"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Aarodum Mannil Engum Neerodum - Pazhani

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Thu Dec 27, 2007 3:49 am    Post subject: Aarodum Mannil Engum Neerodum - Pazhani Reply with quote

“ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்”

பாடல் : “ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்”
படம் : பழனி

திரைப்படப்பாடல் எப்படி கதாபாத்திரத்தின் தன்மையுடனும், காட்சி அமைப்புடன் ஒத்து போக வேண்டும் என்பதற்கு மற்றும் ஒரு எடுத்துக்காட்டு இந்த பாடல்.

கிராமிய குடும்பத்தின் சந்தோஷங்களை, விவசாயத்தின் முக்கியத்துவத்தை விவரிக்கும் அருமையான பாடல். மெட்டுக்காக இயற்றப்பட்ட பாட்டா, பாட்டுக்காக இசைக்கப்பட்ட மெட்டா என்று பிரிக்க முடியாத இழைவு.

பிசிறில்லாமல் துவங்கும் புல்லாங்குழல், அமைதியான கிராமபுறத்து விடியற்காலை காட்சியையும், தொடரும் சந்தூரின் இசை வளமையயும் கண் முன்னே கொண்டு வரும். (சந்தூர் இசை வரும் போது அருவி விழும் காட்சி - இது காட்சி விவரிப்பில் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.வி / டி.கே.ஆர் எவ்வளவு கவனம் செலுத்தி உள்ளார்கள் என்பதற்கு சான்று). “கொடி அசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?” என்பதை போல, இசைக்காக காட்சியா அல்லது காட்சிக்காக இசையா என்ற பிரமிப்பு.

“ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்” என்று டி.எம்.எஸ் பாடும் போது, சிவாஜி கணேசனின் பரிவும், நிறைவும் தெரியும். “மண்ணிலே தங்கம் உண்டு” என்று சீர்காழி துவங்கும் போது எஸ்.எஸ்.ஆரின் துடிப்பும், “சேராத செல்வங்கள் சேராதோ” என்று பி.பி.எஸ் பாடும் போது முத்துராமனின் கனிவும் புரியும். இந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒத்து போகும் குரல் தெரிவை நான் வேறு பாடல்களில் கண்டதில்லை. “ஆறோடும் மண்ணில்” என்று உச்சஸ்தாயில் தொடங்கி, “நீரோடும்” எண்று கீழ்ஸ்தாயில் நீட்டி இறக்கும் டி.எம்.எஸ் மற்றும் சீர்காழியின் குரல்களில் தான் எத்தனை நேர்த்தி.

தாள நடையில் வரும் இசைக்கருவியின் பெயர் எனக்கு தெரியாது. பால் குவளையின் மூலம் இந்த ஒசை உண்டாவதை பார்த்திருக்கிறேன். மற்றுமொறு கருவி, பாடல் முழுவதும் ‘ட்ருய்ட்டுருய்’ என்று (தவளை கத்துவதை போன்று) செவிகளை ஊடுருவும். இவை கிராமிய கலாச்சாரத்தை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டூம். ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் போதும் நேரிடையாக கிராமத்திற்கு போய் வந்ததை போன்ற ஒரு உணர்வு. ஒரு நாளாவது இந்த மனநிறைவுடன் நாம் வாழ வேண்டும் என்ற ஏக்கம் வரும். எளிமையான இசையால் வன்மையான தாக்கம்.

எப்படி இவரால் மட்டும், காட்சி விவரிப்பை உள்வாங்கி, கற்பனை செய்து உயிரோவியமாக படைக்க முடிகிறது? எம்.எஸ்.வியுடன் நேரிடையாக சந்தித்து உரையாட வாய்ப்பு உள்ளவர்கள் இது பற்றி அவரிடம் கேட்டு விவரித்தால் தற்கால மற்றும் வருங்கால இசையமைப்பாளர்களுக்கு பாடமாக அமையும்.

மீண்டும் எம்.எஸ்.விக்கும், அவருடன் இப்பாடலுக்கு பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி !!
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Dec 27, 2007 4:42 am    Post subject: Reply with quote

Dear Ravikumar,

Great and touching write-up on a beautiful folk number by our Master...

The lines following "Pachhai Vanna Selai Katti Mutham Sinthum Nellamma.."... See how Kaviarasar has lived in those lyrics and how the lines were brought to life by the Music... As you rightly said the ability to grasp the situation by MSV / Kannadasan is simply matchless...

Thanks to Ravikumar for taking everyone here on a country-side trip..

(I modified your title as it was not appearing properly)
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
ravikumar



Joined: 12 Dec 2007
Posts: 25

PostPosted: Thu Dec 27, 2007 5:53 am    Post subject: Reply with quote

Thanks much Ram!

I too noticed that the title was all garbled, but wasn't sure how to alter it. Thanks again.

Actually, you should have said "Thanks to MSV and his team for taking everyone here on a country-side trip.." Embarassed
_________________
Ravikumar
Back to top
View user's profile Send private message
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Thu Dec 27, 2007 11:24 am    Post subject: Reply with quote

ரவி அழகான ஆனால் மனதை தொடும் விமர்சனம்
கொஞ்சம் கூட செயற்கை தனம் இல்லாத மண்ணோடு கலந்த இசை அமைப்பு.
மெல்லிசை மன்னரால் மட்டுமே முடியும். எல்லாவற்றையும் நீங்கள் எழுதி விட்டிர்கள் . கங்கை அமரன் குறிப்பிடும் போது "ஒரு பெரிய இசை கல்லூரி இங்கு இருக்கிறது நாம் வேறு எங்கும் தேடி போக வேண்டியது இல்லை" என்று மெல்லிசை மன்னர் பற்றி குறிப்பிட்டார் . இங்கு அவரது இசையை காபி அடிக்க தான் தயாராக இருக்கிறார்கள் . அவரது இசையை படிக்க தயாராக இல்லை.

ரமேஷ்
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Fri Dec 28, 2007 12:01 am    Post subject: Reply with quote

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்கள்
அதாவது ஆக்குபவன் சரியாக செய்தால் ஆக்கப்படும் பொருளும் சரியாக அமைவது போல மெல்லிசை மன்னரின் இசை அது தான் ஆக்குபவன் .. ஆக்கப்பட்ட பொருள் இந்த பாடல் .. ஆக்கப்படுவதற்கு உதவும் பொருட்கள் பாடகர்கள் இப்படி பார்த்து பார்த்து செய்த பொருள் பழுதாகுமா என்ன .. இதோ எத்தனை வருடங்கள் ஆனாலும் மாணிக்கம் போல் ஜொலிக்கத்தானே செய்கிறது..

ந‌ண்ப‌ர்க‌ள் சொன்ன‌து போல‌ பாட‌க‌ர்க‌ள் தெரிவு மிக‌வும் அற்புத‌ம். டி.எம்.எஸ், பி.பி.எஸ், சீர்காழியார் என‌ மூன்று இசை வ‌ல்லுந‌ர்க‌ளும்

பாத்திர‌த்திற்கேற்ப பாடியிருக்கும் பாங்கு ஆஹா .. ச‌ரியான‌ அள‌வுக்கோட்டில்( கொஞ்ச‌மும் இப்படி கூடி அப்ப‌டி குறைத்து இல்லாம‌ல்) பாடியிருப்ப‌து அழ‌கு அழ‌கு.

கவிய‌ர‌ச‌ரின் வ‌ரிக‌ள் ஒவ்வொன்றும் ந‌ம் நாட்டின் முதுகெலும்பு என்று க‌ருத‌ப்ப‌டும் கிர‌மாத்தையும், விவ‌சாய‌த்தையும் ம‌ண்ணோடு
க‌ல‌ந்திருக்கும் அந்த‌ பாச‌ குண‌த்தையும் ந‌ய‌மாக சொல்லியிருப்ப‌து அவ‌ரின் சிற‌ப்பு..

ப‌ழ‌நி பட‌மும் ச‌ரி இந்த‌ பாட‌லும் ச‌ரி ப‌ல‌பேருக்கு பாட‌மாக‌ இருக்க‌வேண்டிய‌வை ..


ந‌ன்றி ர‌விகுமார்
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group