"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

A Handful of Piano Picks(3) - "Vannakkili"

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Wed Apr 11, 2007 7:29 pm    Post subject: A Handful of Piano Picks(3) - "Vannakkili" Reply with quote

A Handful of Piano Picks - Song 3
Ram

"வண்ணக்கிளி சொன்ன மொழி"

1964 இல் வெளிவந்த "தெய்வத் தாய்" திரைப்படத்தில் வாலியின் வரிகளில் அமைந்த 'தலைவர்' பாட்டு. 'தலைவர்' என்று நான் குறிப்பிட்டது 'இசைத் தலைவர்' எம்.எஸ்.விஸ்வநாதனை. (ஜெயா டி.வி தொகுப்பாளர்கள் மன்னிக்கவும்)

மக்கள் திலகத்தின் பாடல்களில் மெல்லிசை மன்னர்(கள்)இன் மெட்டுக்கு ஒரு தனி மெருகிருக்கும் என்பதற்கு மற்றும் ஓர் எடுத்துக்காட்டு இந்த பாடல். இந்த பாடலின் முன்னிசையைக் கேட்க ஆரம்பிக்கும் பொழுதே ஒரு குதூகலம். "புதுமை" என்பது மெல்லிசை மன்னரின் பாடலுக்கு புதிதில்லை என்றாலும், புதுமையை ஒவ்வொரு பாடலிலும் எவ்வாறு வைத்தார் என்பது தான் வியப்பு.

இத்தொடரின் முதல் இரண்டு பாடலிலும் Rhythm முதல் அடியில் Stress செய்யப்பட்டிருக்கும். அதாவது 123 123 123 123 என்பதைப் போல். ஆனால் "வண்ணக்கிளி"யில் 123 123 123 123 எங்கிறவாறு வரும்.

"Predictable Patternized Melody" யைத் தவிர்ப்பதில் தனது ஒவ்வொரு பாடலிலும் ரொம்பவே கவனமாக இருந்திருக்கிறார் மெல்லிசை மன்னர். முன்னிசை மெல்லிய எளிய ஸ்வரங்களுடன் கூடிய கொஞ்சம் அக்கார்டியனுடன் அழகாகத் துவங்கும். அடுத்து பியானோ ரிதம் எடுக்கப்படும். அது முடிகையில் பல்லவி.

பல்லவி துவங்கையில் பின்னணியில் கிட்டார் அருமையாகத் துவங்கும். "அன்புள்ள மான் விழியே", "யார் அந்த நிலவு", "மெல்ல நட மெல்ல நட" போன்ற பாடல்களில் வரும் கிட்டார் தமிழ்த்திரை பார்த்திராதவை. அதுபோல் இப்பாடலின் பல்லவியில் பின்னணியில் வரும் கிட்டார் ரொம்பவே வித்தியாசமான வியப்பான ஒன்று. பல்லவி துவங்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, பல்லவி துவங்கையில் இயங்க ஆரம்பிக்கும். உன்னிப்பாகக் கேட்டால் அது பாடலின் Chord Pattern ஐ உணர்த்துவது விளங்கும். ஆழ்ந்த ஸ்வர ஞானஸ்தனால் மட்டுமே வாத்தியங்களை இது போல் உபயோகம் செய்ய முடியும்!

"Elevating A Song"....பாடல் கேட்பவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே தெரியாமல் இன்பத்தின் உயரத்திற்குக் கொண்டு செல்வது மெல்லிசை மன்னரின் தனித்துவம். மேற்சொன்ன கிட்டாருடன் பல்லவி கேட்பவர்களை அள்ளிக்கொண்டு போகும் போது திடீரென்று ஒரு பியானோ ரிதம் பிட், வயலினுடன் சேர்ந்து குழலுடன் முடிந்து இசைப் பயணிகளின் சுகத்தை அதிகரித்துவிடும். "An Unpredictable Element". அந்த சுகத்தில் தான் டி.எம்.எஸ் "புள்ளிமயில் புன்னகையில்" என்று தொடங்குவார். இந்த இடம் இன்னொரு முன்னிசையுடன் இரண்டாம் பல்லவி போல் இருக்கும். "Unpatternized Melody". எம்.எஸ்.வி இசையின் தனிச்சிறப்புகளைச் சொல்லி மாளுமா ???

பாடலின் இடையிசையின் போது மீண்டும் அந்த இரண்டாவது ரிதம் வந்துவிடும். சரணத்தின் போது பாடலின் பிரதான பியானோ-நடை.
Sequencers, Synthesizers, Loop Generators எதுவும் இல்லாமல் ஒரு பாடலை இவ்வளவு அழகாகக் கற்பனை செய்யும் திறன் (Perceiving a Song) நம்மை ஒரு கேள்வியில் கொண்டு விடுகிறது. "இவர் உண்மையில் இலப்புள்ளியில் தான் பிறந்தாரா? இல்லை எங்காவது அண்டார்டிகாவில் அவதாரமாய்த் தோன்றி இங்கு வந்தாரா?"

சுசீலா சரணம் துவக்கம்.

"பொட்டு வைத்த வட்ட முகம் என்ன முகமோ - அதைத்
தொட்டுவிடத் துடிப்பதிலே என்ன சுகமோ..ஓ..ஓ..ஓ...ஓ
"

அருமையான இறக்கம். மறுமுறை "பொட்டு வைத்த" முடிகையில் சின்ன அக்கார்டியன் Variation னுடன் டி.எம்.எஸ்..

"கன்னி மனமாளிகையில் காவல் நிற்கவா..."

பின்னணியில் அமைதி.

"அங்கே... காவல் நின்ற மன்னவனைக் கைப்பிடிக்கவா"

Harp போல ஒரு சின்ன பியானோ Roll-out. மீண்டும் "வண்ணக்கிளி..".

எம்.எஸ்.வி யின் பாடல்களை "இது இந்த ராகம். இது இந்த தாளம். இங்கு பியானோ வரும். அங்கு வேறொன்று வரும்.." என்கிற அளவில் தான் கூறமுடியுமே தவிற "இது அனைத்தையும் தாண்டி எவ்வாறு பாடல் முழுவதிலும் உளங்கொள்ளை போகும் இனிமை நிறைந்து கிடக்கிறது?" என்கிற கேள்விக்கு, விஸ்வநாதன் மட்டுமில்லை, அந்த விஸ்வாமித்திரன் வந்தாலும் பதில் கூற முடியாது!

(தொடரும்)

A Handful of Piano Picks - Listing
Part 1 - Ennai Theriyuma
Part 2 - Kaatru Vandhaal
Part 3 - VannakkiLi
Part 4 - Oh Little Flower
Part 5 - Naan Nandri Solven
Part 6 - Thairiyamaaga Chol Nee
Part 7 - Maanicka Thottil
Part 8 - Collection of Piano Songs
Part 9 - Jazz Piano1 - Varavendum Oru Pozhuthu
Part 10 - Jazz Piano2 - Viswanathan Velai VeNdum
Part 11 - Jazz Piano3 - Enna Vegam Nillu Bama
Part 12 - Rock and Roll - Aadavarellam, Malarendra Mugamadhu
Part 13 - Unnai Ondru Ketpaen
Part 14 - Kannirendum Minna, Vidiya Vidiya
Part 15 - "Periya Idathu PaNN" - Kannenna Kannenna Kalanguthu
Part 16 - "Paal Thamizh Paal"
Part 17 - Chella KiLigaLaam
Part 18 - An Ensemble of Jazz Rhythms(1) - Thottu Kaattavaa
Part 19 - An Ensemble of Jazz Rhythms(2) - Hey..Naadodi (Anbe Vaa)
Part 20 - Piano Thisram - Jillendru, Manamedai, Senthamizh Paadum, Pillai Thamizh Paadukiren, Ninaithathai Nadathiye
Part 21 - "Rocking Piano" - Adadaa enna azagu, Allippanthal, Yaaro aada therinthavar
Part 22 - MSV-SPB Mesmerism
Part 23 - Avan Ninaithaana
Part 24 - "Expressions" - Athanin MuthangaL, Piano Fillers in different songs
Part 25 - Layam - An analysis on different beat patterns in Tamil Film Music
Part 26 - The Finale - Top 3 Piano songs of MSV
_________________
Ramkumar


Last edited by Ram on Wed Jun 17, 2009 4:13 pm; edited 4 times in total
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Wed Apr 11, 2007 7:43 pm    Post subject: Reply with quote

"
Quote:
Elevating A Song"....பாடல் கேட்பவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே தெரியாமல் இன்பத்தின் உயரத்திற்குக் கொண்டு செல்வது மெல்லிசை மன்னரின் தனித்துவம். மேற்சொன்ன கிட்டாருடன் பல்லவி கேட்பவர்களை அள்ளிக்கொண்டு போகும் போது திடீரென்று ஒரு பியானோ ரிதம் பிட், வயலினுடன் சேர்ந்து குழலுடன் முடிந்து இசைப் பயணிகளின் சுகத்தை அதிகரித்துவிடும். "An Unpredictable Element". அந்த சுகத்தில் தான் டி.எம்.எஸ் "புள்ளிமயில் புன்னகையில்" என்று தொடங்குவார். இந்த இடம் இன்னொரு முன்னிசையுடன் இரண்டாம் பல்லவி போல் இருக்கும். "Unpatternized Melody". எம்.எஸ்.வி இசையின் தனிச்சிறப்புகளைச் சொல்லி மாளுமா ???


Vow amazing Ram Very Happy

Varikku vari I am running through the song in my mind & enjoying every ALPHABET of your posting ! especially the one quoted !

Pottu vaitha vattam mugam - Scintillating start to a charanam !

And after TMS finishes - Kanni manamaligayil kaval nirkavaaa

U know, suddenly the music will come to a grinding halt

And then Puratchi Thalaivar ( sorry TMS ) resume with Ange kaval nindra mannavanaiiiiiiii.......... kai pidikkavaaaa Shocked Very Happy

Besides, that nice usage of humming by PS during the second interlude - All wildest imagination .

Outstanding write up Ram. Hats off Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Apr 11, 2007 7:49 pm    Post subject: Fantastic Analysis Reply with quote

Fantastic Analysis Ram. You have not only dealth with the nuances of the song in full length but also discussed the usages of various instruments that is absolutely unique only to MSV!!! I feel the mention of instruments should also get linked to our Master's Orchestra Crew I have sent to you. I feel there could be no better moment to upload that list than doing it right now. Any suggestions Ram / Roopa???

Cheers
VAIDY

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Thu Apr 12, 2007 12:27 pm    Post subject: Re: A Handful of Piano Picks(3)-"Vannakkili"-Ram Reply with quote

'வண்ணக்கிளி சொன்ன மொழி' பற்றிய அருமையான அலசல். படிக்கப்படிக்க படவசப் படுத்துகிறது. இப்படிப்பட்ட அருமையான படைப்புகளின் அருமைகளை உணராமல், 'யாரோ' ஒருசிலர் மட்டுமே சாதித்ததாகச் சொல்லி தலையில் தூக்கி வைத்து ஆடுவதைப் பார்க்கும்போது

குற்றாலத் தருவியிலே குளிக்காமல் - பக்கத்துக்
கற்றாழைக் குட்டையினை கலக்கிப் புரளுதல் போல்


என்ற கவிதை வரிகளே நினைவுக்கு வருகின்றன.

Ram wrote:
1964 இல் வெளிவந்த "தெய்வத் தாய்" திரைப்படத்தில் வாலியின் வரிகளில் அமைந்த 'தலைவர்' பாட்டு. 'தலைவர்' என்று நான் குறிப்பிட்டது 'இசைத் தலைவர்' எம்.எஸ்.விஸ்வநாதனை. (ஜெயா டி.வி தொகுப்பாளர்கள் மன்னிக்கவும்)

சபாஷ் தலைவா.... அசத்திட்டீங்க..!

(இந்த 'தலைவா' மெல்லிசை மன்னருக்கு மட்டுமல்ல. அந்த இசைத்தலைவரை அடையாளம் காட்டிய, இக்களத்தின் தலைவர் ராம் அவர்களுக்கும்).

Ram wrote:
பல்லவி துவங்கையில் பின்னணியில் கிட்டார் அருமையாகத் துவங்கும். "அன்புள்ள மான் விழியே", "யார் அந்த நிலவு", "மெல்ல நட மெல்ல நட" போன்ற பாடல்களில் வரும் கிட்டார் தமிழ்த்திரை பார்த்திராதவை. அதுபோல் இப்பாடலின் பல்லவியில் பின்னணியில் வரும் கிட்டார் ரொம்பவே வித்தியாசமான வியப்பான ஒன்று.


இதுபோன்ற அவருடைய வித்தியாசமான ஸ்பெஷல் கிடார் டச்சுகள் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்று.....

"அவள் பறந்து போனாளே... என்னை மறந்து போனாளே" பாடலின் முன்னிசை.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
baroque



Joined: 15 Feb 2007
Posts: 478
Location: San jose, CA, U.S.A

PostPosted: Thu Apr 12, 2007 9:22 pm    Post subject: Reply with quote

Nice write up on the elements of the composition, Ram!! Need to check out the song while going through your presentation, will double the pleasure. Vinatha.
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Apr 12, 2007 9:39 pm    Post subject: Reply with quote

Thanks to everyone for the reply!

It was an expression of my feelings when I listen to one of the greatest Piano Numbers by "The Piano Man" MSV.

Vaidy uncle, the "Orchestra" page has started its way to MSVTimes; All can find the announcement soon!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Apr 19, 2007 10:23 pm    Post subject: Reply with quote

Ram dear

Where is the next ? Is it NAAN NANDRI SOLVEN Very Happy Mellsai mannarin kuralodu thuvakkum oru arpudhamana padal !

I am getting restless. Pl post the next song . Wish to see more from you.
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Apr 19, 2007 11:34 pm    Post subject: Reply with quote

Balaji Anna...

Next song is on its way. (Await for the surprise)...

Video Gallery is taking a big jump.... It is going to go LEAPS and HEIGHTS. Thats the reason for the small delay in my Piano series.

Again, dear members, await the sweet announcement on "Video Gallery" section !!! You need to experience to believe that. All only from our MSVTimes.com !!!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Fri Apr 20, 2007 10:19 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்,
நினைவில் நிற்க கூடிய நடை, அற்புதமான பாடலுக்கு அணி செய்துள்ளது.

தொடரட்டும் உங்கள் திருப்பணி.

அன்புடன்
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
rajeshkumar_v



Joined: 19 Apr 2007
Posts: 79

PostPosted: Tue Apr 24, 2007 12:47 am    Post subject: Reply with quote

Vannakili is delightful duet by TMS & PS and mellifluous tune by MSV

wonderful pick
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group