"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"Kavithaanjali"

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
Srinivass NV



Joined: 12 Feb 2007
Posts: 86
Location: Hosur

PostPosted: Sun Apr 08, 2007 9:22 am    Post subject: "Kavithaanjali" Reply with quote

கடவுள் என்ற விந்தையான இயக்கம், தன் மனம் கவர்ந்த மலர்களுக்கு மட்டும் சரித்திரத்தில் இடம் தந்து விடுகிறது!..... காலம் சென்ற பின்னும் காலாவதியாகாத பத்திரங்களாய் மின்னிக் கொண்டிருக்கும் அத்தகைய மலர்களுக்கிடையேயும் ஒரு விந்தையுண்டு. ஒரே வாசமுள்ள இரு மலர்களை சரித்திரம் காணக் கொடுத்ததில்லை!...... அப்படி கடவுள் காதலித்த மலர்களில் கவி மலராய் இன்றும், என்றும் வாழுந்து கொண்டிருக்கும் ஒரு மஹா கவிஞனைப் பற்றிய சிறு குறிப்பே இந்த முயற்சி !......

சமுத்திரத்தின் முன்னே நின்று கொண்டிருக்கும் ஒரு சிறு குழந்தை, அந்த மஹா சமுத்திரத்தின் பரிமாணங்களை தன் அனுபவமற்ற கண்களால் அளந்து பார்க்க முனைந்து விட்ட கதையிது!..... பிழைகளிருந்தால் அதில் சமுத்திரத்தின் பங்கேதுமில்லை......

பக்தி இலக்கியம், காவியம், காப்பியம், வாழ்வியல் இலக்கியம்....... என்கிற நீண்டதெரு தமிழ் வரிசை, ‘கண்ணதாசன்’ என்ற இந்த மஹா கவிஞனையும் வணங்கி ஏற்றுக் கொண்டுள்ளதற்கு சரித்திரம் சாட்சி !...... தமிழ் மறந்த,... தரம் கெட்ட இந்த நிகழ்காலத் தமிழர்களின் மத்தியில் தமிழின் செல்வாக்கை நிலை நிறுத்த கடவுள் செய்து பார்த்த கடைசி முயற்சியே அந்தக் கவிப்பேரரசனின் அவதாரம்.

கடவுள் தோற்றாறோ வென்றாறோ?...... வருங்காலம் சான்றுரைக்கும்!.......

ஒரு மாபெரும் இசைக் காவிய நாயகனைப் பற்றியதான இந்த அரங்கம், இந்த மஹா கவிஞனைப் பற்றிய சொற்களையும் சுமந்து நிற்க வேண்டிய அவசியம் என்ன?........
1. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து காவியங்கள் படைத்த இரண்டு யுகக் கலைஞர்களைப் பற்றியும் செய்தி சுமக்க இதை விடவும் மரியாதைக்குரிய அரங்கம் இருக்க இயலாதென்கிற அவசியம்.....
2. இந்த மஹா கவிஞனை கௌரவப் படுத்தாமல் இந்த அரங்கத்தின் மாண்பு முழுமையடையாது என்கிற மற்றொரு அவசியம்......

5000 திரையிசைப் பாடல்கள்....... 4000 தனிக் கவிதைத் திரட்டு....... காவியங்கள், காப்பியங்கள், கதைகள், உரைகள், நாடகங்கள், சரிதைகள், கட்டுரைகள், என 105 தமிழ்த் தெகுப்புகள்!!........ இவையனைத்தும் 54 வயதிற்குள் அந்த சிறுகு>டல்பட்டிக் குயில் சாதித்துவிட்ட சரிதம்!....... கண்ணதாசன் என்கிற காவியத்தில் திரை இசைப் பாடல்கள் என்கிற ‘அரிதாரம் புசிய’ எழுத்துக்கள் ஒரு அத்தியாயம் மட்டுமே!....... அந்த மஹா கவிஞனை முழுமையாக அறிய வேண்டுமெனில் அவனது மற்ற அத்தியாயங்களையும் அறிய முற்படுவது நன்று!.......

அறிய முற்பட்டவற்களுக்கு, அவனது விஸ்வருபம் விருந்தாகுமென்பது மறுப்புக்கு அப்பாற்பட்டது!....... ஒரு நாவுக்கரசரால், ஞானசம்பந்தனால், அருணகிரியால், வள்ளலாரால், கம்பனால், வள்ளுவனால், இளங்கோவால், பாரதியால், தாசனால்........ எட்ட இயலாத மிகப்பெரிய பாமர சமுதாயத்தை தமிழால் தொட்ட ஒரே கவிஞன் இவன்தான்!!........ வாழ்க்கையின் ஒவ்வொரு நுண்ணிய உணர்வுகளுக்கும் இவனொரு பாடல் படைத்திருக்கிறான்..... திரையிசைப் பாடல்களாகவோ....... தனிப் பாடல்களாகவோ !.......

“கண்ணதாசனின் பாடல்களுக்கு அரியாசனம் கொடுத்து அமர வைத்தவர் மெல்லிசை மன்னர்!” - வைரமுத்து

திரு.வைரமுத்து தெரிந்தோ தெரியாமலோ அற்புதமாகச் சொல்லியிருக்கிறார்.......

உயிரோட்டமுள்ள ஒரு சக்கரவர்த்தியின் உடம்பை சுமக்கும் ஆசனம் மரியாதைக்குரிய அரியாசனமாகிறது!...... அவ்வகையில் பார்த்தால் MSV என்கிற மஹா கலைஞனின் ‘இசை’ இந்த மஹா கவிஞனின் ‘பாடல்’ என்கிற உயிரோட்டமுள்ள ஒரு அரசனுக்கு அரியாசனம் கொடுத்து பாடலையும் பெருமைப்படுத்தி தானும் பெருமைக்குரியதாக ஆகியிருக்கிறது........

ஒருவேளை!........

“தண்ணீரில் முழ்காது காற்றுள்ள பந்து...... என்னோடு நீ பாடிவா சிந்து!...... இந்திரன் தோட்டத்து முந்திரியே...... மன்மத நாட்டுக்கு மந்திரியே!.....” என்பது போன்ற உயிரற்ற தேகங்களை இந்த மஹா கலைஞனின் ‘இசை’, காலம் முழுவதும் சுமக்கும் துர்ப்பாக்கியம் நேர்ந்திருக்குமெயானால்!!! ???

காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி !!!........


கலங்காதிரு மனமே!..... உன்
கவலைகள் தீருமொரு தினமே! ......


என்று தன் திரைக் காவிய வாழ்கையைத் துவங்கினான் ‘எட்டாவது’ மட்டுமே படித்த அந்த சிறுகு>டல்பட்டி முத்தைய்யா!...... பிற்காலத்தில் அவன் வாழ்க்கை அவனுக்கு கற்றுக் கொடுத்த பாடங்களனைத்துமே பாடல்களாயின! அனுபவமென்ற மிகப் பெரிய ஆசீர்வாதம் அந்த இளம் கவிஞனை காலத்தை வெல்லும் உயரங்களை நோக்கி அழைத்துச் சென்றது. அவன் பயணித்த பாதையில் அவன் சந்தித்த வாழ்க்கைப் பாடங்களே அவனை ஒரு மஹா கவிஞனாக ஆக்கவும் செய்திருந்தன.

மிக மெல்லிய உணர்வுகளைக் கொண்டிருந்த அந்தக் கவிக் குழந்தையின் நெஞ்சை ஒரு காலக் கட்டத்தில் கண்ணன் ஆட்கொண்டது இந்த மானுட சமுதாயம் செய்த தவமாகிப் போனது!...... “படைப்பதனால் என் பேர் இறைவன்” என்று இருமாந்த இந்தக் கவிஞன், அந்த பரமாத்மாவை உணர்ந்த பின் படைத்திட்ட படைப்புக்கள் மேலும் மகத்தானவை. ஒரு படைப்பாளி மற்றொரு படைப்பாளிக்கு ஆத்மார்த்தமாகச் செய்த சமர்ப்பணங்களிவை!........

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே - விழியன்பொழுக
மெச்சிய மாதரும் வீதிமட்டே - இருகைத் தலைமேல்
வைத்தழும் மைந்தரும் இடு காடுமட்டே - பற்றித் தெடரும்
இருவினை புண்ணிய பாவமுமே!.......


என்கிற மகான் பட்டினத்தாரின் பாடல் மானுட சமுதாயத்து பாமரப் பிரஐக்கும் எட்டும் வண்ணம்.......

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ!........


என்பதாய், இந்த மஹா கவிஞனின் வாக்கில் எளிமையாய் உருவெடுத்தது!......

இறைவனே பாடுவதாகப் பாடல்களை எழுதக் காலம் இவனுக்கு வாய்ப்பளித்தது!....... கம்பனுக்கும் கிடைக்காத பேறு!!!....... அவ்வையாகப் பாடினான் - அடியவரைப் பாடினான், மாமனையும் பாடினான் - மருகனையும் பாடினான், கருணையே உருக்கொண்ட கர்ணனையும் பாடினான், தத்துவங்கள் பாடினான் - தமிழ் வாழப் பாடினான், பிள்ளைமொழிப் பாடினான் - பெண்மையினைப் பாடினான், துவண்டுவிட்ட மனங்களுமே துளிர்த்துவிடப் பாடினான், தளர்ந்துவிட்ட முதுமையுமே தெளிந்துவிடப் பாடினான்......... இப்படிக் காலன் அழைத்த தருணம் வரைப் பாடிக் கொண்டிருந்த அந்த யுகக் கவிஞனைப் பற்றி சொல்லிக் கொண்ட போகலாம். அவற்றை எழுதும் பேறு எனக்கு இன்னமும் கிடைக்குமாயின் நிச்சயம் எழுதுவேன்!......

தற்போது நிறைவு செய்ய வேண்டியிருப்பதால் ஒன்றைச் சொல்லி நிறைவு செய்கிறேன்!.......

MSV என்கிற மஹா இசைக் கலைஞனின் முதல் ரசிகனாய் இந்த மஹா கவிஞனே இருந்திருக்க இயலும்!....... இவனது ரசனை, இலக்கியம், இசை, என்கிற எல்லைகளைக் கடந்து பிரமிக்க வைக்கும் அன்பெனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி!.......

தான் இறந்த பின் தன் குடும்பத்தினர் எப்படி அழுவார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டாத இந்த மஹா கவிஞன், தன் மனதிற்கினிய ‘தம்பி விசு’ தன் இறப்புக்கு எப்படி அழுவான் என்று தெரிந்து கொள்ள விரும்பினான். அதற்கென்று ஒரு நாள் தன் உதவியாளரிடம், தான் இறந்துவிட்டதாகத் தகவல் சொல்லச் சொல்லி தம்பி விசுவுக்கு செய்தியனுப்பினான். கதறியபடி ஓடி வந்த தம்பியின் கண்ணீரில் அவன் தன் மேல் வைத்திருக்கும் பாசம் கண்டு நெகிழ்ந்தான் அந்தக் கவிஞன்.

தான் மிகவும் ஆராதித்த ‘இசைப்பேரரசன் விஸ்வநாதனுக்கு’ தன் சாகா வரம் பெற்ற வரிகளால் சிம்மாசனம் கொடுத்து கௌரவப் படுத்தியிருக்கிறான் இந்த மஹா கவிஞன்! எப்படித் தெரியுமா??

“எனக்குத் தெரிந்த வரையில் தம்பி விசுவநாதனைப் போல் ஒரு இசை மேதை இந்த மண்ணில் இதுவரைப் பிறந்ததில்லை!........ இனிப் பிறக்கப் போவதுமில்லை!”.......

மேற் சொன்ன வரிகள், அந்த மஹா கவிஞன், தன் தம்பி விசுவநாதனைப் பற்றி ப்ரத்யேகமாய் எழுதியருக்கிற ஒரு அத்தியாயத்தின் இறுதியில் உரைத்திருக்கும் தீர்ப்பு !!!.......

ஓரு உன்னதமான மஹா கவியின் வாக்கு பொய்க்குமோ !!??......

With Love
_________________
NVS
Back to top
View user's profile Send private message Send e-mail
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Sun Apr 08, 2007 11:10 am    Post subject: Reply with quote

A praise presented with poise!
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Sun Apr 08, 2007 2:45 pm    Post subject: Re: "Kavithaanjali" Reply with quote

Srinivass NV wrote:

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே - விழியன்பொழுக
மெச்சிய மாதரும் வீதிமட்டே - இருகைத் தலைமேல்
வைத்தழும் மைந்தரும் இடு காடுமட்டே - பற்றித் தெடரும்
இருவினை புண்ணிய பாவமுமே!.......


என்கிற மகான் பட்டினத்தாரின் பாடல் மானுட சமுதாயத்து பாமரப் பிரஐக்கும் எட்டும் வண்ணம்.......

வீடு வரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ!........


என்பதாய், இந்த மஹா கவிஞனின் வாக்கில் எளிமையாய் உருவெடுத்தது!......

With Love


When I read this, my mind automatically diverted to my message which I posted in another thread. As I feel that, it will be the appropriate place for that, I re-post here

இந்நேரம் நான் படித்த ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. ஒரு கல்லூரிப் பேராசிரியை சொன்னது. அவர் சொன்னதை அவர் வாயிலாகவே தருகிறேன். அவர் சொல்லியிருந்தார்:

"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது, இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி, கிட்டத்தட்ட கண்னதாசன் பணடைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது. ஒலிபரப்பாகி சுமார் அரை மணி நேரம் கழித்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர, எடுத்துப்பேசினேன். மறுமுனையில் "நான் கண்ணதாசன் பேசுகிறேன்" என்று கேட்டதும் எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

கண்னதாசன் தொடர்ந்து பேசினார். "சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பணடைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள், உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில், பள்ளிக்கூடமே போகாத, மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன்.

உதாரணமாக, திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட
'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?.

ஆனால் அதையே நான்

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்"

என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?" என்று கண்ணதாசன் கேட்டார். அவர் சொன்னதைக் கேட்டது முதல் கண்னதாசன் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது".

இவ்வாறு அந்தப் பேராசிரியை சொல்லியிருந்தார்.

கவியரசர் சொன்னது ஒப்புக்கொள்ளக்கூடிய விஷயம்தானே..!!.
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sun Apr 08, 2007 6:21 pm    Post subject: VAAZHGA NEE PALLAANDU!!! Reply with quote

MSVTIMES.COM INAIYA THALATHIN INAIYILLA KAVIGNNANEY, VAAZHGA NEE PALLAANDU!!!
Dear NVS,

Awesome writing that shouls inspire everyone. I want to take a print out along with your spoof on play and show it to our Legend. Really thought provoking stuff. Keep it up and write many more.....

MSV SCORES FOREVER
CHEERS
VAIDY
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Mon Apr 09, 2007 2:11 pm    Post subject: Reply with quote

Dear Vaidy

Please show important postings and song analysis (especially ENNAI THERIYUMA)to MSV if possible once in a week. I think HE WILL FEEL VERY HAPPY .

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Mon Apr 09, 2007 8:56 pm    Post subject: On the Anvil Reply with quote

Dear Ramesh,

Thanks for your suggestion. I have already worked out the modus operandi and should be doing the same with in a span of 15 days. Will keep you all posted on this. Currently MSV is very busy with recordings for a devotional album and the movie recording is slated for the 3rd week. So will be able to show him once he is free from his work load.

Regards
vaidy
_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group