"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

PAATTUKKU PAATTEDUTHU ( PADAGOTTI )

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Feb 23, 2008 5:16 pm    Post subject: PAATTUKKU PAATTEDUTHU ( PADAGOTTI ) Reply with quote

தமிழிசையை மூன்று வகையாக பிரிக்கலாம்….பக்தியிசை, பாரம்பரிய அல்லது கர்நாடக இசை & கிராமிய இசை…

கிராமிய இசையை எடுத்துக்கொண்டால் அதில் பல வகை. கோவிலில் பக்தியுடன் பாடுவது ஒரு வகை
நய்யாண்டி மேளம் , வில்லுப்பாட்டு , லாவனி , கப்பல் பாட்டு, புறா பாட்டு, சங்கு வாத்தியம்.
கனியன்….என்று பொதுவாக பிரிக்கலாம்

இதில் குளவியிசை என்றும் ஒரு வகை உண்டு….வயலில் வேலை செய்யும் பெண்கள் தங்களின் வேலை
பளு தெரியாமல் இருக்க ஒரு பாடலை பாடுவார்கள். சில நேரங்களில் மனம் போனபடி பாடுவார்கள்…
அதாவது தங்கள் சொந்தக்கவலையை மறப்பதற்கு அல்லது யாரவது புதியவர்கள் வந்தால் அவர்களைப்பற்றி
பாடுவர். அதை கேட்பவர்களும் கொன்ஞம் பணம் கொடுத்துவிட்டுச்செல்வர்…

இந்த வகுப்பில் இசைப்பாட்டயும் ( வழக்கு தமிழில்.. எசபாட்டு ) சொல்லலாம்.


ஒருவர் முதலில் ஒரு கருவை மைய்யமாக கொண்டு துவக்குவார்…..
அதிகாலை நேரம்…அல்லது இரவு சமயம் ஊரே அமைதியாக இருக்கும் தருணத்தில்
இந்த குரலானது அடுத்த கிராமம் வரை கேட்க்கும்….ஏன் ? நாம் விடிகாலயில்
வெகு தூரத்தில் ஓடும் ரயிலின் சப்தம் கேட்ப்பதில்லயா ! அது போலத்தான் இதுவும்…
மிக எளிதாக பக்கத்து ஊருக்கு இவர் பாடுவது போய்ச்சேரும்….
அந்த ஊரை சேர்ந்தவர்கள் விழித்திருந்தால் உடனே தன்னுடய எண்ணங்களை
பதிலாக பாடுவார்கள்……
அதாவது இரண்டாவதாக பாடுபவர்….பதில் சொல்வது போல அமைந்திருக்கும்….

இதற்கு முதலில் பாடியவர் மறுபடியும் பாடுவார்…..இப்படியே ஒருவரையொருவர்
இப்படியே இருவரும் மாற்றி மாற்றி பாடிக்கொண்டு முடிவில் ஒருமித்த கருத்தோடு
பாடலை முடிப்பார்கள்….

எசைபாட்டின் ஒரு அம்சம் என்ன வென்றால்…. அது வெரும் குரல் மட்டும் தான் ஒலிக்கும்
தாளமாக எதையும் இசைக்கமாட்டார்கள்…. இயற்க்கை தரும் சப்தங்களே பின்னணியிசையாக அமையும்…
குயில் …அல்லது காக்கை….பகலிலும்…..ஆந்தை….அல்லது கோட்டான் சப்தம்..தான்…இரவில்…அமைந்திருக்கும்….

ஆப்பிரிக்கா கண்டத்தில் பழங்குடியுனர் டிரம் இசை மூலமாக பல தூரத்திலிருந்து செய்தியினை
அனுப்புவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று….

1985இல் நடிகர் திலகமும் பாரதிராஜாவும் முதல் முதலாக சேர்ந்த முதல் மரியாதை படத்தில் வரும்
பூங்காற்று திரும்புமா என்ற பாடலும்….. பாட்டுச்சத்தம் கேட்கலயா என்ற பாடலும்..
ஏராத மலைமேலே என்ற பாடலும் எசைபாட்டினை கருவாகக்கொண்டு இசை ஞயானி இளையராஜா
மிகவும் அற்புதமாக இசை அமைத்திருப்பார்….. மிக சிறந்த ஒரு உதாரணம் இந்த பாடல்கள்


இதை நம் மெல்லிசை மன்னர்கள் 1964 வருடம் மக்கள் திலகத்தின் படகோட்டி படத்தில் மென்மையாக புகுத்தியுள்ளன்ர்

மீனவ சமுதாயத்தை சேர்ந்த எம்.ஜி.யாரும் சரோஜாதேவியும் காதலர்கள்…
ஆனால் இருவரும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள்….இரு கிராமதிற்கும் பகை இருப்பதால் அவர்கள் இருவரும் பிரிக்கப்படுகின்றனர்…… ஒருவரை ஒருவர் கூட பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடுகிறது….இந்த பிரிவானது இருவரையும் மிகவும் வாட்டுகிறது…..

ஒரு இரவு நேரத்தில் ஸரோஜாதேவி மக்கள் திலகத்தை நினைத்து பாடுவது போலத்தான் பாடல் துவங்கும்…..

இசைபாட்டு வகையில் அமைந்திருக்கும் இந்த பாடல்

பாட்டுக்கு பாட்டெடுத்து நான் பாடுவதை கேட்டாயோ
துள்ளிவரும் வெள்ளலையே நீ போய் தூது சொல்லமாட்டாயோ


மறு கிராமத்தில் எம்.ஜி.யாரும் உறக்கமில்லாமல் ஒருவித தவிப்பான மனநிலையில் இருப்பார்….
அவரும் இதற்கு பதில் சொல்வது போல் பாடுவார்…

கொத்தும்கிளி இங்கிருக்க…கோவைபழம் அங்கிருக்க
தத்திவ்ரும் வெள்ளலையே நீ போய் சேதி சொல்லமாட்டாயோ



மறுபடியும் சரோஜாதேவி :
இளவாழம் தண்டாக…எலுமிச்சம் கொடியாக…இருந்தவளை கைபுடிச்சு….இரவெல்லாம் கண் முழிச்சு
எண்ணாத ஆசையிலே என் மனசை ஆடவிட்டான்…ஆட விட்ட மச்சானே…ஓடம் விட்டு போனானே
ஓடம் விட்டு போனானே….ஹொ..ஹோ..ஹோ.. ஓடம் விட்டு போனானே…


ஊரெங்கும் தூங்கயிலே நான் உள்மூச்சு வாங்கயிலெ ஹொய்
ஒசையிடும் பூங்காறே நீ தான் ஓடிப்போய் சொல்லிவிடு
!!
( இந்த வரிகளை கேட்க்கும்போது எனக்கு வைரமுத்து இதைக்கொண்டே அவர் பூங்காற்று திரும்புமா
பாடலை எழுதினாரோ என்ற எண்ணம் தோன்றுகிறது )

பல இடங்களில் டி.எம்.எஸ் அவர்களும் சுசீலாவும் போட்டி போட்டுக்கொண்டு பாடுவது போல் தொன்றும்

மின்னலாய் வகுடெடுத்து…..மேகமாய் தலைமுடித்து….பின்னலாய் ஜடைபோட்டு…என் மனசை எடைபோட்டு
என்று டி.எம்.எஸ். உச்சஸ்தாயியில் பாடும்போது நாம் நம்மையே ஒரு கணம் பாடலின் மெலடியில் மறந்துவிடுவோம் !!

இப்படி இருவரும் மாறி மாறி பாடிக்கொண்டே தன்னை மறந்து மெதுவாக நடந்து செல்வர்….

ஆசைக்கு ஆசைவச்சேன்…நான் அப்புறந்தான் காதலிச்சேன்…
சாட்சி சொல்ல சந்திரனே நீ போய் தூது செல்லமாட்டாயோ


மறுபடியும் சரோஜாதேவி :
வாழைப்பூ திருயெடுத்து….வெண்ணயிலே நெய் எடுத்து…
ஏழை மன குடிசையிலே ஏத்தி வெச்சேன் ஒரு விளக்கை
ஏத்தி வச்ச கைகளிலே என் மனச நான் கொடுத்தேன்
நெஞ்ஜு மட்டும் அங்கிருக்க ….நான் மட்டும் இங்கிருக்க…..
நான் மட்டும் இங்கிருக்க…..ஹொய். ஹோ. ஹோய்… நான் மட்டும் இங்கிருக்க


இப்போது எம்.ஜி.யார்.
தாமரை அவளிருக்க…இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்ல சந்திரனெ நீ போய் தூது செல்லமாட்டாயோ


முடிவில் இருவரும் ஒரு கோவிலின் முன்பு சந்திப்பது போல முடியும்…
தங்களின் மன வேதனையை தீர்த்தது வேறுயாரும் இல்லை… அது இவர்களே என்று
உணரும் போது இருவரும் மகிழ்ச்சிய்டன் தழுவிக்கொள்வார்கள்….

பாடல் முடியும் தருணத்தில் டீ.ஏம்.ஏஸ். மீண்டும் பல்லவியை பாட,
பிண்ணனியில் இசைகுயில் ஸுசீலா அவர்கள் ஹம்மிங்க் செய்வது போல முடித்திருப்பார்கள்
அருமையான ஒரு இசைஅமைப்பு அது.

பாடல் முழுவதும் மிக மிக குறைந்த கருவிகளுடனும்….இயற்க்கை சப்தங்களைக்கொண்டும்
அமைந்த ஒரு பாடல் இது. ஒரு தாளத்திற்காக தபேலாவும் , உடுக்கை போன்ற வாத்தியமும்
தான் ஒலிக்கும் பாடல் முழுவதும்…..ஆனால் திடீர்ரென்று அங்கங்கே ரிதம் கிடார் சப்தமும்
கொடுப்பது தான் என்னை மிகவும் வியக்கவைக்கிறது !!

விருத்தம் போல மிகவும் மெதுவான நடையில் அமைக்கப்பட்ட இந்த பாடல்…
எம்.ஜி.யாரின்… பாடல்களிலேயே மாறுபட்டது….. சோகமான சாயலில் அமைந்த பாடல்களை
விரல் விட்டு எண்ணிவிடலாம் !!

வாலி எழுதிய பாடலான இது ஒரு அழகான கவிதை போல அமைந்திருக்கும்
அதிலும் அவர் …
தாமரை அவளிருக்க…இங்கே சூரியன் நானிருக்க
சாட்சி சொல்ல சந்திரனே நீ போய் தூது செல்லமாட்டாயோ


இந்த வரிகளை அவர் புகுத்தியுள்ளது இரு அர்த்தம் கொண்டது !!
சந்திரன் என்பது எம்.ஜி.யாரையும்….. சூரியன் என்பது அவரின் அப்போதய அரசியல்
கட்சியுன் சின்னம் என்பதை குறிப்பிடும் இடத்தில் திரை அரங்கத்தில் பெரும் கை தட்டல் கேட்கும்..

1970இல் இதே இசைப்பாட்னை கருவாகக்கொண்டு நமது மெல்லிசை மன்னர் மீண்டும் ஒரு பாடல் அமைத்தார்
அது பொனூஞல் என்ற படத்தில் நடிகர் திலகமும்…உஷா நந்தினியும் சேர்ந்து பாடுவது….

நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டும்…. என்ற பாடல் தான் அது

படகோட்டி மெல்லிசை மன்னர்களின் இசை பயணத்தில் ஒரு மைல் கல்

முன்னர் நமது பேராசிரியர் திரு ராமன் அவர்கள் …நான் ஒரு குழந்தை என்ற பாடலின் சிறப்பை பற்றி மிகவும்
அற்புதமாக எழுதினார்….

இப்படத்தின் எல்லா பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றது…இன்றும் பேசப்படுகிறது…
நாளையும் பேசப்படும்..
Back to top
View user's profile Send private message Send e-mail
s ramaswamy



Joined: 09 May 2007
Posts: 38

PostPosted: Sun Feb 24, 2008 9:29 am    Post subject: Reply with quote

Hi Balaji,

Wonderful writing about a style of song with which lifelong city dwellers like me are not aware of. Like you have correctly said "Padagotti" was a milestone in VR duo's glittering career.

This "odam" song can be considered the mother of all this type of songs in TFM history. Right through the song the BGM gives a clear impression that it's sung by boatmen and women. That's the ambience brought forth by the genius of the maestros.

And what a way both TMS and PS have sung it! The place where you have mentioned TMS joins the song - Minnalai vagideduthu - always gives me goose bumps. What a song! And the PS solo "Ennai Eduthu Thannai Koduthu" is another fabulous song of this boat song genre. Hats off to VR and Vaali.

Considering that "Padagotti" preceded the National award winning Malayalam film "Chemmeen" by a couple of years, the songs seem to be like a torch-bearer for boat songs in South Indian films.

Ramaswamy
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group