"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks (13) - Unnai Ondru Ketpen

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Mar 10, 2008 8:06 am    Post subject: A Handful of Piano Picks (13) - Unnai Ondru Ketpen Reply with quote

A Handful of Piano Picks - Part 13

உன்னை ஒன்று கேட்பேன்

A Rock & Roll Classic!


கடந்த மாதம் அலுவலக வேலைகள் காரணமாக என்னால் நம் தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை. இங்கு சில அருமையான பதிவுகளுக்கும், பல நல்ல பாடல்களை கேட்ட போதும் அதை அனைவருடன் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைக்காததை எண்ணி வருந்துகிறேன்.... இதோ Back To Form !!! Very Happy

சில பாடல்கள் அனைத்து ரசிகர்களின் உள்ளத்திலும் நீடூடி வாழ்வதோடு, எத்தனை ஆண்டுகள் சென்றாலும் காலத்துக்கு சவாலாய் நின்று, அசராமல் வென்று கொண்டிருக்கும். அப்படிப்பட்ட பாடல்களில் ஒன்றுதான் மெல்லிசை மன்னர்களின் இசைக் காவியமான "புதிய பறவை" படத்தின் "உன்னை ஒன்று கேட்பேன்".

பிரமாதமான முன்னிசையை... எவ்வளவு அருமையாக ரசித்து பாடலின் ரிதம் கொஞ்சம் கொஞ்சமாக அழகு சேர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதை அறியலாம்..

கைதட்டல் கொண்டு துவங்கும்... Rock 'n Roll ரிதம் என்று சொல்லாமல் சொல்லப்படுகிறது.

கைதட்டலுடன் பல கைகள் சேர்ந்து கொள்ள பாடலில் உற்சாகப் பெருக்கம்...

இரண்டு முறை கைதட்டல்கள் முடிந்து பியானோ 'பந்தா' வாகத் தொடங்கும். பியானோவில் இடது கை யின் சப்போர்ட், வலது கை யின் அருமையான மெலடி.... இன்னும் ரிதத்திற்குள் செல்ல வில்லை.... இதுவரை வந்தது ரிதத்திற்கே ஒரு Prelude!

சரி பியானோ சூடு பிடித்தாகிவிட்டது.... டிரம்ஸ் துவங்க வேண்டியது தானே ?! அதை அவ்வளவு சீக்கிரம் செய்து விடுவாரா? கைதட்டல்+பியானோவுடன் பாங்கூஸ் சேரும். பிறகு 'மரக்காஸ்' (Maracas)... 'சிக் சிக்' என்று அதன் சேர்க்கை கச்சிதமாகப் பொருந்தும்.

இதற்குப் பிறகு தான் டிரம் ரிதம்... 'சிம்பால்' பளிச்சென கேட்க, ரோலிங் டிரம், 'Rock 'n Roll' க்குப் புது இலக்கணம் வகுத்துக் கொண்டு! பியானோ Higher Octave க்கு அழகாகப் பயணிக்கும். மிக அருமையாக பியானோ பல மெலடி திருப்பங்களைப் பெற்றுக் கொண்டு ஒரு அழகான 'குட்டி' தீர்மானத்துடன் சுகமாக முடிய...

நடிகர் திலகம்.... "PLEASE" என்று சொல்ல... சுசீலா அவர்கள் பல்லவியைத் தொடங்குவார்.

என்ன பிரமாதாமான முன்னிசை.... Loops, Rhythm Fillings போன்ற இன்றைய 'Composing Terminologies' களை என்றோ அநாயாசமாகச் செய்து விட்டு, ரசிகர்களை நல்லிசையிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியிருப்பவர்கள் மெல்லிசை மன்னர்கள்!

உன்னை ஒன்று கேட்பேன்
உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்


(உன்னை..)

இரண்டாம் முறை பல்லவி வருகையில் பின்னணியில் Strings அற்புதமாக இசைக்கும்!


முதல் இடையிசை பியானோ கொண்டு - ரிதத்துடன் பாங்கூஸ் சேருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டே வரிகள்... அதற்கு எப்படி ஒரு அழுத்தம்... அவை மட்டுமே முதல் சரணத்தின் வரிகள்.

காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை

இரண்டாம் முறை "காதல் பாட்டு பாட" எனும் போது அருமையான சங்கதிகள் கொண்டு, வேறு விதமாக வழங்கப் பட்டிருக்கும்.

தாலாட்டு பாட தாயாக வில்லை

பின்னணியில் இயங்கும் Strings இல் அப்படி ஒரு சுகம். எப்படித்தான் இவ்வளவு தூரம் அனுபவித்து இசைத்தாரோ ?! Emirates Airlines இல் சுகமாய் பறந்துகொண்டிருப்பனுக்கு Push Back செய்து, கழுத்து வரைப் போர்த்திவிடுவது போன்ற சுகம்! ஆம், மெல்லிசை மன்னர்களின் கைகளில் இசை ஒரு சுகவாசி!

சாக்ஸ்ஃபோன் கொண்டு துவங்கி, குழலும் வயலின் கொண்டு முடிந்து பட்டையைக் கிளப்பும் இரண்டாம் இடை இசை! பாடலின் ரிதம் பாங்கூஸாக மாறும்.

நிலவில்லா வானம்
நீரில்லா மேகம்
பேசாத பெண்மை
பாடாது உண்மை

கண்ணை மெல்ல மூடும்
தன்னை எண்ணி வாடும்
பெண்ணைப் பாடச் சொன்னால்
என்ன பாடத் தோன்றும்


மூன்றாம் இடையிசையும், சரணமும் இரண்டாவது போன்றே அமைந்திருக்கும்...

இங்கு காணப்படும் எழுத்துக்கள், பாடலின் இனிமையை கோடியில் ஒரு பங்கைக் கூட வெளிப்படுத்த இயலாத காரணத்தால் பெருந்தோல்வியைத் தழுவி நிற்கின்றன...

இப்பாடலைக் கேட்டு முடித்தவுடன் உறுதியாகும் கருத்து ஒன்று -

நந்தி தேவனின் நாதமும், சரஸ்வதி வீணையின் கீதமும் தங்களை மிகச்சிறப்பான முறையில் வெளிப்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுத்த மானுட ஜீவன் தான் மெல்லிசை மன்னர்!

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:21 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Mar 10, 2008 11:34 am    Post subject: Reply with quote

BRILLIANT WORK, Ram!
thanks.


Serene, Slower, emotive version -2 of the same musical with less orchestration is my favorite along with Distinguished paartha .......

I cuddle up to unruffled Susheela often.

PUDHIYA PARAVAI is an amazing album with aaha mella nada...,engey nimmadhi etc..
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Thu Mar 13, 2008 1:35 pm    Post subject: Reply with quote

[size=18]Dear Ram

Though I had read your posting two days back, I wanted to read it for a few times before posting my reply.

It was indeed a wonderful writing, as you always do !

You know we had enjoyed this song millisecond by millisecond, many times, even over phone and myself, in turn was sharing with other friends whenever there were opportunities.

An amazing number whose quality can never be described by any amount of worlds, by any human being.

As Venkat has said, the slow version too is of its own class. As I was discussing with you , in this version, in the beginning of the song, the whole essense of the song will be expressed by just 4 key-strokes on Piano by MSV.

Your last line also confirms that MSV is the channel through whom
the Music expresses its unmeasurable lengths, breadths and depths ! And that is the undisputed opinion of all rasikas, as we could see from their postings.

What else can we say ?

Continue your matchless writings as usual.

With love
RAMKI.
[/size]
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Fri Mar 14, 2008 10:43 am    Post subject: Reply with quote

Ram , It’s a complete song with all participants excelling ! The cheer in Nadigar Thilagam’s face , the dress code for the evening party, the nervous but charming Saroja Devi, the previous bit sung by the legendary Henry Daniel , cute picturisation. Nobody can handle the trumphet or Piano the way NT did . Difficult to believe that the same man also played a classical instrument like Nadaswaram with the perfection of a seasoned player ! One of the evergreen hits of P.Susheela too. The speed of Piano rapidly picks up after the pallavi to rush to anupallavi ! Amazing song, brilliant tune, orchestration & splendid acting . A priceless jewel .
Another rock n roll special Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Mar 20, 2008 1:17 am    Post subject: Reply with quote

ராம், இந்த பாடலை பற்றி நீங்கள் எழுதி இருப்பது இந்த பாட்டை போலவே மிகவும் அழகாக இருக்கிறது. Thanks a lot. இந்த பாடலை கேட்கும்போது நாம் மனதால் அந்த பாடலின் காட்சியிலே ஒருவராக இருப்பது போல தோன்றும். இந்த பாடலுக்கு அப்படி ஒரு மகத்துவம். இப்படி எத்தனையோ மெல்லிசை மன்னரின் பாடல்கள் நம்மை மெய் மறக்கச் செய்யும். இவர் நமக்கு அளித்துள்ள இந்த அற்புதமான பாடல்களுக்கு நாம் எத்தனை ஜென்மங்கள் எடுத்து நன்றி செலுத்தினாலும், போதவே போதாது.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Mar 23, 2008 10:30 am    Post subject: Reply with quote

Thanks everyone for the replies!

Next Part is on its way !!!

Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group