"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Use of Flute by Mannar & Land Classfcn in Tamil Literatu

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Apr 06, 2016 10:38 am    Post subject: Use of Flute by Mannar & Land Classfcn in Tamil Literatu Reply with quote

Use of Flute by Mannnar and Land classification in Tamil Literature

மெல்லிசை மன்னரின் இசையில் புல்லாங்குழலுக்கென தனி இடம் உண்டு. அவருடைய இசையமைப்பில் பல்வேறு விதமான சூழ்நிலைகள், பல்வேறு விதமான பூகோள அமைப்புகள், ஏன் வரலாற்று நிகழ்வுகளிலும் கூட புல்லாங்குழலின் துணை கொண்டு தான் சொல்ல நினைத்ததை சொல்லியிருக்கிறார்.

தமிழிலக்கியத்தில் கூறப்படும் ஐவகை நிலங்களுக்கும் கூட புல்லாங்குழலை அவர் பயன்படுத்தியிருக்கிறார். ஆறோடும் மண்ணில் பாடலைப் பொறுத்த மட்டில் மருதம் எனப்படும் நிலவகைத் திணையில் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ஆறோடும் மண்ணில் பாடலைப் பொறுத்த மட்டில் மருதம் வகைத் திணையில் அடங்கும். அதே நேரம் அமைதியான நதியினிலே பாடலைப் பொறுத்த மட்டில் நெய்தலில் அடங்கும். பாடலின் பல்லவியிலேயே நதி என்கிற வார்த்தை நெய்தலையொட்டி அமைகிறது. நெய்தல் என்றால் கடலும் கடல் சார்ந்த பகுதி நிலமும் அடங்கிய திணையாகும். என்றாலும் நீர் நிலைகளுக்கும் அதைப் பொருத்திக்கொள்ளலாம். அந்த வகையில் பார்த்தால் அமைதியான நதியினிலே நெய்தலில் அடங்கும். அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு பாட்டைப் பொறுத்த மட்டில் முதல் முறை இசைக்கப்படும் போது கிராமத்து இளைஞன் நதியோரத்தில் பாடுவதாக காட்சியமைப்பு. படத்தில் அது செட்டில் படம் பிடிக்கப்பட்டாலும் கதைப் படி கிராமத்து நீர் நிலையின் அருகில் அவர்கள் ஓடியாடி பாடுவதாக வருவதால் இதுவும் நெய்தலில் அடங்கும்.

அதே அம்மாடி பாடல் இரண்டாவது முறை பாடும் போது அதில் புல்லாங்குழல் நகரத்து சூழ்நிலையில் வாசிக்கப்பட்டிருக்கும்.

இதே போல மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படுவதால். புதிய பறவை படத்தில் இடம் பெற்ற சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல் குறிஞ்சி நிலத்திணையில் அடங்கும். அதிலும் புல்லாங்குழல் மலைப்பிரதேசத்தின் எதிரொலியோடு இசைக்கப்பட்டிருக்கும். இதற்கு இன்னொரு உதாரணம் அன்று ஊமைப் பெண்ணல்லோ பாடல். அதிலும் சரணத்திற்கு முந்தைய பின்னணி இசையில் புல்லாங்குழல் மலை சாரலை எதிரொலிக்கும் வகையில் வாசிக்கப்பட்டிருக்கும்.

பாலை இந்தப் பாலையைப் பொறுத்த மட்டில் சிவந்த மண் பாடலை உதாரணமாகக் கொள்ளலாம். மன்னர் இதற்கு இந்த எகிப்திய நடனங்களுக்கு உபயோகப்படுத்தியிருப்பார். பட்டத்து ராணி பாடலில் பரவலாக புல்லாங்குழலைப் பயன்படுத்தியிருப்பார். ஆனால் அதன் பிரயோகம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். அரேபிய பெல்லி நடன வடிவமைப்பிற்கேற்ப புல்லாங்குழலின் தொனி இருக்கும். நாடி வந்த பூங்கொடி சரணத்திற்கு முன் அந்த மேடை சுழலும் போது இந்த இசையைக் கேட்கலாம்.

https://www.youtube.com/watch?v=U9-euO33lw0 -

நெய்தல் நிலத்துக்கு வாசிக்கும் புல்லாங்குழல் கவனியுங்கள்.

https://www.youtube.com/watch?v=-Yy7z8IlP6w -

இதுவும் நெய்தலில் அடங்கும். இன்னும் சொல்லப் போனால் கடல் மேலேயே பாடும் பாட்டு. இந்த புல்லாங்குழலின் ஓசையை கவனியுங்கள்.

https://www.youtube.com/watch?v=Mq3DDO7gNYg - இதுவும் நெய்தலில் தான் அடங்கும். அதே புல்லாங்குழல் ஓசை தான். ஆனால் அதனுடைய உணர்வில் வித்தியாசம் கவனியுங்கள்.

https://www.youtube.com/watch?v=_5yRH4RxlBE - மெல்லிசை மன்னரின் இந்த உத்திக்கு மிகச் சிறந்த உதாரணம். ராஜா படத்தில் இடம் பெற்ற கல்யாணப் பொண்ணு பாடல். சரியாக முதல் சரணம் பாடி முடிக்கும் வரை புல்லாங்குழல் இடம் பெறாது. முதல் சரணத்திற்கு முந்தைய பின்னணி இசையில் அக்கார்டினும் பியானோவும் அதகளம் பண்ணும். சரியாக இரண்டாவது சரணத்திற்கு முந்தைய பின்னணி இசை துவங்கும் போது புல்லாங்குழல் துவங்கும். காட்சியில் இருவரும் படகில் ஏறுவது போல் அமைக்கப்பட்டிருக்கும். இதுவும் நெய்தலில் அடங்கலாம்.

https://www.youtube.com/watch?v=gBhWIFpCOhc - மருதம் ... வயலும் வயல் சார்ந்த நிலமும். இதற்கு மெல்லிசை மன்னரே பாடிய இந்தப் பாடல் மிகச் சிறந்த உதாரணம். படம் சவாலே சமாளி. அன்னை பூமியென்று மண்ணை வணங்குகிறோம்.

நெய்தல் நிலப்பகுதியில் ஒலிக்கப் படும் புல்லாங்குழலிசைக்கு உதாரணமாக மேலும் இரு பாடல்கள்.

https://www.youtube.com/watch?v=_mE0NVcJ5cA

https://www.youtube.com/watch?v=_ibZksuZpCY
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Tue Apr 12, 2016 11:05 pm    Post subject: Reply with quote

Sir,
Really enlightening! Beautiful analysis and how beautiful is God's gift to us!
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group