"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

KANGAL IRANDUM ENDRU UMMAI (MANNADHI MANNAN)

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Fri Jan 11, 2008 11:19 am    Post subject: KANGAL IRANDUM ENDRU UMMAI (MANNADHI MANNAN) Reply with quote

மன்னாதி மன்னன்‍ இதில் மெல்லிசை மன்னர்கள் இருவருமே மன்னாதி மன்னர்கள் ஆம் இசையுலகில் மன்னாதி மன்னர்கள் என நிரூபித்த படம். பாட்டுக்கள் ஒவ்வொன்றும் இசை முத்துக்கள்
எதை எடுப்பது எதை விடுவது என்று நாம் யோசிக்கவே தேவையில்லை ஆம் எல்லாமே எடுத்து கேட்டு ஆராய வேண்டிய இசைப் பொக்கிஷங்கள்

நீயோ நானோ யார் நிலவே பி.பீ.ஸ்ரீனிவாஸ்,சுசீலா, ஜமுனாராணி ஆகியோர் குரல்களில் அற்புத பாடல்

கனிய கனிய மழலை பேசும் கண்மனி சுசீலா, செளந்தர்ராஜன் குரல்களில்
இனிய அழகான பாடல்

அச்சம் என்பது மடமையடா என்று டி.எம்.எஸ் குரலில் கம்பீரமாக ஒலிக்கும் பாடல்

எம்.எல்.வி,டி.எம்.எஸ் பாடும் ஆடாத மனமும் உண்டோ

எம்.எல்.வி பாடும் கலையோடு கலந்தது உண்மை என அனைத்து பாடல்களும் சிறப்பென்றாலும்

சுசீலா பாடிய " கண்கள் இரண்டும் என்று உம்மை கண்டு பேசுமோ" என்ற‌
சோகத்தின் குரலாக ஒலிக்கும் இந்த பாடல் தான் மன்னாதி மன்னனில் எனது தேர்வு..

பத்மினி நாட்டிற்காக தன்னை வீரப்பாவிடம் அடைக்கலம் கொடுக்க, ஆனாலும் தன் காதல இளவரசர்(எம்.ஜி.ஆர்) வருவார் என்று காத்திருக்க
அங்கே போன இடத்தில் எம்.ஜி.ஆர் அஞ்சலிதேவியை கைப்பிடிக்க அங்கே அவருக்கு ஆபத்து வருவது இங்கே பத்மினிக்கு தெரிகிறது .. ஆம் காதல் அவ்வளவு சக்தி வாய்ந்த்து தான் போலிருக்கிறது ..

என்று உன்னை காண்பேனோ என்று நாயகி பாடுகிறாள் அதுவும் எப்படி

பச்சைக்கிளி ஆனால் பறந்து வந்து தேடுவாளாம்
தென்றல் தேரேறி ஓடி தேடுவாளாம்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது சொல்ல காணேன்....

எத்தனையோ சோகப்பாடல் போட்டிருக்கிறார்கள் .. இதில் அப்படி என்ன
சிறப்பு என்று சிலர் கேட்கக்கூடும் ..

பத்மினி நாட்டியப்பெண் அவர் பாடுவதாக அமைந்த பாடல் இது .. ஆகவே மெல்லிய அதே சமயம் கர் நாடக தாள நடையில் இசையும் சோகத்தை சொல்லும் உச்சஸ்தாயி குரலும் ஒருங்கே அமைந்து ஒரு சீரான பாடலை நமக்கு தந்திருக்கிறார்கள் .. ஒரு பாட்டில் எந்த இடத்தில் என்ன பாவம் அதுவும் எந்த அளவு வேண்டும் என்பதை இசையரசி சுசீலாவால் மட்டுமே செய்ய முடியும்... இங்கே பாருங்கள்


முதலில் மெல்லிய சோகமாக ஆரம்பித்து

பச்சைக்கிளியானால் பறந்தேனும் என்று பாடும்போது அந்த பெண்மையின் இயலாமையை குரலில் காட்டியிருப்பார்

கவியரசரின் வரிகள்... அவை வரிகள் அல்ல.. சொல்வெட்டுக்கள் ஆம்
கனையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்தெங்கே ... என ராமாயண கதையை இரண்டு வரிகளில் இந்த சூழலுக்கு எடுத்துக்கொடுக்க கவியரசரால் மட்டுமே சாத்தியம்

மொத்தத்தில் செவிகள் இரண்டும் என்றுமே கேட்டு மகிழக்கூடிய பாடல் இது

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ பாடலை கண்டு மகிழுங்கள்

http://www.youtube.com/watch?v=lXuoJabEXIE
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Jan 14, 2008 10:52 am    Post subject: Reply with quote

Bulls eye you had hit Rajesh !! Spot on with the song situation !
See, the ludes will reflect the man in a hurry & in crisis, fighting with enemy army . The rushing volley of violin …. Well reflecting the fight sequence followed by a sobre Sitar …the mood of a worried Padmini !...P.Susheela’s magnificent singing , Padmini’s tearful acting …..& Kavignar Kannadasan’s lyrics ….priceless song this is !

கனையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்தெங்கே ... என ராமாயண கதையை இரண்டு வரிகளில் இந்த சூழலுக்கு எடுத்துக்கொடுக்க கவியரசரால் மட்டுமே சாத்தியம்


Immortal lyrics !

What a movie for the mellisai Mannargal ! a top class album
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group