"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Neeraadum kangal inge - Vennira Aadai

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Jan 03, 2008 3:41 am    Post subject: Lyrics - Neeraadum kangal inge - Vennira Aadai Reply with quote

படம்: வெண்ணிற ஆடை
பாடியவர்: பீ. சுசீலா இசை: மெல்லிசை மன்னர்


நீராடும் கண்கள் இங்கே, போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால், உன்னை பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ?

காதலை தேடி நான் அழுதேனோ? காரணத்தோடு நான் சிரித்தேனோ?
உன்னை கண்டபோது நினைவுகள் ஏது, நீ வந்த பின்னே நிம்மதி ஏது, நிம்மதி ஏது.

(நீராடும்)

இனமறியாமல் நானிருந்தேனே, மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்தாயே, கையில் வராமல் பறித்து விட்டாயே, பறித்து விட்டாயே.

(நீராடும்)
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jan 04, 2008 5:41 am    Post subject: Reply with quote

'நீராடும் கண்கள்' இந்த பாடலின் வரிகளும், இசையும் மற்றும் பீ. சுசீலாவின் தேன் குரலும் என் மனதை வருடும்.

திரு. ஸ்ரீதர் அவர்களின் இயக்கத்தில் உருவான அற்புதமான திரைப்படம் 'வெண்ணிற ஆடை'. ஜெயலலிதா மேடம் திரை உலகுக்கு அறிமுகமான முதல் படம். இப்படத்தில் இவர் மனநிலை தவறிய இளம் விதவை. தன்னை குணப்படுத்த வந்த மருத்துவரிடம் மனம் விட்டு பழகுவார். தன் நினைவு திரும்பும் சமயத்தில், அந்த மருத்துவராக வரும் திரு. ஸ்ரீகாந்த் அவரிடம் தன் மனதையே பறிகொடுக்கிறார். ஆனால் அவர் வேறு ஒரு பெண்ணை மனதார விரும்புவது தெரிய வரும்போது, தன் மன வேதனையே இந்த பாடல் மூலம் வெளிப்படுத்துவார். இந்தப்பாடலின் வரிகளும், இசையும் அவரின் மன வேதனையை மிக துல்லியமாக வெளிப்படுத்தும். அதுவும் இந்த வரிகள்

'நீ வாரதிருந்தால், உன்னை பாரதிருந்தால் எண்ணம் மாறதிருப்பேன், இல்லையோ?'
எவ்வளவு ஆழமான வரிகள்.

இந்தப்பாடல் 'ஆபோகி' ராகத்தில் அமைந்த ஒன்று. இந்த ராகத்தில் மெல்லிசை மன்னர் பல அற்புதமான பாடல்களை தந்திருக்கிறார். அவற்றுள் ஒன்று 'கலைகோவில்' என்ற படத்தில் வரும் 'தங்க ரதம் வந்தது' .
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Fri Jan 04, 2008 10:48 am    Post subject: Reply with quote

மீனாட்சி மேடம்...

நல்ல ஒரு பாடலைப்பற்றிய நல்லதொரு துவக்கம். பாடல் வரிகள் ஒவ்வொன்றும் மனதை இதமாக வருடும் அதே வேளையில், நாயகியின் சோகத்தையும் பிழிந்து தரும்.

ஆனால் இந்த அற்புதமான பாடல், படத்தில் இடம் பெற்றதா?. எனக்கென்னவோ இல்லையென்பது போன்ற ஒரு நினைவு. 'வெண்ணிற ஆடை' படத்தை சில முறை பார்த்திருக்கும் எனக்கு, இந்தப்பாடலுக்கான காட்சி காணக்கிடைக்கவில்லை.

யாராவது விளக்க முடியுமா?.

(இது எனது முதல் தமிழ் பதிவு)
Back to top
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Jan 04, 2008 6:09 pm    Post subject: Reply with quote

Mr. Irenehastings

நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரி. இந்த பாடல் காட்சி வெண்ணிற ஆடை படத்தில் இடம் பெறாத பாடல். இந்தப் பாடலின் வரிகள் நான் எழுதி இருக்கும் காட்சிக்கு பொருத்தமாக இருப்பதால், அந்த இடத்தில் இடம் பெற்றிருக்க வேண்டிய பாடல் இது என்பது என் யூகம். இதைப்பற்றி இன்னும் நன்றாக தெரிந்தவர்கள் எழுதினால் மிக்க நன்று.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Mon Jan 14, 2008 5:40 pm    Post subject: Lyrics- Neeradum Kangal inge Reply with quote

Dear Friends,
Neeraadum kaNgaL ingae was undoubtedly a perfect song to drive the movie sequence narrated by Meenakshi mam. The old Tamil movies have had such dropouts on various considerations and often Sreedhar has had the distinction of mercilessly cutting down the song if he felt it may not add much to the movie's value. Another interesting piece of information on Vennira aadai : The song NENJATHTHILAE NEE NETRU VANDHAAI was really composed and recorded for vennira aadai but was dropped in preference for NEERAADUM KANGAL. Ultimately nenjaththilae nee netru vandhaai was accommodated in SHANTHI, as the producers, lyricist and MD agreed upon the arrangement to utilize a number already composed and recorded. One can trace many 'firsts' in Sreedhar's movie career.
It is my duty to thank Meenakshi mam who has started coming out with her perceptions helping us to recognize different points of view on a chosen item.
Warm regards Prof.K.Raman Navi Mumbai.
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Thu Jan 17, 2008 2:24 am    Post subject: Reply with quote

Thanks Professor. After I read your comment, I have come to know that the song 'nenjathile nee netru vandhai' was composed for Vennira Aadai. It is a really interesting fact.

நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய், நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
நினைவு தராமல் நீ இருந்தால் கனவுலகில் நான் வாழ்ந்திருப்பேன்.

இந்த பாடல் வெண்ணிற ஆடை படத்தில் இடம் பெற்றிருந்தால், படத்தின் கதாநாயகியின் மனதில் காதல் உணர்வு தோன்றியவுடன் அவர் பாடுவதாக அமைந்திருக்கும். 'நினைவு தராமல்........ இந்த வரிகள் மருத்துவராக வரும் நாயகன் தன்னை குணப்படுத்தாமல் இருந்திருந்தால் நாயகி மனநிலை பாதிக்கப்பட்டவராகவே அதாவது கனவுலகிலேயே வாழ்ந்திருப்பார் என்பதை அழகாக வெளிப்படுத்தும் வரிகளாக அமைந்திருக்கும்.

'நீ தர வேண்டும், நான் பெற வேண்டும், நிலவினில் ஆடும் நிம்மதி வேண்டும்'

இந்த வரிகள் தான் விரும்பும் அவரோடு சேர்ந்து வாழும்போது தனக்கு கிடைக்கப்போகும் மன அமைதியை நாயகனுக்கு சொல்லுவதாக அமைந்திருக்கும். எவ்வளவு அற்புதமான வரிகள். கவிஞருக்கு நன்றி.

இந்தப்பாடல் முழுவதும் வரும் அந்த விசில் ஓசையே இந்த பாடலுக்கு ஒரு தனி அழகை தருகிறது. அந்த விசில் ஓசைக்கு ஏற்ப சில இடங்களில் சுசீலா அவர்கள் ராகம் பாடுவது மனதை அள்ளிக்கொண்டு போகும். இதுவும் மெல்லிசை மன்னரின் இதமான இசையில் அமைந்த இன்னொரு பாடல். என் மனதையும் மிகவும் கவர்ந்த பாடல்.
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group