"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks - Part 12 - Rock 'n Roll

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Jan 04, 2008 9:17 am    Post subject: A Handful of Piano Picks - Part 12 - Rock 'n Roll Reply with quote

A Handful of Piano Picks - Part 12

Rock & Roll

1950/60 களில் அமெரிக்காவில் பிரபலமடையத் தொடங்கி மிகக் குறுகிய காலத்திலேயே உலகின் பல இடங்களுக்குப் பரவிச்சென்ற இசை வடிவம் இந்த "ராக் & ரோல்" இசை. பாரம்பரிய "ராக் & ரோல்" இசையில் காணப்படும் வாத்தியங்கள்: 1 அல்லது 2 எலெக்ட்ரிக் கிட்டார் (Electic Guitar), ஒரு பாஸ் கிட்டார் (Bass Guitar) மற்றும் டிரம்ஸ் (Drum Kit). முதலில் பியானோ அல்லது சாக்ஸ் (Sax) கொண்டு இருந்த இசை பின்னாட்ளில் கிட்டார் கொண்டு விளங்கியது. இவ்விசையில் இருக்கும் தாள நடை "Boogie Woogie Blues Rhythm" என்று வழங்கப்படும்.

இந்த இசை வடிவைத் தமிழ்த் திரைக்கு (இந்தியாவிற்கே?) அறிமுகப்படுத்திய பெருமையும் மெல்லிசை மன்னர்களுக்கே சாரும்.
பட்டியலில் முதல் பாடலாக:

"ஆடவரெல்லாம் ஆட வரலாம்"
படம்: "கறுப்புப் பணம்" (1964)


இப்படம் மெல்லிசை மன்னர்களின் இசைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல் கல் என்றுதான் கூற வேண்டும் - பலவித இசை வடிவங்கள் ஒரே படத்தில் இடம் பெற்ற அதிசயத்தின் காரணத்தினால். (படம் சரியாகப் போகவில்லை என்றாலும்). "தங்கச்சி சின்னப் பொண்ணு" அற்புத கவாலி இசை. "அம்மம்மா கேளடி தோழி" தேன் சொட்டும் மெலடி. (இப்படிப்பட்ட பாடல் சூழலுக்கு 'சாருகேஸி' ராகத்தைத் தேர்ந்தெடுத்து சரணத்தில் மிருதங்கத்தைச் சேர்த்த ரசனை, தைரியம் மெல்லிசை மன்னர்களை எவருடனும் ஒப்பிட இயலா சிறப்பாளர்களாக உயர்த்தி வைத்துள்ளது!). "எல்லாரும் எல்லாமே" சாஸ்த்ரீய சங்கீதம் பாணியில். "கையிலே பணமிருந்தால்", "கண்மணி கண்மணி", "பட்டுச் சிறகு கொண்ட" மிகவும் இனிமையான மெலடிகள். நமது ஆய்வுப் பாடலான "ஆடவரெல்லாம்" 'ராக் & ரோல்' இசை. நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாக உள்ளது!

பியானோ, எலெக்ட்ரிக் கிட்டார் கொண்டு "ரிதம்ஸ் அண்ட் ப்ளூஸ்" நடையில் அருமையாகத் தொடங்கும் முன்னிசை. எல்.ஆர்.ஈஸ்வரி குரலில் தொடங்கும் பல்லவி:

ஆடவரெல்லாம் ஆட வரலாம்
ஆடவரெல்லாம் ஆட வரலாம்


"வரலாம்" வார்த்தை முடிகையில் பின்னணியில் ஆண் குரல்கள் "ஜிபும் ஜிபும் ஜிபும்" என்று. (அது மெல்லிசை மன்னரின் குரல் தானா?)

காதல் உலகம் காண வரலாம்

இந்த வரியின் போது பின்னணியில் ஆண் கோரஸ் "ஏ....." என்று. கோரஸ் 'பார்ட்ஸ்' பாடுவது இன்னும் அழகு. இடையிசையின் போது பாடலின் உற்சாகம் சற்று கூடி, கோரஸ் ட்ரம்ஸ் தீர்மானத்துடன் முடிய சரணம் துவக்கம்:

தேயும் நிலவு தேயும் வரைக்கும்
தென்றல் அடித்து ஓயும் வரைக்கும்
சாயும் அழகு சாயும் வரைக்கும்
சேர வரலாம் தினம் வரலாம்


இதே வரிகள் மேல் ஸ்தாயியில் மறுமுறை வரும்...ஒரே வரிகள் என்று கூர்ந்து கவனித்தாலே ஒழிய அறிய முடியாது!

தமிழ்த் திரைக்கு முற்றிலும் புதிய இசை வடிவைத் தங்களது தனித்துவமான மெலடி கொண்டு மெருகேற்றி இந்திய இசைக்கே சிறப்பேற்றிய மெல்லிசை மன்னர்களது இசைச் சாதனை எண்ணி எண்ணி வியக்க வேண்டிய ஒன்று!

இந்த 'ராக் & ரோல்' இசை அமெரிகாவில் வெறும் ஒரு இசை வடிவாக உள்வரவில்லை. மக்களின் நாகரிகம், வாழ்க்கை முறை, மொழி, கலாச்சாரம் என்று அனைத்திலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

50, 60 களில் பல இசைக் குழுக்கள் 'ராக் & ரோல்' இசையைத் தழுவி பெரும் பேரும் புகழும் பெற்றது. குறிப்பிடத்தக்கவை: Beatles, Beach Boys, The Temptations போன்ற குழுக்கள். Beatles குழு 'ராக் & ரோல்' இசையிலும் அதைத் தொடர்ந்து 'ராக்' இசையிலும் ஒரு முன்னணிக் குழுவாக, உலகெங்கும் ரசிகர்கள் கொண்டு விளங்கியது. Beatles குழுவின் 'ராக் & ரோல்' பாடல்கள்: "I Saw Her Standing There", "A Hard Day's Night", "I Feel Fine" போன்றவை. Beach Boys குழுவின் "I Get Around", "Don't Worry Baby" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. "Ain't Too Proud To Beg", "My Girl" போன்ற பாடல்கள், "The Temptations" குழுவின் சிறந்த 'ராக் & ரோல்' பாடல்களாகும். இதில் ஒவ்வொரு பாடலிலும் 'ராக் & ரோல்' இன் முத்திரையை இனிதே காணலாம்.

Beatles


உலக அளவில் பிரபலமடைந்த இந்தியப் பாடகியான உஷா உதுப், "பரிக்ரமா" எங்கிற இந்திய இசைக் குழுவுடன் சேர்ந்து வெளியிட்ட "ரிதம்ஸ் அண்ட் ப்ளூஸ்" எங்கிற துள்ளலான பாடல் பெரும் வரவேற்பு பெற்ற 'ராக் & ரோல்' பாடல்.

உஷா உதுப்


இந்த 'ராக் & ரோல்' இசை நூற்றுக்கணக்கான இசை வடிவங்களுக்கு முன்னோடியாகும். அவற்றில் சில: Hard rock, Heavy metal, Reggae rock, Classic rock, Punk rock, Hardcore punk, Country rock, Heartland rock, Melodic black metal, Melodic death metal, Classic metal, Post-metal,
Pop rock, Black metal போன்றவை.

மெல்லிசை மன்னர்களின் 'ராக் & ரோல்' இசையின் அடுத்த பாடல்:

"மலரென்ற முகமென்று"
படம்: "காதலிக்க நேரமில்லை" (1964)


துள்ளல் பியானோவுடன் படு 'குஷி'யாகத் துவங்கும் பாடல், "மலரென்ற முகமென்று". பாடலின் ரிதத்தில் 'Cymbals' பளிச்சென கேட்கும். எலெக்ட்ரிக் கிட்டாரின் ஆதிக்கம் அதிகரித்த பின் பியானோ பின்னணியில் இருந்து விளையாடுவது மிகவும் அழகு. ஆரவாரத்துடன் தொடங்கும் முன்னிசை முடிந்து பல்லவி:

மலரென்ற முகமென்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்


இடையிசை அற்புதமான ஒன்று... சதன் குரலில் "யூலுலி..யூலுலி..யூலுலூ லூலூ" என்கிறவாறு பாட, பின்னணியில் டிரம்ஸ் இல்லாமல் பியானோ எதிர் பாட்டு பாடுவது போல் வந்து கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் ரிதம் தொடங்கி அருமையான ஒரு பியானோவுடன் இடையிசை முடிய, சரணம்:

ஆடிடும் சின்ன உடல்
பாடிடும் வண்ண இதழ்

(ஆடிடும்..)

அஞ்சிடும் வஞ்சி இடை
கெஞ்சிடும் பிஞ்சு நடை

(அஞ்சிடும்)

பின்னணியில் டிரம்ஸ் நிறுத்தப் பட்டு... வெறும் 'Cymbals' கொண்டு..

அல்லித் தண்டு வெள்ளித் தண்டை
முத்துச் செண்டு கன்னங்கள்
மின்னலென்று மின்னக்கண்டு
துள்ளிச் செல்லும் எண்ணங்கள்


இவ்வரிகள் முடிகையில் 'சர்ர்ர்....' ரென ஓடும் பியானோ.

மீண்டும்... "மலரென்ற"

"மலரென்ற முகமென்று" பாடல் காட்சி


எப்பேற்பட்ட வேறுபாடுகளைக் கொண்ட இசையாயினும், கருங்கல்லைக் கற்கண்டாக்கும் விதமாக, அதிலும் இனிமையைக் கண்டு பிடித்து தானும் தன் ரசிகர்களும் ரசிக்கும் விதமாக இன்னிசை வழங்கிய பெருமை மெல்லிசை மன்னர்களுக்கே சாரும்!

இது போன்ற பல சிறப்பான உலக இசை வடிவங்களைத் தன் படத்தில் புகுத்த ஒரு தனி விருப்பம் கொண்ட - ஸ்ரீதர் - போன்ற இயக்குனர்களுக்கு மெல்லிசை மன்னர்களிடமிருந்து சிறப்பான பாடல்களைப் பெறும் ஆற்றல் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

'ராக் & ரோல்' வடிவில் மற்றொரு அற்புதமான பாடல் "மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)" படத்தில் "குபு குபு குபு குபு நான் இஞ்சின்" என்று தொடங்கும் பாடல். இதில் பியானோ கிடையாது. மாறாக அருமையான கிட்டார் உண்டு. ஆகவே இது பிரதான கிட்டார் பாடல் என்பதால் விட மனமின்றி விடுகிறேன்.

உலகத்திலேயே மிக இனிமையான 'ராக் & ரோல்' பாடல் அடுத்த பாகத்தில்.

முற்றிலும் அந்நிய இசையை மிக அழகாக இந்திய இசையுடன் தழுவி மெல்லிசை வடிவில் துள்ளும் இன்னிசையைச் சாகாவரத் தன்மையுடன் ரசிகர்களுக்கு வழங்கி வியத்தகு விந்தைகள் புரிந்த விழுமிய சாதனையாளர்கள் மெல்லிசை மன்னர்கள்!

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:20 pm; edited 3 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Fri Jan 04, 2008 9:38 am    Post subject: ROCK & ROLL Reply with quote

Hey Ram,

You have indeed "rocked" MSVTIMES.COM and we have been "rolled" over again & again. Thank you for this wonderful piece on Rock & Roll (which is one of my most favorite form of Pop music- the ones who really rocked me were the Beatles, Elvis Presley, Eddie Rabbit, Dan Seals, Billy Joel. But when it came to the Indian scene of the Rock & Roll, then it's our EMPERROR who steals every Indian heart!!! What a way to rock the TFM!!! By the way Ram, what is that He has left untouched. One ought to agree here that, if you listen to Our Master's Music, then you have almost listened to Global music!!! Ram Rocks and Members Roll!!!

Great Work, please keep it up.

CHEERS
MSV ONLY ROCKS!!!!
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Fri Jan 04, 2008 10:19 am    Post subject: MSV ROCKS and HIS MUSIC ROLLS !!!! Reply with quote

DEAR RAM,
WE HAVE SO MANY GIFTED WRITERS IN THIS FORUM AND EVERYONE HAVE THEIR OWN STYLE OF WRITING !!! VERY NEAT PRESENTATION INDEED......

I JUST HAPPEN TO REMEMBER OUR FINAL YEAR PROJECT PRESENTATION WITH THE PICTURES OF ALL THOSE INSTRUMENTS !!! Very Happy HOW HILARIOUS IT WAS WHEN I CLAIMED MYSELF A "MANDAOLIN PLAYER" !!! GOOD OLD DAYS !!!

"AADAVARELLAM....AADAVARALAAM" ....JUST SEE THESE TWO WORDS. IT NEEDS SO MUCH OF INSIGHT AND DEEP THOUGHT FOR THE KAVIGNAR TO BRING OUT SUCH RHYMING WORDS. COULD THERE BE A BETTER WAY FOR THE LADY CLUB SINGER TO CALL THE GUYS OUT TO THE DANCE FLOOR !!!!

AS YOU SAID , WHEN THE SOLO "HEYY...HEYYYY..." GOES IN THE INTERLUDE AND ALSO IN THE PARTS OF SONG , IT BLENDS SO WELL WITH THE SONG AND EXPRESSES THE THEME.OUR MASTER HARDLY FORGETS TO GIVE THE ATMOST EMBELLISHMENT FOR EACH SONG THAT GIVES OUT THE RIGHT EMOTION !!!

THE POSTLUDE GIVES THE FINISHING TOUCHES WITH THE ELECTRIC GUITAR AND THE DRUM TO MAKE THIS SONG A COMPLETE FOOT TAPPING NUMBER !!!

ANOTHER FOOT TAPPING NUMBER (PROBABLY OF ROCK N ROLL GENRE)THAT CAME FROM THE SRIDHAR - MELLISAI MANNARGAL COMBO WAS "ALLI THANDU KAALGAL" FROM VENNIRA AADAI.

RAM - AM NOT SURE IF YOU HAVE LISTENED TO THIS NUMBER. THE THAALA RHYTHMIC PATTERN TOO COMPLEX TO UNDERSTAND. AND THE "YUGI YUGI..." IS RENDERED BY NONE OTHER THAN THE "SAGALA KALAA VITHAGAR" OF MSV'S BAND - RAJU !!! I WONDER WHY PEOPLE ADDRESS HIM AS "MANDOLIN" RAJU FOR HE WAS AN EXPONENT IN MOST OF THE STRING INSTRUMENTS , INCLUDING SAROD - WHO COULD FORGET THE SAROD PIECE IN THE INTERLUDE OF "DEVAN KOIL MANI OSAI" - THANKS TO VAIDHY UNCLE, FOR THIS INFO !!!

GETTING BACK TO THIS SONG - I SERIOUSLY FEEL DIRECTOR SRIDHAR MIGHT HAVE WANTED ANOTHER SONG FOR THE COMEDIAN PAIR AFTER THE SUCCESS OF THE "MALRENDRA MUGAM ONDRU" FROM K.NERAMILLAI !!! AND WE ARE LUCKY ENUF TO LISTEN TO ANOTHER GREAT FOOT TAPPING NUMBER BY LRE AND RAJU !!!

THE BEST PART OF THIS SONG , IMHO , IS THE VIOLIN ENSEMBLE IN THE PRELUDE. A KEEN LISTENER CANNOT STOP HIMSELF FROM NOTICING THIS MELODIOUS VIOLIN PIECE MAKES A BIG IMPACT DESPITE BEING TRANSIENT !!!

MAY I REQUEST YOU TO TAKE UP THIS SONG FOR YOUR NEXT ANALYSIS IN THIS SEQUEL !!! (PROBABLY , YOU MAY HAVE LOTS IN THE Q , YET I AM RESERVING THROUGH A SPECIAL ENTRANCE TKT OR A THROUGH TATKAL SCHEME Very Happy )...PLEASE !!!!

THE LANGUAGES ARE VERY SIMILAR TO THE MUSICAL INSTRUMENTS FOR THEY CAN TURN SWEET OR SOUR DEPENDING ON THE USER AND I AM REALLY HAPPY TO SEE A GREAT MASTERY OVER THE SAME IN OUR FORUM !!!

AWAITING YOUR NEXT ANALYSIS !!!

MSV RULES !!!
VENKAT


Last edited by tvvraghavan on Thu Jan 10, 2008 8:44 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Mon Jan 07, 2008 10:17 pm    Post subject: Reply with quote

Dear Vaidy and Venky,

Thanks for your comments!

Dear Vaidy, your observation that MSV's music is global Music is absolute... It is really astonishing that how our legend, MSV has an inherent sense of "World Music" and a taste to enjoy & bring-out the best out of any form of music! No doubt, his music is definitely "Global" !!!

And Venky, yes how can we forget our final year project presentation... I think our Project was the best and we really stole the show... And yeah "Mandolin" part was definitely fun!

I listened to "Alli Pandhal" from "Vennira Aadai" only after I read your post. Great rhythmic pattern and as you said, its definitey complex (complexity not for the listeners, though!) I had to listen few times to understand what was done in that song! Simply amazing!!!

You have already given a quick write-up on this song and I'll surely add something to it...

It is plesantly surprising for me to see how I started the Piano series and how my list has grown right now... I'm just trying to give my adulations on his Piano Songs, but considering the volume and the quality in the Music even for a single topic like this, it is safe and is a truth to conclude that any amount of writing will not do justice to bring out all the beauties in MSV's music!

_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Jan 09, 2008 9:43 am    Post subject: Reply with quote

You are the King of Piano analysis dear Ram !

Now a days, your posts are like VVS Lakshman’s silken cover drives !!

Mellisai Mannar ROCKS through Rock and Roll ……

Believe me, I was working on Malarendra mugam ondru ….from the Yodeling angle ….. Yodeling was extensively used by Kishore Kumar ( in fact he was called Yodeling King ) and probably this was the first song in tamil cinema to see Yodeling … Our seniors may confirm this pls.

IMO, the tune / rhythm seem to have been set first and the Master must have challenged Kavignar….. Vaidy / TVVR pls check with the Master on this……..

Unnai Ondru Ketpen ……..also may fit into this rock & roll category….

Cheers Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Mon Mar 03, 2008 8:42 am    Post subject: Reply with quote

REGAL Malarendra mugam indru sirikkatum...

Kadhalikka Neramillai is a charming album. Everybody's favorite.

Very nice presentation of Aadavarallam... though I listen to soothing ammamma keladi thozhi....often.

Ram, You are always IMPRESSIVE! Thanks a lot!!

I try to catch aadavarellam... & other musicals of that film some other night,
As always, DREAMY ammamma keladi thozhi....love the elongated melody on a busy tired Sunday!!
Vinatha.

Back to top
View user's profile Send private message
viswapriyan



Joined: 14 Dec 2006
Posts: 43
Location: Chennai

PostPosted: Mon Sep 05, 2011 4:47 pm    Post subject: Reply with quote

Mr. Ram, what an early comment by me !!! If I remember right, the first rock&roll by MSV-TKR is Pathibakthi. Song title: Rock rock rock& roll.... Actually, its a fusion where the beginning blends into AtaNa. The song begins with JPC and is continued by V.N. Sundaram
_________________
endrummsv
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group