"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KAALAMAGAL KANN THIRAPPAAL CHINNAYYA...

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Oct 12, 2007 10:38 pm    Post subject: KAALAMAGAL KANN THIRAPPAAL CHINNAYYA... Reply with quote

என்னை மிகவும் பாதித்த ஒரு பாடல் இது ( எம் எஸ் வி யின் எந்தப்பாடல்தான் நம்மை பாதிக்கவில்லை ?)

பாடல் : காலமகள் கண் திறப்பாள் சின்னையா..
படம் : ஆனந்தஜோதி
எழுதியவர் : கவிய்ரசர்
இசை ; மெல்லிசை மன்னர்(கள்).


இந்தப்படம் வந்த நாளிலிருந்து இன்று வரை ( ஏன், என்றுமே தான்)
என்னை மிகவும் பாதித்த பாடல் இது.

துவண்டு இருந்த நேரங்களில் இப்பாடல் கேட்டால் அது அளிக்கும் இதம் - ஆஹா அற்புதம் !


கால மகள் கண்திறப்பாள் சின்னையா
நாம் கண்கலங்கிஇ.. கவலைப்பட்டே என்னையா
நாலு ப்க்கம் வாசல் உண்டு நில்லையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா சொல்லையா

இந்த பல்லவியைக்கேட்டவுடனேயே மனக்கவலை தவிடுபொடி !
அதிலும், "நாம் கண்கலங்கி இ இ இ.. " என்று மாஸ்டர்
கொடுக்கும் சங்கதியில் உள்ளம் உருகிவிடும்.

அதே போல் " அதில் நமக்க்கும் ஒரு... சொல்லய்யா " என்று
மன்னர் தரும் ப்ருகாவில் நிம்மதி வர ஆரம்பித்துவிடும் !!

Pl remember only pallavi is over so far !


சரணம் 1 :

சின்னச்சின்ன துன்பமெல்லாம் எண்ண எண்ண கூடுமடா
ஆவதெல்லாம் அகட்டுமே அமைதிகொள்ளடா

"துன்பமெல்லாம் ." என்று ஒரு இறக்கம், ஏற்றம் ... (என்ன ஒரு சுகம்!)

அத்துடன், "அமைதிகொள்ளடா.." என்னும் போது, உங்கள் மனம்
ஒரு தெளிவு நிலைக்கு வந்துவிடும்.

ஒரு பொழுதில் இன்பம் வரும் மறுபொழுதி துன்பம் வரும்
இருளிலும் ஒளி இரூக்கும் ஏக்கம் ஏனடா
தம்பி தூக்கம் கொள்ளடா
தம்ம்ம்பி தூக்கம் கொள்ளடா ..( காலமகள்)

இப்பொழுது நிஜமாகவே ' இருளில் ஒரு ஒளி தெரிய ஆரம்பிக்கும்".

என்ன ஒரு உயிரூட்டும் வரிகள் ! உணர்வுகளின் ஜீவனைத்தொட்டவர் உலகில் எம் எஸ் வி ஒருவரே !!


சரணம் 2 :

கல்லிருக்கும் தேரைக்கெல்லாம் கருணை தந்த தெய்வம்
கனியிருக்கும் வண்டுக்கெல்லாம் துணையிருந்த தெய்வம்
நெல்லுக்குள்ளே மணியை நெருப்பிலே ஒளியை
உள்ளுக்குள்ளே வைத்த தெய்வம் உனக்கு இல்லையா
தம்பி நமக்கு இல்லையா தம்..பி நமக்கு இல்லையா

(காலமகள்)

இந்த வரிகளைக் கேட்டதும், உங்கள் கவலைகள் காணாமல் போக
நம்பிக்கை முழு ஒளி பெறும்.

இறுதியில், சுசீலாவின் ( எம் எஸ் வி சொல்லிக்கொடுத்தபடி ) அருமையான ஹம்மிங் :

ஆ ஆஆ ஆஆ ஆ... ஆ அ அ ஆ ...
ஆ அ அ ஆஆ.. ஆ அ அ ஆஆ...

என்று தேன் ஒழுக "தாலாட்டு" இசைக்க, அய்யா. சாமி.. என்ன சத்தத்தையே காணும், ஓ.. தூங்கிவிட்டீரா ? தூங்குங்கள்,
நிம்மதியாகத் தூங்குங்கள் !!

"தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே
தொடரும் கனவுகள் தொடரட்டுமே .." என்ற கண்ணதாசன் - விஸ்வநாதனின் மற்றொரு பாடல் எண்ணத்தில் வர ...
அய்யா .. தூங்குங்கள் !

இந்த " காலமகள்" பாடலை என் நண்பர் தியாகராஜனிடம் நான் பாட அவர் கண் கலங்க .. .... அவரையும் மிகவும் பாதித்த பாடலாம் இது !!

சுபபந்துவராளி ராகத்தில் அமைந்த (அமைக்கப்பட்ட் அல்ல) இப்பாடலை கேட்பவரை நம்பிக்கை ஒளியூட்டி, அமைதிப்படுத்துவார் மெல்லிசை மன்னர், அவரது தெய்வீக இசையால் !

வாழ்க எம் எஸ் வி பல்லாண்டு.

ராம்கி

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.


Last edited by msvramki on Sat Oct 13, 2007 11:10 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Sat Oct 13, 2007 10:33 am    Post subject: Reply with quote

ராம்கி அருமையான விமர்சனம்
நெஞ்சுருக்க பாடிய சுசீலா பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம்

சொல்லிக்கொடுத்தாலும் அதை அழகான உணர்ச்சிபூர்வமாக கொண்டுவந்தவர்களில் முதன்மை வாய்ந்தவர் சுசீலா
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Oct 13, 2007 11:06 am    Post subject: Reply with quote

YES ... RAJESH

சுசீலாவின் குரலினிமை இதில் நிச்சயமாக முக்கியமானது.
அவரின் பரம விசிறிகளில் நானும் ஒருவன்.

அவ்ர் பற்றி என் விமரிசனத்தில் குறிப்பிடாதது ஒரு சிறிய slip தான்.
Intentional ஆக விடப்படவில்லை. பிசகுக்கு மன்னிக்கவும்.

நன்றி.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sat Oct 13, 2007 11:37 am    Post subject: Reply with quote

'காலமகள் கண் திறப்பாள் சின்னையா' அருமையான அலசல் ராம்கி அண்ணா. எப்போது கேட்டாலும் மனதை மயக்கக்கூடிய, உருக்கக்கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் வரிகளைப்பற்றியும் இசையைப்பற்றியும் நீங்களே அற்புதமாக விளக்கி விட்டீர்கள்.

அந்தக்கால கட்டத்தில் பாடல் ராசிக்கார நடிகைகளில் 'தேவிகா'வும் ஒருவர். சாவித்திரி, விஜயகுமாரி, சரோஜாதேவி, பத்மினி என்று பலர் இருந்தபோதிலும், அவர்களுக்காக சுசீலா பல பாடல்களை பாடியிருந்தபோதிலும், தேவிகாவுக்கு அமைந்தவை அனைத்தும் 'பளிச்', பளிச்' ஸ்பெஷல் பாடல்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை
பாலிருக்கும் பழமிருக்கும்
சொன்னது நீதானா
முத்தான முத்தல்லவோ
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே
நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு...
ஓகோ கோ ஓடும் எண்ணங்களே
அலையே வா அருகே வா
உறவு என்றொரு சொல்லிருந்தால்
கங்கை கரை தோட்டம் (கே.வி,.எம்)

இப்படி தனிப்பாடல்கள் அல்லாமல், டூயட் பாடல்களும் ஏராளம்...

இரவும் நிலவும் வளரட்டுமே
வாழ நினைத்தால் வாழலாம்
அத்திக்காய் காய் காய் (கவியரசரின் வார்த்தை ஜாலங்கள்)
அமைதியான நதியினிலே ஓடும்
பனியில்லாத மார்கழியா....

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி தேவிகாவுக்கென அற்புதமாக அமைந்த பாடல்தான் நீங்கள் விளக்கிய 'காலமகள் கண்திறப்பாள்' என்ற நம்பிக்கையூட்டும் பாடல்.

கவிஞர் வைரமுத்துவுக்கு மிகவும் பிடித்த பாடல் இது. எப்படி கவியரசரின் இன்னொரு பாடலான 'மயக்கமா கலக்கமா' பாடல் வாலியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியதோ அதுபோல வைரமுத்துவின் வாழ்க்கையில் திருப்பு முனையாய் அமைந்தது 'காலமகள் கண்திறப்பாள்' பாடல். (சக கவிஞர்களுக்கே திருப்புமுனைப் பாடல்களைத்தந்த அந்த கண்ணதாசனை என்ன சொல்லி பாராட்டுவது..!!!!)

சுசீலாவுக்கு நடந்த பாராட்டு விழாவில் வைரமுத்துவே சொன்ன தகவல் இது. அப்போது அவர் சொன்னது... "அம்மா, இந்தப்பாடலில் அடகு வைக்கப்பட்ட என்னுடைய காதுகள் இன்னும் மீட்கப்படாமலேயே இருக்கின்றன".
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Oct 13, 2007 4:54 pm    Post subject: Pick a Song and Analyze! Reply with quote

DEAR SARADA Madam,
As is true of your calibre, both in depth and spread on cine songs, this time too you have brought off a list fortifying the information on "DEVIKA NUMBERS" It has just been my everlasting astonishment as to how PS has lived those powerful moments of vibrant display sustaining the voice-fidelity of the actress concerned. Also, as you have suggested, Devika has had the indlible stamp of class in her song masterpieces by MSV. Certainly we can have a separate thread to recall songs 'ARTISTE-WISE' so that the younger members can have a better grasp how MSV has immortalized the songs, singers, artistes- on and off the screen besides the movies themselves.
May I draw your kind attention to 2 items in your present list ?

1 Enna ninaththu ennai azhaiththayo -Nenjil ore aalayam may be added. 2 Paalirukkum pazhamirukkum also has the silken touch of MSV's romantic humming. [ Somehow MSV's name gets left even from his most devout fans ] I am sure both these were inadvertent slips. If, EVEN we people do not acknowledge him who else would? I trust the spirit of my suggestion is well taken.
Warm regards Prof.K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Sun Oct 14, 2007 11:54 am    Post subject: Reply with quote

excellent list madam.but what about the great poo uranguthu
Back to top
View user's profile Send private message
Baskar CS



Joined: 19 May 2007
Posts: 203

PostPosted: Sun Oct 14, 2007 11:57 am    Post subject: Reply with quote

oh i am sorry ithought only suseela song had been taken up without knowing that it was devika numbers chosen.

i also request our fellow members to take up the song en annai seitha pavam
Back to top
View user's profile Send private message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sun Oct 14, 2007 12:35 pm    Post subject: Reply with quote

Baskar CS wrote:
oh i am sorry ithought only suseela song had been taken up without knowing that it was devika numbers chosen.

i also request our fellow members to take up the song en annai seitha pavam


'பூ உறங்குது' பாடல் தாய் சொல்லை தட்டாதே படத்தில் சரோஜாதேவிக்காக கே.வி.மகாதேவன் இசையில் பி.சுசீலா பாடியது.

'என் அன்னை செய்த பாவம்' சுமைதாங்கியில் தேவிகாவுக்காக மெல்லிசை மன்னர்கள் இசையில் எஸ் ஜானகி பாடியது.

இரண்டு பாடல்களுக்குமே நடித்தவர்கள் வேறு, பாடியவர்கள் வேறு, இசையமைத்தவர்கள் வேறு.

இரண்டுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை கவியரசர் கண்ணதாசன் எழுதியது என்பதுதான்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Oct 14, 2007 7:27 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்கி

உந்களுக்கு ஒரு வேண்டுகோள்

தயவுசெய்து 15 நாட்களுக்கு ஒரு முறையாவது பதிவு செயுந்கள்

இந்த படத்தில் எந்த பாடலை விடுவது , எதை தேர்ந்தெடுப்பது ??

ஒவ்வொன்றும் மணியல்லவோ !!

நேட்று தான் இந்த படத்தை பார்தென் . ஒரு நல்ல சமயத்தில் வரும் பாடல் இது

உங்கள் தமிழ் நடயை பார்த்து நானும் முயர்சி செய்கிறென் ! Very Happy

மிகவும் அனுபவித்து எழுதியுள்ளீர்கள் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் . ஏன் என்றால் ஒரு மென்மயான மெட்டு . அதே சமயம் ஆதரவான வார்தைகள்.

சுசீலாவின் அற்புதமான குரல் . அவருக்கு இணை யாரும் இல்லை
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Mon Oct 15, 2007 3:43 pm    Post subject: Reply with quote

Another classic song of P.Susheela for Devika by our Beloved MSV is, "Nenjathiley nee netru" from the film SHANTHI. This song is always my favourite ahead of many other songs. The whistling given for the song has taken the song to greater heights. What a foot tapping melody.

MSV should possess the copyright for not his songs alone, but for the concept of MELLISAI itself. Any melody song is a copy of MSV song only.


P. Sankar.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Oct 18, 2007 4:12 am    Post subject: Reply with quote

Dad,

I know this song has always been your personal favourite. You have given a perfect description on the song. Soothing Lyrics and Soothing Tune - really a gem! More writings please....

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
s ramaswamy



Joined: 09 May 2007
Posts: 38

PostPosted: Sat Feb 16, 2008 11:48 pm    Post subject: Reply with quote

Hi,

Enakku migavum piditha paadal ithu. Suseela ullam uruga paadiyiruppar. Antha aazhamum azhuthamum thaan ippodulla paadalgalil illaye, naan ketta mattum.

Vairamuthuvin manaivi ponmani vairamuthu oru murai suseelavai interview pannidum pozhudhu intha paadalai patri kettirukkirar. kaalilirukkum theraikkellam karunai thantha deivam ..endra varigalai migavum rasithu solliyirukkirar.

Intha paadal subapanthuvarali raagathil amanidadu endru theriya vandadu. Paalum Pazhamum padathil varum "Intha Naadagam Antha Medayil" endra paadalum ithe ragathil amaindaduthano?
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Feb 17, 2008 3:27 pm    Post subject: Reply with quote

I wud like to add some more MSVR - DEVIKA starrer...
The songs of
Sumai Thangi
Idayathil nee
Vazhkai padagu
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group