"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful Of Piano Picks-6 - Thairiyamaaga Chol Nee - Ram

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Aug 02, 2007 9:12 am    Post subject: A Handful Of Piano Picks-6 - Thairiyamaaga Chol Nee - Ram Reply with quote

A Handful Of Piano Picks - Song 6
Ram

"தைரியமாகச் சொல் நீ"

படம்: ஒளி விளக்கு (1968)

"A Handful Of Piano Picks" தொடரில் இதுவரை அலசப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு ரகம். "என்னைத் தெரியுமா", "காற்று வந்தால்", "வண்ணக்கிளி", "ஓ லிட்டில் ஃப்ளவர்", "நான் நன்றி சொல்வேன்", இப்போது "தைரியமாக சொல் நீ" - ஒவ்வொறு பாடலும் இசையின் ஒவ்வொறு கோணத்தைக் காட்டுவதாகும். ஆனால் அனைத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் இரண்டு - 1. மூன்று மாத்திரைகள் கொண்ட திஸ்ரம் எனப்படும் தாள நடையில் அமைக்கப்பட்ட பியானோ பாடல்கள் 2.எம்.எஸ்.வி எனும் இசையரசனின் மனமயக்கும் மெலடி.

இப்போது நம் எம்.எஸ்.வி "க்ளப்" இல் பலர் தம் உள்ளம் கவர்ந்த பியானோ பாடல்களை "A Handful Of Piano Picks" தலைப்பில் குறிப்பிடத் தொடங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் விஷயம். எம்.எஸ்.வி யின் பியானோ பாடல்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு இது எடுத்துக் காட்டு. MSVTIMES முக்கியக் குழுவின் ஒருவரான வைத்தி அவர்களின் "MY PIANO MAN" தொகுப்பு, பியானோ ரசனைக்கு ஒரு முத்தாய்ப்பு !

எந்த சூழலுக்குப் பாட்டமைப்பதாயினும் ஒரு நிறைவும் முழுமையும் கொண்ட பாடலை மட்டுமே வழங்குபவர் இசைப் புதல்வர் - மெல்லிசை மன்னர் - எம்.எஸ்.விஸ்வநாதன். இக்கருத்தை எம்.எஸ்.வி தீவிர ரசிகர் ஒருவர் மிக அழகாக வெளிப்படுத்தினார் - "எம்.எஸ்.வி Folk Music போட்டாலும் அது 'Rich'ஆக இருக்கும்" என்று. ஆணித்தனமான கருத்து. குடிபோதை சூழலில் ஒரு சோகப்பாடலுக்கு பிரம்மாண்டமான ஆர்கஸ்ட்ரேஷனுடன் அமைந்த அருமையான பியானோ மெலடியை யாரேனும் கற்பனையாவது செய்து பார்க்க முடியுமா? என்று வினவினால், "கற்பனை என்னடா... இதோ செய்தே காட்டுகிறேன் பார்" என்பதைப்போல் உருவாக்கப்பட்ட ஒரு அற்புத பியானோ பாடல்தான் "தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?"

முன்னிசையில் Brass Section னுடன் ஒருசேர்ந்து துவங்கும் String Section போதே பாடலின் உணர்வு உணர்த்தப்பட்டுவிடும். இவற்றுடன் இடையே குழப்பத்தை உணர்த்துவது போல் குழல். இது போன்ற குழலை வேறு சில சோகப் பாடல்களிலும் காணலாம் - "நெஞ்சம் மறப்பதில்லை" (சோகப் பாடல்), "மயக்கமா கலக்காமா" - போன்றவற்றில். இதே குழல் பல பாடல்களில் வேறு ரூபங்களில் இயங்கியிருப்பதையும் இனிதே காணலாம். "சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்", "திருப்பதி மலையில் ஏறுகிறாய்" (வாழ்வு என் பக்கம்) போன்ற பாடல்களில் ரயிலின் விசிலுக்கு ஏற்றாற்போல் வரும் குழல். "அவள் மெல்ல சிரித்தாள்" பாடலில் நஞ்சுண்டைய்யா விளையாடியிருக்கும் அற்புத குழலிடையிசை. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

Strings சுகமாக எடுத்துக் கொடுக்க, TMS அவர்கள் தனது கம்பீரக்குரலில் வாலியின் பல்லவியைத் தொடங்குவார். பியானோ ரிதம் பின்னணியில் ஆரம்பிக்க...

"தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?
மனிதன் தானா?"


(பின்னணியில் அமைதி)

"இல்லை"

இந்த "இல்லை" மெதுவாகக் கூறப்படுவதுபோல் இருந்தாலும் அதில் கதாப்பாத்திரத்தின் இறுக்கம் நிறைந்து கிடப்பதை நன்கு பார்க்கலாம்.

"உள்ளுணர்வை இசையால் வெளிக்கொணரும் திறன் மெல்லிசை மன்னரின் சிறப்பு" என்பது தமிழ் நெஞ்சங்கள் அனைத்தும் அறிந்த உண்மை!

"நீதான்..ஒரு மிருகம்
இந்த மதுவில் விழும் நேரம்"


இடை இடையே வந்து நிறப்பும் Strings இல் ஒரு தனி சுகம்!

திடீரென்று வித்தியாசமான பாதையில் வயலின் அருமையாகக் கொண்டு செல்ல...

"மனமும்...
நல்ல குணமும் (இங்கு ஒரு சின்ன Variation ஐ ரசிக்கலாம்)
உன் நினைவை விட்டு விலகும்"

டிரம்ஸ் அழுத்தமான தீர்மானத்திற்கு வரும். மீண்டும்..

"நீதான்..ஒரு மிருகம்...." எனும் போது பியானோ மீண்டும் துவங்கும். இவ்வரி முடிய, இடையிசை தொடங்கும்.

இடையிசை வருவதற்கு முன்னே பாடலில் எவ்வளவு சிறப்புகள் தனித்தனியே ரசிக்க வேண்டியனவாய் உள்ளன! TMS வாயிலாக சங்கதி ("உன் நினைவை விட்டு விலகும்" எனும் போது), பக்க பலமாக ஒவ்வொறு வரிக்கிடையே வரும் வயலின்கள், நடுநடுவே அமைதி காத்து இயங்கும் பியானோ-டிரம்ஸ் ரிதம் - இப்படி தனித்தனியே செதுக்கப்பட்ட இசை. இது அனைத்தையும் ஒருவராக எவ்வாறு கற்பனை செய்தார்? எப்படி அனைத்து கலைஞர்களுக்கும் தான் நினைத்தை உணரவைத்தார்? வாழ்க்கை முழுதும் எண்ணி வியக்க வேண்டிய வினாக்கள்!

இடையிசையின் போது பியானோ நிறுத்தப்பட்டு பாங்கூஸ் பிரதானமாக வரும். சரணம்...

"மானைப்போல் மானம் என்றாய்" என்று துவங்கையில் தோலக் ரித்திற்குச் சேர்வது மிக அழகு.

"வேங்கை போல் வீரம் என்றாய் - அறிவில்
உயர்வாக சொல்லிக் கொண்டாய்
"

பின்னணியில் மீண்டும் அமைதி.

"மதுவால்... விலங்கினும் கீழாய் நின்றாய்"... எனும் போது பியானோ ரிதம் மீண்டும் துவங்கும்.

"விஸ்வநாதா.... நீ எவ்வாறு இப்படி ஜீவ நதிகள் போல் பாடல்களை இசைத்தாய்?" என்று கேட்க முனைவாள் இசைத்தாய்!

"இல்லை.... இவன் இசைக் கடவுள்!" என்று பதில் தெரிந்தும் அவள் மெல்லிசை மன்னரிடம் கேட்க விரும்பும் மற்றொரு கேள்வி...


"தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?"

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:15 pm; edited 3 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Aug 02, 2007 9:32 am    Post subject: Reply with quote

Ram

U have patented PIANO PICKS now Very Happy

Again, this song is very unique & totall different in rhythm & thats MSV special !

U also must have noticed the Master's signature when he moves to tabla for the charanam

ANd while getting back to pallavi , the brush drums Smile

Again finally, this movie has full of wonderful songs & each one was damn popular those days !

TO the situation, for Makkal Thilagam fans , it would have been a rude shock to show thalaivar in such drunken mood & hence that inner consciousness taking another avatar & that person preaches the ill effects of drinking . MGR is a true legend Very Happy

Cheers to our Ram , our piano specialist Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
tvvraghavan



Joined: 15 Dec 2006
Posts: 175

PostPosted: Thu Aug 02, 2007 9:38 am    Post subject: Moving like Melody !! Reply with quote

Dear Ram,
Your writing is as melodious and moving as the song itself !!! Both ur writing and Thamizh are so beautiful....An excellent presentation !!!

Forum was missing ur writing for the past 1 r 2 weeks...

Way to go pal !!

MSV Rules !!!

Venkat
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Aug 02, 2007 3:18 pm    Post subject: Reply with quote

Dear Balaji and Venky,

Thanks much for your replies! The next song is on its way, soon!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Aug 02, 2007 3:56 pm    Post subject: Reply with quote

பொருள் வேண்டி திருடச் செல்வாய் - பெண்ணை
பெறவேண்டி விலையைச்சொல்வாய்
துணிவோடு உயிரைக்கொல்வாய் - எதற்கும்
துணையாக மதுவைக் கொள்வாய்

கேட்டால் நான் தானே மனிதன் என்பாய்


குடியின் கொடுமையை இதைவிட அருமையாக யார் சொல்ல முடியும்?

Hats off to Valee & MSV, ofcourse TMS too..

மெல்லிசை மன்னரிடம் எம்.ஜி.ஆரின் தலையீட்டால்தான் அருமையான பாடல்களைப்பெற முடிந்தது என்பதை ஒப்புக்கொள்வதற்கில்லை. அது எம்.எஸ்.வி.யின் தனிப்பட்ட அற்புத திறமை.

சமீபத்தில் 'தாயின் மடியில்' என்ற படத்தின் பாடல்களைக்கேட்டேன். ஒரு பாடல் கூட மனதைத் தொடவில்லை. அந்த இசையமைப்பாளரிடம் இருந்து ஏன் நல்ல பாடல்களைப்பெற எம்.ஜி.ஆரால் முடியவில்லை?.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Aug 02, 2007 4:38 pm    Post subject: Reply with quote

saradhaa_sn wrote:
பொருள் வேண்டி திருடச் செல்வாய் - பெண்ணை
பெறவேண்டி விலையைச்சொல்வாய்
துணிவோடு உயிரைக்கொல்வாய் - எதற்கும்
துணையாக மதுவைக் கொள்வாய்

கேட்டால் நான் தானே மனிதன் என்பாய்


குடியின் கொடுமையை இதைவிட அருமையாக யார் சொல்ல முடியும்?

Hats off to Valee & MSV, ofcourse TMS too..

மெல்லிசை மன்னரிடம் எம்.ஜி.ஆரின் தலையீட்டால்தான் அருமையான பாடல்களைப்பெற முடிந்தது என்பதை ஒப்புக்கொள்வதற்கில்லை. அது எம்.எஸ்.வி.யின் தனிப்பட்ட அற்புத திறமை.

சமீபத்தில் 'தாயின் மடியில்' என்ற படத்தின் பாடல்களைக்கேட்டேன். ஒரு பாடல் கூட மனதைத் தொடவில்லை. அந்த இசையமைப்பாளரிடம் இருந்து ஏன் நல்ல பாடல்களைப்பெற எம்.ஜி.ஆரால் முடியவில்லை?.


Ada ennamma neenga .

WHat a lovely song with superb tune & orchestration & wonderful lyrics ! Why dont u appreciate the greatness of the song.
WHy u are triggering a needless argument on MGR here ?
And nobody denies MSV's individual talent. Better focus on the song .
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Aug 02, 2007 5:32 pm    Post subject: Reply with quote

S.Balaji wrote:

Ada ennamma neenga .

WHat a lovely song with superb tune & orchestration & wonderful lyrics ! Why dont u appreciate the greatness of the song.

Dear Balaji Anna...

I already mentioned about the greatness of the song in the first part my post. (Also I mentioned this song in my thread "songs of oLi viLakku".
S.Balaji wrote:

WHy u are triggering a needless argument on MGR here ?

I definitely expected that you will reply for that para. First, you only mentioned about MGR in your previous post here.
எம்.ஜி.ஆரின் படப்பாடல்கள் HIT ஆவது அவருடைய தலையீட்டால்தான் என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. அது இல்லையென்று சொல்லத்தான் இதைக் குறிப்பிட்டேன்.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Tue Aug 07, 2007 9:26 am    Post subject: Reply with quote

[color=darkblue]அன்புள்ள ராம்

இளவயதிலிருந்தே என்னை மயக்கிய பாடல் !

பாலாஜி சொல்லியிருப்பது போல் பல்லவியில் டிரம்ஸ் ப்ரஷ், சரணத்தில் அருமையான தபலா ! எனக்கு தாள அறீவை ஊட்டிய பாடல்களில் இதுவும் ஒன்று.

வாலியின் 'நச்' என்று பாடல் வரிகள், மெல்லிசை மன்னரின் காலத்தைக்கடந்த இசை !

உன் அருமையான அலசல் !

ஏன் அப்பா ( எம்.எஸ்.வி) இப்படி 50 வருடங்களுக்கு முன்பே 100 வருடங்களுக்கு பின் வரவேண்டியதைக்கொடுத்து விட்டு, திருவான்மியூரில் தேமேனென்று அமர்ந்துவிட்டீர்கள் ?

ராம், தொடரட்டும் உன் 'பியானோ' பணி !

ராம்கி[/color]

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Tue Aug 07, 2007 10:52 am    Post subject: Reply with quote

Dear Mr. Ram

A wonderful analysis about a wonderful song. All songs in Oli Vilakku are beautiful compositions and in vareities.


Saradha madam

You are right. There is an unnecessary propoganda was spread that MGR will always involve in tune selections and song recordings, and thatswhy his songs are popular. As you rightly said, if it is true why cant he get the same hit songs from other music directors?.

Can anybody show a hit song from 'Thalaivan'? (SMS)
Can anybody show a hit song from 'Navarathnam'? (Kunnakudi)
Can anybody show a hit song from 'Pattikkattu Ponnaiah'? (KVM)

But what MSV sir tuned for him are always hit, even if it is a failure movie, like 'oru thaai makkal'.
Back to top
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Tue Aug 07, 2007 8:56 pm    Post subject: Reply with quote

Dear Ram,
Great writing on this unique Song!... Your தமிழ் is something so impressive!...

Given the situation behind the Song, it is indeed amazingly surprising that the Genius has comeout with a Melody, yet successfully representing the Feel!...

As you have rightly pointed out, Vaali's Lyrics and TMS's Voice add enormous value to the cause. Being one of the most ardent Fan(atic) of Kaviyarasar, I must also add, I consider Vaali as yet another great Lyric Writer, with a true potential. The Osai Nayam in his Lyrics (especially when he has written for our Genius) is truly superlative.

With Love
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Aug 08, 2007 2:12 am    Post subject: Thanks! Reply with quote

Dear Dad, Irene and NVS and all...

Thanks for all your replies..

Dear NVS, I read from your other post that you were not well. Hope you are doing good now... Please come back with your next attack (I mean the next article). "MSV Club" is eagerly awaiting that... Very Happy
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group