired character and the closing of the song by that humming indeed raised the stature of the piece in all dimensions. Thank you so much.
Warm regards Prof.K.RAMAN MADURAI
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group