"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Thanga Thoniyile -Ulagam Sutrum Vaaliban

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Mon Feb 11, 2008 11:09 am    Post subject: Thanga Thoniyile -Ulagam Sutrum Vaaliban Reply with quote

உலகம் சுற்றும் வாலிபன் ‍
எத்தனையோ படங்களுக்கு மெல்லிசை மன்னர் இசையமைத்திருந்தாலும்
உலகம் சுற்றும் வாலிபனுக்கு எம்.ஜி.ஆர் இவர் உயிரை வாங்கத்தான் செய்தார். ஆம் எத்தனை மெட்டுக்களை போடச்சொல்லியிருப்பார் . இவரும் சளைக்காமல் எவ்வளவு அருமையான மெட்டுக்களை காண்பித்திருப்பார் .. எல்லாமே எதற்காக .. இன்று இதோ இப்பொழுது கூட இந்த படத்தைப் பற்றியும் பாடல்களைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்கிறோமே ... அதற்க்குத்தான் .. ஆம் ஒவ்வொரு பாடலும் ஆழ்கடலில் மூழ்கி எடுத்த முத்து .. சில படங்களில் சில பாடல்கள் நமக்கு பிடிக்கும் ஆனால் இதில் எல்லாமே நமக்கு பிடிக்கும் .. படத்தில் இடம்பெறாமல் போன பாடல்கள் கூட நமக்கு பிடிக்கத்தானே செய்கிறது காரணம் மெல்லிசை மன்னரின் இசை ..

ஆண் குரல்களில் தனக்கென்று ஒரு பாணியை கொண்டவர் யேசுதாஸ். இவர் பின்னாளில் எவ்வளவோ பாடல்களை எத்தனையோ இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும் மெல்லிசை மன்னரிடம் பாடிக்கொண்டிருந்த காலத்தில் தான் அவர் குரல் பாவத்துடன் சேர்ந்து மெருகேறியது என்று சொன்னால் மிகையில்லை. பல விதமான பாடல்களை யேசுதாஸ் குரலில் தந்து நம்மையும் இன்பத்தில் ஆழ்த்தி யேசுதாஸின் குரலுக்கும் மெருகேற்றி எத்தனை பெரிய காரியத்தை செய்துவிட்டு இன்றும் குழந்தைப்போல் இயல்பாக பழகிக்கொண்டிருக்கிறார்..

இசைக்குயில் சுசீலா பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. எந்த பாடலாயிருந்தாலும்
உணர்ந்து பாவத்துடன் பாடுவதில் வல்லவர். இந்த பாடலும் அதே போல் தான்

கண்ணதாசனுக்கு பின் மெல்லிசை மன்னர் அதிகம் பணிபுரிந்த கவிஞர் வாலி அவர்கள். வார்த்தை ஜாலத்துக்கு சொந்தக்காரர். இதோ இந்த பாடலிலும் என்ன அழகாக தமிழில் குழைகிறார்.

ஆம் பாடல் இது தான்
"தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகே " இனிமையான காதல் பாடல் தான். இன்று வெளி நாட்டில் படம்பிடிப்பது ஒன்றும் பெரிதல்ல ஆனாலும் அன்றே எம்.ஜி.ஆர் எவ்வளவு அழகாக படகில் அதுவும் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்க்காங் என அழகான இடங்களில் அற்புதமாக படமாக்கியிருப்பார்.

60'களின் முடிவில் 70'ன் ஆரம்பத்தில் திரையுலகிற்கு கிடைத்த அழகான கதாநாயகி
திருமதி சந்திரகலா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடா என எல்லா மொழிகளில் நல்ல பாத்திரங்கள் செய்து பின் திருமணம் புரிந்து திரையுலகை விட்டு விலகியவர். இவர் தான் உலகம் சுற்றும் வாலிபனில் பிரதான நாயகி.

என்றுமே ச‌லிக்காத பாட‌ல் இது . பார்த்து கேட்டு ம‌கிழ்வோமோ.. மெல்லிசை ம‌ன்ன‌ர் ந‌ம்மையும் தோனியில் கொண்டு செல்கிறார் த‌ம் இசையால்


தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
நீ கனவுக் கன்னிகையோ இல்லை காதல் தேவதையோ

வண்ணப் பாவை கன்னித் தேனை கன்னம் என்னும்
கிண்ணம் கொண்டு உண்ணச் சொன்னாளோ
தஙத் தோணியிலே தவழ்ஹ¤ம் பொன்னழகே
நான் கனவில் வந்தவளோ உன் மனதில் நின்றவளோ

மின்னல் கோலம் கண்ணில் போட யார் சொன்னதோ
கோலம் போடும் நீலக் கண்ணில் யார் நின்றதோ
மென்மை கொஞ்சும் பெண்மை என்ன பாடல் பெறாததோ
இன்னும் கொஞ்சம் சொல்லச் சொல்ல காதல் உண்டானதோ

(தங்க)

அல்லி பூவைக் கிள்ளிப் பார்க்க நாள் என்னவோ
கிள்ளும்போதே கன்னிப் போகும் பூ அல்லவோ
அஞ்சும் கெஞ்சும் ஆசை நெஞ்சம் நாணம் விடாததோ
அச்சம் வெட்கம் விட்டு போனால் தானே வராததோ

http://www.youtube.com/watch?v=07jD564lc-4
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Feb 11, 2008 3:10 pm    Post subject: Reply with quote

Dear RajeshKRV

The song has 2 diff. charanams.

USV is one of the very best of tamil cinema music itself. Though MSV himself felt that MGR pushed him too much for improvisation, the end output today is what that matters & its an ultimate album . Any amount of superlatives will not satisfy a music lover. Thanga thoniyile has a terrific interlude arrangement especially the second one which often the Chennai AIR never broadcasted. I realized that there was chorus & drumming which was not heard in AIR .
The song has a delightful picturisation ………. Mid way, a large aircraft will pass by and MGr had beautifully captured that ! & at the end of the song, one small aircraft also will fly at a distance….
Jesudas owes a lot to Mellisai Mannar for having given such dazzling songs during his formative years……

Rajesh, our Sriram Kannan has created an exclusive thread for USV & has covered some songs. Can you post it there pls ? Will be befitting to the Master no ?

http://msvtimes.com/forum/viewtopic.php?t=1377
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group