"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

aadi velli thedi unnai naan adaintha neram

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Jan 09, 2008 11:49 pm    Post subject: aadi velli thedi unnai naan adaintha neram Reply with quote

படம்: மூன்று முடிச்சு பாடலாசிரியர்: கண்ணதாசன் இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன் & வாணி ஜெயராம்

ஜெய:
ஆடிவெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்,
கோடி இன்பம் நாடி வந்தேன் காவிரியின் ஓரம்.
காவிரியின் ஓரம்

வாணி:
ஓரக்கண்ணில் ஊறவைத்த தேன் கவிதை சாரம்
ஓசை இன்றி பேசுவது ஆசை என்னும் வேதம்
ஆசை என்னும் வேதம்.

ஜெய:
வேதம் சொல்லி மேளமிட்டு மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று வித்தை பல நாடும்

வாணி:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம் பேசும் மொழி மௌனம்
ராகம் தன்னை மூடி வைத்த வீணை அவள் சின்னம்
வீணை அவள் சின்னம்.

ஜெய:
சின்னமிக்க அன்னக்கிளி வண்ண சிலை கோலம்
என்னை அவள் பின்னிக்கொள்ள என்று வரும் காலம்

வாணி:
காலமிது காலமென்று காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் கடல் சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

(ஆடி வெள்ளி)


ஆடி வெள்ளி...... கவிஞர் கண்ணதாசன் எழுதிய இந்த அற்புதமான கவிதையை நம் மெல்லிசை மன்னர் அழகான பிலஹரி ராகத்தில் பாடலாக அமைத்து இருக்கிறார். இந்த பாடல் சில இடங்களில் இந்த ராகத்தில் இருந்து சற்றே விலகியது போல இருந்தாலும், நம் மெல்லிசை மன்னர் இந்த பாடலை பிலஹரி ராகத்தை மையமாக வைத்தே அமைத்து இருக்கிறார். இந்த என் கருத்தில் பிழை இருந்தால், ராகம் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும்.
கவிஞரும், மெல்லிசை மன்னரும் சேர்ந்து செய்த இந்த அற்புதத்தை நாம் ரசிக்கும்போது, நம் மனதில் ஏற்படும் உணர்வுகளுக்கு வார்த்தையே இல்லை. இந்த பாடலின் ஆரம்பத்தில் தொடங்கி இறுதி வரை வரும் அந்த மணி ஓசை நம் செவிக்கு ஒரு தெவிட்டாத விருந்து.

இந்தப்பாடல் 'மூன்று முடிச்சு' என்ற படத்தில் ஒரு கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது. இந்த பாடல் வரிகளில் உள்ள ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், முதல் போட்டியாளர் எந்த வார்த்தையில் தன் வரிகளை முடிகின்றரோ, அந்த வார்த்தையில் அடுத்த போட்டியாளர் தன் வரிகளை துவக்க வேண்டும். இந்த கவிதையின் ஒவ்வொரு வரியின் அந்தமும் அடுத்த வரியின் ஆதி ஆகின்றது. அந்தம் என்பது முடிவு, ஆதி என்பது துவக்கம். இது 'திருகடயூர் அபிராமி' அம்மனின் மேல் அபிராமி பட்டர் என்பவரால் பாடப்பட்ட 'அபிராமி அந்தாதி' என்ற வகையை சார்ந்தது.
Back to top
View user's profile Send private message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Thu Jan 10, 2008 9:36 am    Post subject: Reply with quote

Good info about this nice song.

Great lyrics writing by Kannadasan in Anthathi style.
MSV has composed the song without suppressing the beauty of the
lyrics. An interesting point is the short and sweet interludes with chorus.

Thanks for writing about this nice song.

There is another song in the same movie ' Vasantha kala nathigalile' which also follows the same style of anthathi. I eagerly look forward for your analysis of that song too.
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Jan 14, 2008 5:47 pm    Post subject: Reply with quote

Beautiful song ! You are right. Its like Andhadhi type only. See, even that Vasantha kala nadhigalile is a similar concept only ! The highlight of the song is the chorus interludes & the punchy keyboard counter . Melodious singing by VJ and Jayachandran… Thanks for the lyrics Madam
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Jan 17, 2008 2:38 am    Post subject: Reply with quote

Thanks Mr. Ravikumar. I haven't realised that the song 'Vasantha kala nadhigalile' is also in Andhathi type. Here are the lyrics.

படம்: மூன்று முடிச்சு பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்
இசை: மெல்லிசை மன்னர்

ஜெய:
வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்

வாணி:
நினைவலைகள் தொடர்ந்து வந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் வளர்வதற்கு காமன் அவன் மலர்கனைகள்

ஜெய:
மலர்கனைகள் பாய்ந்து விட்டால் மடி இரண்டும் பஞ்சணைகள்
பஞ்சணையில் பள்ளிகொண்டால் மனம் இரண்டும் தலையணைகள்

(வசந்த கால)

வாணி:
தலையணையில் முகம் புதைத்து சரசமிடும் புதுகலைகள்
புதுகலைகள் பெறுவதற்கு பூமாலை மணவினைகள்

(வசந்த கால)
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Sat Jan 19, 2008 4:19 am    Post subject: Reply with quote

'வசந்த கால நதிகளிலே' இந்த பாடல் 'காபி' ராகத்தில் அமைந்த ஒன்று. இது மிகவும் அழகான ஒரு ராகம்.

இந்த படத்தில் நாயகன் தன் காதலியை பார்க்க வேண்டும் என்றால் mouth organ வாசிப்பார். உடனே அவள் வெளியே வந்து அவனிடம் ஜாடையில் பேசுவாள். ஒரு முறை அவர்கள் படகில் உல்லாசமாக போகும்போது இருவரும் சேர்ந்து பாடுவதாக அமைந்த பாடல் இது. படத்தின் நாயகன் எப்போதும் mouth organ வாசிப்பதால் இந்த பாடலை மெல்லிசை மன்னர் mouth organ மூலமாகவே தொடங்கி இருப்பார். இந்த அழகான காபி ராகத்தை இதில் கேட்கும்போது அவர் நம்மையும் படகில் அழைத்து செல்வதுபோல் தோன்றும். பாடலின் சரணங்களில் வரும் இதமான மிருதங்கம், மற்றும் சரணத்திற்கு முன்பு வரும் அந்த புல்லாங்குழலின் இசைக்கு ஏற்ப வாணி ஜெயராமின் குரலும் மிகவும் இனிமை.

அவர்கள் படகில் செல்லும்போது நாயகனின் நண்பனும் உடன் வருவது போல காட்சி அமைந்திருக்கும். அந்த நண்பனும் நாயகியை காதலிப்பார். அதனால் அவர் படகை செலுத்தும்போது வேண்டுமென்றே நாயகனை படகில் இருந்து தண்ணிரில் விழ வைத்து நீச்சல் தெரியாத அவரை கொன்று விடுவார். இதனை பார்த்த அதிர்ச்சியில் நாயகி உறைந்திருக்கும் போது இந்த வரிகளை பாடுவார்.

மணவினைகள் யாருடனோ, மாயவனின் விதிவலைகள்
விதிவலையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்.

கவிஞர் இந்த பாடலை அந்தாதி முறையில் எழுதி இருப்பதால், படத்தின் வில்லன் பாடுவதாக வந்த இந்த இரண்டு வரிகளையும் அந்த காதல் பாடலின் முடிவில் வந்த வார்த்தையை கொண்டே தொடங்கி இருப்பது
குறிப்பிடத்தக்கது.

பாலசந்தர் அவர்கள் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி மற்றும் ரஜினிகாந்த் அவர்கள் நடித்துள்ளார்கள். வில்லனாக வரும் ரஜினி அவர்களின் நடிப்பு மிகவும் அற்புதம்.


Last edited by Meenakshi on Sat Jan 19, 2008 6:43 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Jan 19, 2008 5:05 am    Post subject: Reply with quote

It was a great day in my life.... The 25th Wedding Anniversary of my Dad-Mom... We were all blessed as our Legend (and Mrs) graced the memorable occasion....

I prepared a collection from MSV's preludes called the "Pre-Lude Feast" to be played on the occasion...( This can be found in the BGM section of our website)... At the end of that collection I added a couple of songs with MSV's voice - This song + "Enakkoru Kadhali"

When I played that track our Legend and all others who came to attend the function, the following lines made him uneasy and he immediately asked to turn the music off...

Please note that though those lines were his own composition and though it was his voice was that was playing, he simply asked me to switch that off, just because the song did not suit the occasion!!!

The lines were:

"மணவினைகள் யாருடனோ, மாயவனின் விதிவலைகள்
விதிவலையை முடிவு செய்யும் வசந்த கால நீரலைகள்.
"

One more song he did not like on the occasion, when my dad sang his all-time favourite "Nilave Ennidam Nerungathey", which was completely off the situation. MSV immediately stood up and started clapping and started the song:

"Nallathoru Kudumbam"...

He clearly lived his own Principle that ANY MUSIC SHOULD SUIT THE OCCASION (EVEN IF IT IS HIS) !!!

The Mark of a Legend, in every sense !!!!!

Seeing MSV standing and clapping and conducting the song the whole audience started to clap, dance and the hall was filled with so much fun and energy...

We played the same "Prelude Feast" during the launch of "MSVTimes.Com", but we made sure to remove "மணவினைகள் யாருடனோ" from the collection..

What a life lesson ?!?!

Unforgettable and greatest moments of my life!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Tue Jan 22, 2008 11:12 pm    Post subject: Reply with quote

Dear Ms.Meenakshi,
Vasanthakaala nadhigalile...
romba arpudhamaga vilakkam koduthulleergal...
mouth organ plays a major role in this movie...
Indha paadalilum matrum padathilum pala dharunangalil mouth organ-la MM vilayaduvar... (in this song as well as re-recording)

Titles-podum podhu music romba arumaya irukkum...
Rajni-introduce aagum pothu oru vithyasamana music varum...
antha character-ku suit aagaramathiri oru music...
Rajni-a avaroda manasatchi chase pannumbothu oru different music varum...

This is the first song for Rajnikant.
Another song Sambo sivasambo (MM for Rajni) in Ninaithale Inikkum...
Kamal will introduce Rajni like this:-
"Ivar dhan Deepak, Guitarist... samayathila MSViswanathan mathiri kooda paaduvarunga..." (Sujatha dialogues)...

MSV-KB is another great combination...
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group