"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

'Aadai muzuthum nanaiya nanaiya' - Nam Naadu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sat Sep 08, 2007 1:00 pm    Post subject: 'Aadai muzuthum nanaiya nanaiya' - Nam Naadu Reply with quote

"ஆடை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி"

(நம் நாடு)


மெல்லிசை மன்னரின் இசைக்கோலத்தில் வாலியின் வரிகளில் அமைந்த நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல்.

எல்லாப்படங்களையும் போலவே, ஒரு படத்தில் எல்லாப்பாடல்களும் நன்றாக இருக்கும் பட்சத்தில், அதிலுள்ள சில பாடல்கள் ஓகோ என்று உச்சத்துக்குப்போக சிலபாடல்கள் நிழலுக்குள் தள்ளப்பட்டுவிடும். வானொலிகளும் தொலைக்காட்சிகளும் அப்பாடல்களைக் கண்டு கொள்ளாது. அப்படி ஒரு சோகம் இந்த அருமையான பாடலுக்கும் கிட்டியது.

(இதுபோன்ற சமயங்களில் பெரும்பாலும் கதாநாயகியின் 'சோலோ' பாடல்தான் அடிபடும். 'இந்த நாடகம் அந்த மேடையில்' (பாலும் பழமும்), 'சொல்லவோ சுகமான கதை சொல்லவோ' (சிவந்த மண்) இப்படி பல பாடல்கள்.)

நம் நாடு படத்தில்....

'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே' உச்சத்தில் வைத்துப் பேசப்பட,
'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்' அதையடுத்து வர,
'வாங்கையா வாத்தியாரையா' மிகவும் பாப்புலராக,
அவற்றுக்கு கொஞ்சமும் குறைவில்லாத இப்பாடல் வசதியாக மறக்கப்பட்டது. ஆம், 'குடிகாரன் பேச்சுக்கும்', 'ஏழு வயசில இளநி வித்தவ' பாடலும் பேசப்பட்ட அளவுக்குக்கூட இப்பாடல் பேசப்படவில்லை...

தான் ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அவள் படத்தைக் கொண்டு வந்து காட்டுகிறேன் என்றும் சொல்லி குடிசைக்குள் போகும் எம்,ஜி,ஆர்., முகம் பார்க்கும் கண்ணடியைக் கொண்டுவந்து ஜெயலலிதாவிடம் காட்ட அதில் தன்னுடைய முகத்தையே கண்டு ஆனந்தம் பொங்க குதூகலத்துடன் குடிசைக்கு வெளியே ஓடும் ஜெயலலிதா அப்போது பெய்யும் மழையில் நனைந்து கொண்டே பாடுவதாக அமைந்த பாடல் இது....

படத்தில் காணும்போது முன்னிசையுடன் துவங்கும் இப்பாடல், கேசட்டுகளில் சட்டென்று பி.சுசீலாவின் குரலோடு துவங்கும்.

ஆடை முழுதும் நனைய நனைய
மழை அடிக்குதடி - நெஞ்சில்
ஆசை வெள்ளம் வழிய வழிய
அலை அடிக்குதடி
நீல விழிகள் மயங்கி மயங்கி
கதை படிக்குதடி - புது
நினைவு வந்து மனதில் நின்று
குரல் கொடுக்குதடி
அம்மம்மம்மம்மா...
அம்மம்மம்மம்மா...



இடையிசையில் சிதார் மற்றும் ஃப்ளூட்டில் மெல்ல துவங்கி பின்னர் வயலினில் வேகம் பிடித்து அக்கார்டியன் பிட்டுடன் முதல் இடையிசை முடிய, சுசீலாவின் தேன் குரலில் முதல் சரணம்....

கன்னம் கண்ணாடி காதலன் பார்க்க
கைகள் பூமாலை தோளினில் சேர்க்க
கண்கள் பொன்னூஞ்சல் மன்னவன் ஆட
நெஞ்சம் பூமஞ்சம் தேன் வழிந்தோட
பொங்குது பொங்குது எண்ணக்கனவுகள்
சொல்லுது சொல்லுது அன்புக்கவிதைகள்
ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


இரண்டாவது இடையிசையில், முதலில் வயலினும் தொடர்ந்து ஃப்ளூட்டிலும் நீண்ட இடையிசை, தொடர்ந்து இரண்டாவது சரணம்...

புண்ணியம் செய்தேனே நான் உன்னை அடைய
புன்னகை புரிந்தாயே பூமுகம் மலர
தன்னலம் கருதாத தலைவா நீ வாழ்க
பொன்னைப்போல் உடல் கொண்ட அழகே நீ வருக
உள்ளமும் எண்ணமும் உன்னிடம் வந்தது
அச்சமும் வெட்கமும் என்னுடன் நின்றது
ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ..


மூன்றாவது இடையிசையில் மனதைக் கொள்ளை கொள்ளூம் நீண்ட ஷெனாய் இசை, முடிக்கும்போது அந்த கடைசி பிட்டை மூன்று முறை வாசித்து நிறுத்தும் அழகு... அப்பப்பா இந்த மனிதரின் கற்பனைத்திறன் நம்மை வியப்பிலாழ்த்தும்...

மல்லிகை மலராடும் மங்கல மேடை
மங்கை மணமாலை சூடிடும் வேளை
இல்லறம் உருவாகும் நாள் வரும்போடு
இன்பத்தை எடுத்துரைக்க வார்த்தைகளேது
சந்தனம் குங்குமம் நெஞ்சு நிறைந்திடும்
கண்களும் நெஞ்சமும் ஒன்று கலந்திடும்
ஓ...ஓ....ஓ...ஓ...ஓ..ஓஓஓ.
.


கேட்கக்கேட்கத் திகட்டாத சுசீலாவின் இனிய குரலில் அமைந்த இப்பாடல் எனக்குப் பிடித்த சுசீலா ஃபேவரைட்களில் ஒன்று.

நமது களத்திலுள்ள ஸ்வரம் மற்றும் ராக விறபன்னர்கள் இப்பாடலை மேலும் அலசி மெருகேற்றலாமே...

அன்புடன்... சாரூ..
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sat Sep 08, 2007 7:18 pm    Post subject: Reply with quote

Excellent description on this song!

Please bring out analysis on more un-heard gems like this !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Sat Sep 08, 2007 8:04 pm    Post subject: Reply with quote

Saradha madam,

wow.... what a song and what a wonderful nerration.

This is one of my favourite number of P.Sussela, and my first priority among the songs of Nam Naadu film, comparing to other songs.

Thanks a lot for you madam, for bringing out under-shadowed songs to light. This is more importanat than talking about very super hit songs, which is known for all.

Continue your service ....
Back to top
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Mon Sep 10, 2007 3:05 pm    Post subject: Reply with quote

Dear Saro Chechi,

There is no match for you on writing in tamil. Its so so beautiful to read your posts . Very Happy

Today’s post is very well crafted in the sense , you have nicely summarized the other super hit songs from the movie and also expressed anguish on this exceptional tune but went unnoticed ! True true. U can clearly identify the chilness of shower when PS sings AMMAMMAMAAA !!!
Also, this song runs at a decent speed & gives a refereshing break to a highly politics oriented theme wherein MGR takes on his rivals in Govt depts. & those who are in public service .
Saradhaji, atleast now you will agree with me that most of the MSV-MGR songs are somewhat unique and different in style . ( ennai adikka varaadheergal idharkaaga. Naam iruvarum pala murai idhai patri sandi pottulom pala idangalil !!! Innum poduvom Very Happy Very Happy )

Somehow, MGR songs are always in different league say for ex :

1. Thangapadhakathin mele
2. Engirundho aasaigal
3. Ninaithadhai nadathiye mudipavan
4. Kungumapottin mangalam
5. Neeyedhan enakku manavaatti
6. Naam oruvarai oruvar sandhipomena
7. Ninaithen vandhai 100 vayadhu
8. Paal thamiz paal
9. Nee ennenna sonaalum kavithai
10. Pavala kodiyile muthukal poothaal
11. Ulagamengum ore mozi
12. Androru naal idhe nilavil
13. Kan moodum velayilum kalai indha kalaye
14. Enge aval endre manam
15. Viziye kadhai ezudhu
16. Paal vannam paruvam kandu

AND THE ENTIRE ULAGAM SUTRUM VALIBAN .

The above list is too small. Just few examples only.

But , if I mention about this without bias ( though I am a hardcore Nadigar Thilagam fan ) I am being dumped as a MGR worshipper Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Mon Sep 10, 2007 3:40 pm    Post subject: Reply with quote

Somehow, MGR songs are always in different league say for ex :

Aadada. giving some examples of MSV SONGS FOR NT. Just for comparison. dont take it on wrong side;

YAAR ANDHA NILAVU: I dont think till now no one come close to this refreshing orchestra/change of style in all aspects including TMS singing

ELLORUN NALAM VAZHA: Piano feast. totally different song interms of humming and orchestra.

NILAVI PARTHU VANAM SONNATHU: Listen the prelude and flute part. You will notice the difference.

KETTO KODI URUMI MELAM: combination of folk and western.

MANNA MEDAI MALARGALDUN DHEEMPAM: Base of church song. exclusive interludes.

THEDINANE VANTHTHU: Jazz type.

AAYAYAA MELLA THATTU: Again combination of western and melody.

I have not mentioned about PUTHIYA PARAVAI/KARNAN etc.

Balaji sir.Thanks for new thread.

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Tue Sep 11, 2007 2:01 am    Post subject: Reply with quote

ஆடை முழுதும் நனைய நனைய .. ஆஹா மழைப்பாடல்கள் என்றாலே சுகம் அதுவும் இந்த பாடல் கூடுதல் சுகமும். இதுவும் புதுவெள்ளத்தில் (இசை எம்.பி.சீனிவாசன்) வரும் துளி துளி துளி மழைத்துளி பாடலும் எப்பொழுது கேட்டாலும் மழையை நம் கண் முன்னே கொண்டு வரும்..

இந்த பாடலில் ஜெயலலிதாவின் அந்த துரு துரு நடிப்பும், சுசீலாம்மாவின் இழையும் குரலும் .. நம்மை மயக்கத்தான் செய்யும்

நன்றி சாராதா
Back to top
View user's profile Send private message
irenehastings
Guest





PostPosted: Mon Nov 05, 2007 11:43 am    Post subject: Reply with quote

Yesterday I was happened to watch this (aadai muzhuthum nanaiya nanaiya) song in Kalainger TV. I enjoyed every bit of this song with new dimension. When I was watching it, the analysis of saradha mam came to my mind.

What a wonderful song...!!.
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group