|
"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
|
View previous topic :: View next topic |
Author |
Message |
ragasuda
Joined: 17 May 2007 Posts: 1532
|
Posted: Wed Sep 30, 2015 3:11 pm Post subject: My feeling |
|
|
தமிழ் சினிமாவின் பல்வேறு கால கட்டத்தில் பல்வேறு இசையமைப்பாளர்கள் மக்களின் ரசனைக்கேற்ப அதே சமயம் தரத்தில் சற்றும் குறையாத பாடல்களைத் தந்துள்ளார்கள். எத்தனையோ பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பினைப் பெற்றுள்ளன. அதில் இளையராஜாவும் உண்டு. விதிவிலக்கு யாருமில்லை.
மற்றவர்களுக்கும் மெல்லிசை மன்னருக்கும் வித்தியாசம் எப்போது தெரியவரும்
ஒரு பாடலின் கம்போஸிங்கில் உள்ள முழுமை - அதில் பாடகரின் குரல் வளம், அவருடைய ஸ்ருதி, எங்கெங்கு சங்கதிகள் தேவையோ அங்கே மட்டும் அதை வரவழைக்கும் இசையமைப்பாளரின் ஆளுமை, பாடலின் வரிகளுக்கு முக்கியத்துவம், காட்சிப்படுத்தப்படும் போது பாடலின் முக்கியத்துவம் என்பது போன்ற பலவற்றையும் உட்கொண்டு அந்தப் பாடலை வெளிக்கொண்டு வரும் மேதைமை, இவையெல்லாவற்றிலும் தலையாயதாய் நிற்பது மெல்லிசை மன்னரின் இசைத் திறமை மற்றும் புலமை. இது இல்லாமல் பின்னணி இசை..
இந்தப் பின்னணி இசையில் தான் உலகத்திலே ஒருவனென உயர்ந்து நிற்கிறார் மெல்லிசை மன்னர். அவருடைய ரசிகர்களில் பெரும்பாலானோர் அவருடைய வெறியர்களானதற்குக் காரணமே அவருடைய பின்னணி இசை தான். இதை வைத்து பின்னாளில் மற்றவர்களும் பின்னணி இசையில் உலக மகா அதிசயங்களை செய்து விட்டதாக ஊடகங்கள் தங்கள் விமர்சனங்களை முன்வைத்தன. மெல்லிசை மன்னரின் இசையமைப்பில் வெளிவந்த படங்களுக்கான விமர்சனங்களில் பாடல்களைப் பற்றிக்கூட விமர்சிக்க மனம் வராத ஊடகங்கள் பின்னாளில் வந்த வேறு இசையமைப்பாளர்களின் படங்களை தூக்கி வைக்க வரிந்து கட்டிக்கொண்டு புறப்பட்டது அவர்களின் அணுகுமுறையில் உள்ள நடுநிலைமையைக் கேள்விக்குறியாக்கியது.
அதிலும் ஒரு சில படங்களில் இசையமைப்பாளர் சில காட்சிகளில் என்ன இசையை பின்னணியில் அமைப்பது என்று புரியாமல் அந்தக் காட்சியை அப்படியே விட்டு விட்டால், அதை அப்படியே ஆஹா.. மௌனத்தையே பின்னணி இசையாய்த் தந்து விட்டாரே என்று உச்சாணிக் கொம்பில் அவருடைய இசையை பல்வேறு ஊடகங்களின் மூலமாக கொண்டு சென்று விடுவதையும் நாம் பார்த்திருக்கிறோம்.
எல்லாம் காலத்தின் கோலம் _________________ Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com |
|
Back to top |
|
|
|
|
You cannot post new topics in this forum You cannot reply to topics in this forum You cannot edit your posts in this forum You cannot delete your posts in this forum You cannot vote in polls in this forum
|
Powered by phpBB © 2001, 2005 phpBB Group
|