"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - 'Enakkoru kaathali irukkindraal'

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Feb 01, 2008 11:41 pm    Post subject: Lyrics - 'Enakkoru kaathali irukkindraal' Reply with quote

பாடல்: எனக்கொரு காதலி பாடியவர்கள்: மெல்லிசை மன்னர் & எஸ்.பி.பி.
இசை: மெல்லிசை மன்னர் பாடலாசிரியர்: கண்ணதாசன்

எம்.எஸ்.வி.:
எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை, கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை, தமிழோசை

எஸ்.பி.பி.:
எனக்கொரு காதலி இருக்கின்றாள், அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்
கீதம் அவளது வளையோசை, கீதம் அவளது வளையோசை
நாதம் அவளது தமிழோசை, தமிழோசை

எம்.எஸ்.வி.:
பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக
(எனக்கொரு)

எஸ்.பி.பி.:
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்
(எனக்கொரு)

எம்.எஸ்.வி.:
தேன்தரும் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்
(எனக்கொரு)

மெல்லிசை மன்னரும், எஸ்.பி.பி. அவர்களும் சேர்ந்து பாடிய ஒரு அருமையான பாடல் இது. மெல்லிசை மன்னருக்கு இசையின் மேல் உள்ள காதலை, கண்ணதாசன் அவர்கள் கவிதையாக எழுதி அவரிடமே இசை அமைக்க கொடுத்த பாடல் இது. இசையை காதலியாக கற்பனை செய்து அவளை வர்ணனை செய்யும் இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் சுகமானவை.

'ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்' என்ற வரிகளை பாடியவுடன், இந்த வரிகளுக்கு விளக்கம் கொடுப்பது போல 'க,ம,ப,த,நி........என்று ஸ்வரங்களை பாடி சிரிப்பது மிகவும் அழகு. இந்த ஏழு ஸ்வரங்களுக்கும் பெயர்கள் உண்டு. அதில் 'ப' என்ற ஸ்வரதுக்கு பஞ்சமம், 'த' என்ற ஸ்வரதுக்கு 'தெய்வதம்' என்றும் பெயர். கண்ணதாசன் இதையே தன் பாடல் வரிகளாக எவ்வளவு அழகாக எழுதி உள்ளார்.

"பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக"


"என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்"

எவ்வளவு அர்த்தம் நிறைந்த வரிகள் இவை. இசை என்பவள் அதை ரசிக்கும் எல்லோருடனும் ஒரு ஜீவனாகவே வாழ்கிறாள். நம் மனதில் தோன்றும் பல வித உணர்ச்சிகளுக்கு ஏற்ப இந்த இசையானது எத்தனை வடிவங்களில் வந்து நம்முடன் நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறது. ஆறுதல் அளிக்கிறது. இந்த இசையை சுவாசிக்கும் அனைவருமே இதை உணர்திருப்பார்கள்.

"மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்"

கண்ணதாசன் அவர்களின் அழகான கற்பனையில் வந்து நம்மை ஒரு தேவதையை கண்ட பரவசத்தை உண்டாக்கும் வரிகள் இவை.
நம் மனதில் உள்ளதையே நம் வார்த்தையில் கொண்டு வருவது கடினமாக உள்ளபோது, மெல்லிசை மன்னரின் மனதில் இசையாக உள்ள அவர் காதலியை பற்றி கண்ணதாசன் கவிதையாக்கி இருப்பதை எப்படி பாராட்டுவது? எனக்கு வார்த்தையே வரவில்லை.

இந்தப் பாடல் பியானோவிலே ஆரம்பித்து அதிலேயே முடியும். ஒவ்வொரு சரணங்களின் இடையிலும் வரும் வயலினின் இசையும், பியானோவின் இசையும், பாடலின் இறுதியில் வரும் அந்த பியானோ மீட்டும் ராகத்தையே மறுபடி வயலினில் கேட்பதும் நம் மனதை உருக வைக்கும்.

இந்த பாடலின் இன்னொரு அழகு என்னவென்றால் மெல்லிசை மன்னர் அவர்கள் முதல் சரணத்தை எப்படி பாடி இருக்கிறாரோ, அதே பாணியில் இரண்டாவது சரணத்தை எஸ்.பி.பி. அவர்கள் பாடி இருக்கிறார்கள். கடைசியில் இருவரும் சேர்ந்து பாடும்போது நம் காதில் தேன் வந்து பாய்கிறது. இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத ஒரு விருந்துதான்.
Back to top
View user's profile Send private message
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sat Feb 02, 2008 10:33 am    Post subject: Reply with quote

Dear Ms.Meenakshi,

Very beautiful analysis for a very beautiful song.
MM matrum SPB rendu perum romba azhaga paadiyirupanga...
PIANO and VIOLIN together rules the song.

In this song, MSV sings for Thengai Srinivasan and SPB for Jaiganesh.
Thengai will be a Music Director. Jai will come to him to learn Music.
This is the situation.

Kannadasan MSV-kaagave prathyagama ezhuthina varigal pola thondrum... (Who knows.. this may be the fact...)
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Sat Feb 02, 2008 11:29 am    Post subject: No words to express !!! Reply with quote

Dear Meenakshi madam
No words to express . Your writing is as emotive as the lyrics are. I had never noticed these lyrics until now and understood the deeper meaning in it. Thanks for the same.

I always envy whenever I listen to this song as SPB and our Master would sing together at the end and also told our Master about this many times whenever I met him Surprised.

Please continue to enthrall us with such emotive writings .

MSV Rules !!!
Venkat
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Feb 03, 2008 1:23 pm    Post subject: Reply with quote

[இசை ரசிகர்கள் பலரை மயக்கவைத்த இந்த "எனக்கொரு காதலி இருக்கின்றாள் " பாடல் பற்றிய மீனாட்சி மேடத்தின் எழுத்து அபாரம்.

வெங்கட் சொன்னது போல் இப்பாடலின் உள் அர்த்தம் இத்தனை ஆழமானது என்று உங்கள் எழுத்தின் மூலம் புரிய புல்லரிக்கிறது உடம்பு !

நம் தள நண்பர் வத்சன் அடிக்கடி சொல்வது போல, கண்ணதாசனும், விசுவநாதனும் கவிதை-இசையின் மகாத்மியத்தை இவ்வுலகிற்கு உணர்த்த இறைவனால் அனுப்பப்பட்ட கந்தர்வர்களே !

" என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன்
மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச
கைவசமாகும் எதிர்காலம்"

- இந்த வரிகளுக்கு ஒவ்வொருமுறை கேட்கும்போதும் எனக்கு தோன்றும் அர்த்தம் :

எஸ் பி பி சொல்கிறார்:

"என்னோடு வாழுகின்ற இந்த ஜீவன் (விசு) மெல்லிசையின் மறு உரு எப்போதுமே.
இவ்வுலகம் முழுவதும் என் (எஸ் பி பி) புகழ் (விசுவின் அனுக்ரகத்தால்) பேசப்பட எதிர்காலம் என் வசமாகும்."

இதுவும் சரியாகத்தானே இருக்கிறது !!

அன்புடன்
ராம்கி.[

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Feb 03, 2008 6:44 pm    Post subject: MSV-KD, THE RAREST GIFT WE HAVE GOT!!! Reply with quote

Dear Meenakshi,

Another stunner by you once again. This song has one of the greatest of Piano preludes and the interlude violin & piano speaks volumes for generations for the way our Legend has used these instruments. A fantastic song that will live for ever. Your indepth analysis was really an eye opener for all of us as it gave a real better opportunity to understand the eternal feelings both the Legends shared between them. MSV&KD, the rarest of gifts mankind has ever received from God!!! Long live the Legends. Another beautiful song from the same film is Maarghazhi Paniyil by SPB. Great song. And great going Meenakshi!!!

CHEERS
MSV IS MUSIC
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Wed Feb 06, 2008 5:18 pm    Post subject: Reply with quote

Hi

we have one more gem .ETHU RAJA GOPURA DEEPAM from Taxi driver
Possible pl write about this song

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
A.SURI



Joined: 15 Jul 2007
Posts: 7
Location: Malawi

PostPosted: Wed Feb 20, 2008 1:27 am    Post subject: Reply with quote

Are you sure it was written by Kanna dasan?

Mutthanamutthalavo-story,dialogues,songs by valee

A.SURI
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Nov 21, 2011 1:10 am    Post subject: Reply with quote

Yes. This song is by Vaallee.
I find something interesting in this song. The lines which MSV sings suit the lyricist that is Valeee, here. And the lines that SPB sings suit the Music Director, MSV here.

Let me explain the way I interpret this exquisite number in which the lyrics and the musical composition vie with each other for excellence.

கவிஞர் வாலி (எம் எஸ் வியின் குரலில்)
எனக்கொரு காதலி இருக்கின்றாள்

நான் (பாடலை ரசிப்பவன்): யார் அவள்?

(இப்பொது வாலி சில குறிப்புகள் கொடுக்கிறார் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கேள்வி கேட்டு விட்டு, பதில் தெரியாவிட்டால், க்ளூ கொடுப்பார்களே, அது போல)

அவள் ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றாள்.

(இப்போதே விடை தெரிந்து விட்டது - ஏழு ஸ்வரங்களையும் மூன்றெழுத்தில் அடக்கியவர் என்று வைரமுத்துவால் குறிப்பிடப்பட்ட அந்த மூன்றெழுத்துக்காரர் எம் எஸ் வியைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?)

கீதம் அவளது வளையோசை

(ஒரு பெண் அசைந்தால் எப்படி வளையோசை ஒலிக்குமோ, அது போல் இவரது ஒவ்வொரு அசைவும் ஒரு இசைதான்.)

நாதம் அவளது தமிழோசை


(முந்தைய வரிகள் வேறு யாரையும் குறிக்குமோ என்ற ஐயம் எவருக்காவது இருந்தால், அந்த ஐயம் இப்போது தீர்ந்து விடும். தமிழ்ச் சொற்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்து, அவை ஒழுங்காக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் ஒரு தமிழாசிரியரைப் போலக் கவனம் செலுத்துபவர் நம் தமிழிசை வேந்தரைத் தவிர வேறு யார்?)

இப்பொது இதே வரிகளை எஸ் பி பி பாடும்போது, அவை எம் எஸ் விக்குப் பொருந்துகின்றன.

இசை அவரது காதலி. அது ஏழு ஸ்வரங்களில் சிரிக்கிறது. ஒரு காதலன் எங்கேனும் வளையோசையைக் கேட்டால் தன் காதலியை நினைத்துக் கொள்வது போல, இவரும் எப்போதும் இசையையே நினைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் இசை என்பதே இவரது முழு நேரப் பணி என்று ஆகி விட்ட பிறகு, தன் காதலியின் நாதம் - அவள் எந்த மொழி பேசினாலும் - தமிழாகத்தான் ஒலிக்கும் போலும்!

கவிஞர் வாலி (எம் எஸ் வியின் குரலில்)
பஞ்சமம் பேசும் பார்வையில்
என்றும் பஞ்சணை போடும் எனக்காக
தெய்வதம் என்னும் திருமகள் மேனி
கைகளை அணைக்கும் இனிதாக


இசைக்காதலி தன் கவிதைக் காதலனை எப்படி அணைத்து அன்பு காட்டுவாள் என்பதை இங்கே வாலி விளக்குகிறார். எழுத்து வடிவில் உள்ள கவிதை இசை வடிவம் பெறும்போது அங்கே பஞ்சமம், தைவதம் எல்லாம் கொஞ்சும் இல்லையா? அந்தப் பொருளையும் இவ்வரிகள் குறிக்கின்றன.

எஸ் பி பி:
என்னுடன் வாழும் இன்னொரு ஜீவன் மெல்லிசையாகும் எந்நாளும்
வையகம் யாவும் என் புகழ் பேச கைவசமாகும் எதிர்காலம்



இந்த வரிகள் எம் எஸ் விக்கு முழுமையாகப் பொருந்துகின்றன என்பதற்கு விளக்கம் தேவையில்லை. மெல்லிசை மன்னரின் புகழ் இவ்வையகம் முழுவதும் பரவ வேண்டும் என்ற வாலிடின் விருப்பமும் இதில் பிரதிபலிக்கிறது.

கவிஞர் வாலி (எம் எஸ் வியின் குரலில்)

தேன்தரும் கிண்ணம் ஏந்திய வண்ணம் நான் தரும் பாடல் அவள் தந்தாள்
மோகனம் என்னும் வாகனம் மீது தேவதை போல அவள் வந்தாள்


மோகனம் என்றால் இனிமை அல்லது ஈர்ப்பு. அவர் வாகனமே மோகனம் என்றால், அவர் பாடல்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சக்தி பற்ரிக் கேட்கவா வேண்டும்?

கவிஞர் வாலி அவர்கள் எந்தப் பொருளில் இந்தப் பாடலை எழுதியிருப்பாரோ எனக்குத் தெரியாது. ஆனால் அவர் எழுதிய வரிகள் கவிஞருக்கும் மெல்லிசை மன்னருக்கும் பொருந்துகின்றன. நான் கவிஞர் என்று குறிப்பிட்டது இந்த அற்புதமான பாடலை எழுதிய வாலியைத்தான் என்றாலும், இதே வரிகள் கவிஞர் கண்ணதாசனுக்கும் பொருந்தும். ஒரு புறம் எம் எஸ் வியையும், மறுபுறம் தன்னையும், கண்ணதாசனையும் நிறுத்தி, வாலி இந்தப் பாடலை வரைந்திருக்கிறார் என்று கொள்வது மிகவும் பொருந்தும். பலரும் (நானும்தான்) இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன் என்று மயங்கியதில் வியப்பில்லை!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Nov 21, 2011 1:23 pm    Post subject: Lyrics Reply with quote

Dear Mr. Parthavi,
I am more happy than I was a few days ago, with new items appearing in our forum. With certain regularity I try to post and now I am working on KD-MSV as a team and I intend looking at various facets. Perhaps by a coincidence Mr.Rajesh has opened a thread on Valee- MSV as a pair. After all, what better can one aspire for when different authors bring forth the different possibilities for appreciation. Your posting is a case in point doing justice to the pair Valee- MSV. May I request you to shift it to the thread [under songs composed byn MSV-TKR] dedicated to the same duo as you are happy with ; it is just a request so that like pieces come to a common locale and people do not miss reading the piece.With my limitations I can not ad to what you have scribed of 'yenakkoru kAdhali'.
Warm regards K.Raman Camp: Navi Mumbai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Nov 21, 2011 1:59 pm    Post subject: Reply with quote

Dear Prof,
Thank you for your response.

I thought of writing this under Mr. Rajesh's postings or starting a new thread but since I found that a thread was already there for this song, I thought it was appropriate to post it under that.


I would like to act as per your suggestion but I don't know how to shift this post. I am not even sure whether I can do this.

Moreover I find, that my post starts concurring with Mr. Suri's point about the authorship of this song. So, perhaps, this should stay here.

I am also happy to see more activity in the forum after your writing about the dormancy.

I have been enjoying your postings on MSV -Kavignar but have not thought of anything to add on the points you have written.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Nov 21, 2011 2:58 pm    Post subject: Lyrics Reply with quote

Dear Mr.Parthavi,
As the author you are the best judge of where the item can figure.As a viewer , I thought it can add to Mr.Rajesh's piece. No harm if it stays anywhere. Thank you for clarification.
Warm regards K.Raman Camp; Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Mon Nov 21, 2011 8:30 pm    Post subject: Reply with quote

Dear Mr. Parthavi,
A very imaginative perception which suits very aptly. This is what happens when a creation takes place with the creators concentrating only on the quality of the output and not thinking about money, fame etc.

keep going.

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group