"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks - Part 10 - Jazz Piano

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Dec 22, 2007 8:38 am    Post subject: A Handful of Piano Picks - Part 10 - Jazz Piano Reply with quote

A Handful of Piano Picks - Part 10

Jazz Piano (தொடர்ச்சி)

ஜாஸ் இசையில், பியானோ கொண்டு மெல்லிசை மன்னர்கள் செய்த சாதனைக் கடலில் இருந்து இன்னும் இரண்டு துளிகளை மட்டும் பார்ப்போம்.. "வர வேண்டும்" பாடலைத் தொடர்ந்து...

"விஸ்வநாதன்.... வேலை வேண்டும்"
படம்: காதலிக்க நேரமில்லை (1964)


முன்னிசை துவங்கும் நொடியிலேயே ஒரு துள்ளல் இசை - பியானோ, டிரம்ஸ், பாஸ் கொண்டு கிளம்பும் ஜாஸ் ரிதம். இந்த பாடலின் அடிப்படை - ஜாஸ் ரிதத்துடன் ஒரு அட்டகாசமான மெலடி. இந்த பியானோ இசையுடன் த்ராம்போன் - ட்ரம்பெட் கூட்டணியின் சேர்க்கை கேட்கும் ரசிகர்களை எங்கேயோ கொண்டு போய்விடும். எங்கேயோ கொண்டு போய்விட்டு மீண்டும் பத்திரமாகக் கொண்டு வந்து பல்லவியுடன் சேர்க்கும் அழகில்தான் மெல்லிசை மன்னர்கள் தங்கள் இசையின் சிறப்பை உணர்த்துகிறார்கள்.

பல வருடங்களுக்குப் பின் இந்த பாடலை நான் சமீபத்தில் கேட்ட போது, இது வேறு எதோ பாடல் என்று நினைத்தேன். த்ராம்போன் படிப்படியாகக் கீழே இறங்கும் இறக்கம்... அடடா...எப்படித்தான் இப்படி ஒரு முன்னிசை வழங்க வேண்டும் என்று தோன்றியதோ ???!!! பல்லவி தொடங்கும் வரை, முன்னிசையைக் கேட்டு "எப்படி நாம் பல்லவியைத் தொடங்குவது?" என்று கண்டிப்பாக ஒரு நொடியாவது P.B.ஸ்ரீநிவாஸ் அவர்கள் குழம்பியிருக்க வேண்டும். கிட்டார் அழகாக எடுத்துக் கொடுக்க அவர் பல்லவியைத் தொடங்குவார், உற்சாகமாக!

பல்லவி இரண்டாம் முறை பாடப்படும் போது... பின்னால் வரும் பியானோ ஃபில்லிங், கோரஸ்... அற்புதமாக இருக்கும்.

மாடிமேலே மாடி கட்டி கோடி கோடி சேர்த்து வைத்த சீமானே (பியானோ ஃபில்லிங்) -

பின்னணியில் "ஜூ..ஜூ..ஜூ" என்று கோரஸ் வந்து கொண்டே இருக்கும்

ஹலோ ஹலோ Come-On Come Out சீமானே

பின்னணியில் கோரஸ் "சீமானே", "கோமானே" எனும் வார்த்தைகளின் போது பார்ட்ஸ் (Parts Singing) பாடியிருப்பார்கள். அதீத கற்பனை.. !!!

"விஸ்வநாதன்.... வேலை வேண்டும்" எனும் இடத்தில் பாடலின் உற்சாகம் பன்மடங்காகப் பெருகி விடும்... அந்த பெருக்கத்தின் ஓட்டத்தில் இடை இசை...

தொடர்ந்து சரணம்:

"பொண்ணுங்க பேச்சுக்கு புத்தியை மாத்திக்கும் மூளையில்லாதவரே
வேட்டியை மாத்திக்க சேலையைக் கட்டிக்க வெட்கமில்லதவரே...
"

சரணத்தின் இவ்விரண்டு வரிகளின் போது பின்னணியில் மெல்லிய வயலின்(கள்) மிக அழகு. குறிப்பாக "புத்தியை மாத்திக்கும்" எனும் இடத்தில், ஒரு சின்ன Variation போல்.

"வேலையின்றி போகாது வேறு வேலை தேடாது
பாட்டுப் பாடி கூச்சல் போட்டு வேலை வாங்குவோம்
"

இவ்விடத்தில் கோரஸ் ம்ண்டும் சேர்ந்து விடும்... சரணம் முடிகையில்...

"விஸ்வநாதன்.... வேலை வேண்டும்"

இடையிசையில் ட்ரம்ஸும், அங்கங்கு பாங்கூ தட்டல்களும் அடிக்கும் கும்மாளத்தில் குழலும் சேர்ந்துகொள்ளும்...

இப்படத்தின் அதே கூட்டணியின் "வர வேண்டும்" பாடல் அறிந்துகொள்ளப்படாமல் போனதென்றால், இப்பாடல் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்தது!

சில துணுக்குகள்....

ஏ.ஆர்.ரகுமான் திரையிசையில் தனது ஐந்தாவது வருடத்தில் செய்த ஜாஸ் முயற்சி "இருவர்" திரைப்படம். பின் "காதல் வைரஸ்" எனும் படத்தில் "வான் நிலா தரும் மொழி" என்கிற பாடல், பிறகு "சில்லுனு ஒரு காதல்" படத்தில் "பறவைகள் செய்யுதே" போன்றவை ரகுமானின் சில ஜாஸ் முயற்சிகளாகும். இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், இதில் எந்த படமும் சரியாகப் போனதில்லை. இளையராஜாவின் ஜாஸ் முயற்சியான "மும்பை எக்ஸ்ப்ரஸ்" க்கும் இதே நிலை தான். மெல்லிசை மன்னர்களின் சில அற்புதமான ஜாஸ் முயற்சிகளும் அறியப்படாமலே போயிருக்கிறது. பல பாடல்கள் வெற்றி அடைந்தும் இருக்கிறது. ஆக ஒரு பாடலின் வெற்றிக்கு இவைதான் இலக்கணங்கள் என்று வரையறுத்துக் கூற முடியாது என்கிற உண்மையே இதில் புலப்படுகிறது.

மெல்லிசை மன்னரின் அடுத்த ஜாஸ் பியானோ பாடல் அடுத்த பாகத்தில்.

மெல்லிசை மன்னரின் பாடல்களுடன் பயணம் செய்து கொண்டே எழுதும் அனுபவத்தில் தோன்றுவது... அவரது இசையை விவரிக்கவோ, வர்ணிக்கவோ, விமர்சிக்கவோ எவராலும் முடியாது. விதவிதமாக வியக்க மட்டுமே முடியும்!

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:19 pm; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Sat Dec 22, 2007 10:21 am    Post subject: Reply with quote

Dear Ram,

Fantastic analysis about the song 'Viswanathan vElai vEndum'.

You know very well, the way how to tell anything very interestingly. Thatswhy your writings are very joyfyl and wonderful to read and surprise.

Thanks.
Irene...
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group