|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
saradhaa_sn
Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Sat Oct 13, 2007 3:09 pm Post subject: 'Maanaada Mayilaada' from Kalingar TV |
|
|
'மானாட...மயிலாட'
கலைஞர் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி, ஜோடி நம்பர் ஒண் நிகழ்ச்சியின் பேரக்குழந்தை என்று சொல்லலாம். காரணம் ஏற்கெனெவே 'ஜோடி நம்பர் ஒன்' நிகழ்ச்சியைத்தொடர்ந்து சன் டி.வி.யில் 'மஸ்தானா மஸ்தானா' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
மூன்றிலுமே சின்னத்திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சி. சின்னத்திரை நட்சத்திரங்கள் என்றாலே குடம் குடமாக கண்ணீர் வடிக்கவும், கையை சொடுக்கி சவால் விடவும் மட்டுமே தெரிந்தவர்கள் என்ற பலருடைய கணிப்பை மாற்றிக்காட்டியவை இந்நிகழ்ச்சிகள். திரைப்படங்களில் ஒரு பாடலில் நாலு வரிக்கு ஆடுவதற்குள் நாற்பது டேக்குகள் வாங்கும் நடிகைகளோடு ஒப்பிடுகையில் முழுப்பாடலுக்கும் தொய்வில்லாமல் ஆடும் இவர்களின் உழைப்பு உண்மையில் பாராட்டக்கூடியது. கலக்குகிறார்கள்.
நடுவர்களாக இரண்டு டான்ஸ் மாஸ்டர்கள் (கலா & பிருந்தா) இன்னொருவர் நடன நடிகை சிம்ரன். (சென்ற வாரம் நமீதா வந்திருந்தார்).
சென்ற வார நிகழ்ச்சி கண்கொள்ளா காட்சி. இதற்கு முன் வரை தற்காலத்திய குத்துப்பாடல்களுக்கு ஆடிய நட்சத்திரங்கள், இவ்வாரம் 1960 களில் வந்த பாடல்களுக்கு ஆடினார்கள். அதற்காக அவர்கள் அணிந்து வந்த உடைகளும், செட் பண்ணியிருந்த PROPERTY களும் அருமையோ அருமை.
** 'ஆடலுடன் பாடலைக்கேட்டு' பாடலுக்கு ஆடிய நிதிஷ் & ஸ்வேதா, அச்சு அசலாக பஞ்சாபி பாங்க்ரா உடையணிந்து வந்து ஆடி அசத்தினார்கள்.
** 'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்' பாடலுக்கு ராஜ்குமார் & அர்ச்சனா, நிஜக்குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியையே ஸ்டேஜுக்கு கொண்டுவந்து அசத்தியதுடன், பாடலின் ஆரம்பத்தில் அர்ச்சனா மேலேயிருந்து கயிறு மூலம் சாரட் வண்டியில் வந்து இறங்கியது அருமையிலும் அருமை.
** சந்திரபாபுவின் ராக்..ராக்..ராக் பாடலுக்கும், 'விஸ்வநாதன் வேலை வேணும் பாடலுக்கும் சதீஷ் & ஜெயஷ்ரீ ஆடினார்கள்.'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலுக்கு ஸ்டேஜிலேயே மாடி வீடு மாதிரி செட்டப் செய்து வைத்து அசத்தினர்.
** 'ஆகா மெல்ல நட மெல்ல நட' பாடலுக்கும் 'துள்ளுவதோ இளமை' பாடலுக்கும் ஜார்ஜ் & சுஜிபாலா ஆடினார்கள்.'ஆகா மெல்ல நட மெல்ல நட' பாடலுக்கு ஜார்ஜ் அருமையாக அபிநயம் செய்திருந்தார்.
** 'அன்று வந்ததும் இதே நிலா' பாடலுக்கு ராஜ்காந்த் & பாவனா அபிநயித்தனர். ராஜ்காந்த பியானோவையே மேடைக்கு கொண்டு வந்து வாசித்தது சிறப்பாக இருந்தது,
** 'உன் விழியும் என் வாளும் சந்தித்தால்' பாடலுக்கு (கோல்டன் சுரேஷ் & காயத்ரி) அதேபோன்ற உடையும் வாளும் பயன்படுத்தியதும் அருமை.
மொத்தத்தில் அறுபதுகளின் பாடல் காட்சிகள் களை கட்டின.
** 'ஒரு பெண்ணைப்பார்த்து நிலவைப்பார்த்தேன்' பாடலுக்கும் 'என்ன வேகம் நில்லு பாமா' பாடலுக்கும் ஆடிய ராகவ் & ப்ரீத்தா ஜோடி 'Best Performance' அவார்டை தட்டிச்சென்றனர். _________________ Saradha Prakash |
|
Back to top |
|
|
saradhaa_sn
Joined: 17 Dec 2006 Posts: 268 Location: Chennai
|
Posted: Mon Nov 05, 2007 7:22 pm Post subject: |
|
|
சென்ற வாரம் 'வெஸ்டர்ன் ரவுண்ட்' எல்லா ஜோடிகளும் கலக்கினார்கள். இதற்கு முந்தைய ரவுண்ட் மார்க்கையும் இதையும் சேர்த்துக் கூட்டி, ஒரு ஜோடியை எலிமினேட் செய்வதாக இருந்தார்கள். அப்படி செய்திருந்தால் ஜார்ஜ், சுஜிபாலா ஜோடி போயிருக்கும். ஆனால் நடுவர்கள் கலா, பிருந்தா, நமீதா என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. அடுத்த ரவுண்டில்தான் எலிமினேஷன் என்று சொல்ல ஜார்ஜ், சுஜிபாலா ஜோடி நிம்மதியாக மூச்சு விட்டனர்.
இந்த வார ரவுண்டில் ஜோடிகளில் ஆண்கள் பெண் வேடமிட்டும், பெண்கள் ஆண் வேடமிட்டும் ஆடினர். இரண்டு மாமா மாமி ஜோடிகள். ராகவ் பிரீத்தா ஜோடியும், ஜார்ஜ் சுஜிபாலா ஜோடியும் அவர்கள். கிட்டு மாமா வேடம் போட்ட ப்ரீத்தாவும், பட்டுமாமி வேடம் போட்ட ஜார்ஜும் பெஸ்ட் பெர்ஃபாமென்ஸுக்காக தங்க நாணயம் பெற்றனர்.
எலிமினேஷனில் மூன்று ரவுண்ட் மார்க்குகளின் மொத்தத்தை வைத்து கணக்கிட்டதில் மற்ற ஜோடிகள் படு முன்னேற்றத்தில் இருக்க இரண்டு ஜோடிகளுக்கிடையில் இழுபறி. அதில் ஜார்ஜ் சுஜிபாலா ஜோடி மயிரிழையில் தப்பி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தனர்.
'Golden' Suresh & Gayathri were eliminated.
போட்டியாளர்கள் மட்டுமின்றி நடுவர்கள் கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர், நமீதா, மற்றும் காம்பியர் சஞ்சய் அனைவரும் கலக்குகிறார்கள். _________________ Saradha Prakash |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|