"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

"Maadhavi Pon MayilaaL"

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Thu Mar 15, 2007 8:35 pm    Post subject: "Maadhavi Pon MayilaaL" Reply with quote

"மாதவிப் பொன் மயிலாள்"
படம்: இரு மலர்கள் (1967)

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நல்லிசையுடன் வாலியின் வரிகள் இணைந்து உருவான அற்புதமான பாடல்.

எந்த ஒரு இசைப் பரிமாணத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் பிரம்மிப்பூட்டும் விஷயங்களை மிக எளிதாகப் புகுத்துவதில் எம்.எஸ்.வி ஒரு வித்தகர். உதாரணமாக "ராகம்" என்கிற தலைப்பை எடுத்துக் கொள்வோம். ஒரு ராகத்தின் "Nuances" என்று சொல்லப்படும் மெல்லிய உணர்வுகளை அழகாய் வெளிக் கொண்டு வருவது, மனித சிந்தனைக்கு அப்பாற்பட்ட வகையில் ராகத்தைப் பாடல்களில் வழங்குவது, ஓரே ராகத்தை வெவ்வேறு பாடல்களில் பற்பல கோணங்களில் காண்பிப்பது போன்ற தனித் தன்மைகள், எம்.எஸ்.வி என்னும் இசை வேந்தனின் கிரீடத்தில் காணப் படும் ரத்தினக் கற்கள்.

இவ்வேந்தன் கைப்பட்ட கரஹரப்ரியா ராகமும் மேற்கூறிய கூற்றிற்கு விதிவிலக்கல்ல. "கர்ணன்" திரைப் படத்தில் வரும் "மகாராஜன் உலகை ஆளலாம்" கரஹரப்ரியாவில் அமைந்த அருமையான காவியக் காதல் பாடல். இப்பாடல் படத்தில் இல்லை என்பது சோகம் தோய்ந்த உண்மை என்றாலும், அவ்வுண்மையால் பாடலின் சிறப்பு சற்றும் குறையவில்லை என்பது மற்றொரு உண்மை.

இளையராஜாவின் இசையில் "நெற்றிக்கண்" படத்தின் "மாப்பிள்ளைக்கு மாமன் மனசு" என்ற பாடல் மேற்கத்திய பாணியில் அமைக்கப் பட்டதற்கும், "அழகன்" படத்தில் மரகதமணி இசையில் "சங்கீத ஸ்வரங்கள்" பாடல் ஒரு புதுமை என்றும் போற்றல்கள் இருந்தாலும், கரஹரப்ரியாவில் இது போன்ற நவீனங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டு அமைதியாக அமர்ந்திருக்கும் முடி சூடா மன்னன், மெல்லிசை மன்னன். "மனிதருள் மாணிக்கம்" படத்தில் "I'll sing for you" பாடல் புதுமைகளால் செதுக்கப்பட்டதாகும். Western தழுவலுடன் இந்திய Classical ராகமான கரஹரப்ரியாவில் உருவாக்கப்பட்ட இப்பாடல் "Fusion" என்னும் இசைச் சங்கமத்திற்கும், இசையில் மெல்லிசை மன்னரின் முற்போக்குச் சிந்தனைக்கும் மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது.

இதே ராகத்தில் பாரம்பரிய நடனப் பாடலாக அமைக்கப்பட்ட மற்றொரு பாடல் "மாதவிப் பொன் மயிலாள்". தேர்ந்த கர்னாடக இசைப் பாடகருக்கும் சவாலாயிருக்கும் இப்பாடலை டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் மிக எளிதாகப் பாடியிருப்பதன் மூலம், அவரது இசைத் திறனை அறியலாம்.

ஒரு சிறிய ஆய்வு. இந்த பாடலில் ஸ்வரப் பின்னல்களும், நடன ஜதிகளும், மிருதங்க சொல் கட்டுக்களும் ஏராளமாக இருப்பதைப் பார்க்கலாம். 8 அட்சரம் (beats) உடைய ஆதி தாளத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல். ஒரு அட்சரத்தில் 4 மாத்திரைகள் (counts) கொண்ட காலப்பெருமாணம் (speed). ஆக...

8 (beats) * 4 (counts) = 32.

மொத்தம் 32 மாத்திரைகள் கொண்ட தாளக் கட்டு. இப்பாடல் சமத்திலிருந்து (from start of the beat) துவங்காமல் 3 மாத்திரைகள் தள்ளி துவங்கும்.

"கருப்புப் பணம்" படத்தின் 'Rock-and-Roll' பாணியில் அமைந்த "ஆடவரெல்லாம்" பாடலும், "மணிப்பயல்" லில் "நான் ஆடினால்" பாடலும் 3 மாத்திரைகள் தள்ளி துவங்கும் பாடல்கள். "புதிய பறவை" யில் "உன்னை ஒன்று கேட்பேன்" பாடல், 2 மாத்திரை தள்ளி துவங்கும் பாடல். "சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு" 1 மாத்திரை தள்ளி துவங்கும் பாடல். "சந்திரோதயம் ஒரு பெண் ஆனதோ" மாத்திரைகள் தள்ளாமல், சமத்திலிருந்து (from the beat start) எடுக்கப்பட்ட பாடல்.

நமது ஆய்வுப் பாடலான "மாதவிப் பொன் மயிலாள்" க்கு வருவோம். பாடலில் ஒரு கட்டத்தில் நீண்ட ஜதிகள் சொல்லப்பட்ட பின் பாடல் மீண்டும் துவங்கும். அந்த சொல் கட்டுக்களை வேறு விதங்களிளும் வழங்கியிருக்க முடியும். எவ்வாறு?

ஒரு தனி ஆவர்தனக் கோர்வையை (Finishing sequence in a percussion solo) 3 முறை வாசித்தபின் பாடல் மீண்டும் துவங்கப் பட வேண்டும் என்பது ஒரு நியதி. ஒரு 8 அட்சரப் பாடத்தைக் கோர்வையாக எடுத்துக் கொண்டால், அது 3 முறை வாசிக்கப் பட்டு, பின் "மாதவிப் பொன் மயிலாள்" துவங்கப் பட வேண்டும். ஆக...

8 அட்சரம் (32 மாத்திரை) + 8 அட்சரம் (32 மாத்திரை) + 8 அட்சரம் (32 மாத்திரை) + 3 மாத்திரை -> "மாதவிப் பொன் மயிலாள்" பாடல் துவக்கம்.

இங்கு 32+32+32+3 ஆகவும் அல்லது 3+32+32+32 ஆகவும் வாசிக்கலாம். ஆனால் 33+33+33 ஆக வாசிப்பதுவே அழகு. இந்த கடைசி முறையைத்தான் எம்.எஸ்.வி அவர்கள் அழகாகக் கையாண்டுள்ளார். எவ்வாறு என்பதைப் பார்ப்போம். டி.எம்.எஸ் அவர்கள் மிருதங்கப் பிண்ணணியில் ஸ்வரமாகப் பாடுவது:

ரி கா . மா . ப (6)
த நீ . ஸா . ரி (6)
க ரீ . நீ . த (6)

(மிருதங்கம்)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5) (TMS குரலுடன்)

6+6+6+5+5+5 = 33 (முதல் 33 முடிவு)

ஸ ரீ . கா . ம (6)
ப தா . நீ . ஸ (6)
ரி ஸா . நீ . த (6)

(மிருதங்கம்)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5) (TMS குரலுடன்)

6+6+6+5+5+5 = 33 (இரண்டாம் 33 முடிவு)

ரி கா . ஸா . ரி (6)
நி ஸா . தா . நி (6)
க ரீ . நீ . த (6)

(மிருதங்கம் + TMS குரலுடன்)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5)
த தி கி ண தோம் (5)

6+6+6+5+5+5 = 33 (மூன்றாம் 33 முடிவு)


TMS கம்பீரமாக "மாதவிப் பொன் மயிலாள்" மீண்டும் துவக்கம்.

எம்.எஸ்.வி உடன் இருந்த மற்ற இசை ஞானஸ்தர்களுக்கும் இந்த எளிமையான, அழகான கோர்வை உருவான பெருமையில் பங்குண்டு.

ராகங்களில் எனக்கு ஆவல் வர முதற்காரணமாக இருந்த என் தாய் வசந்தாவிற்கும், அந்த ஆவல் வளர வாய்ப்புகள் அளித்த என் தந்தை ராம்கி அவர்களுக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இப்பாடலை MP3 வடிவில் அளித்த என் நண்பன் வெங்கிக்கும் நன்றி.

எம்.எஸ்.வி அவர்களுக்கு அளித்த வாழ்த்து மடலின் கடைசி வரிகளுடன் இந்த ஆய்வை முடிக்கிறேன்.

"உன் இசைக்குச் சாகாவரம் தந்த காலம்
உனக்கும் அவ்வரம் தந்திட வேண்டுகிறோம்.
வணங்குகிறோம் !!!"


ஏகலைவ ரசிகன்,
ராம்குமார்.
_________________
Ramkumar


Last edited by Ram on Mon Mar 26, 2007 10:25 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Thu Mar 15, 2007 11:54 pm    Post subject: Reply with quote

Beautiful writeup about Madhavi pon mayilal dear Ram !

And that too in Tamil !

Its a clinical / professional analysis Very Happy

Besides, coming from a mirudhanga vidhwan like you adds colour .

True. It’s a beautiful compo of MSV .

And don’t forget the combination :

NAdigar thilagam
Natiya peroli
TMS
Valee

This song is a gem & a classic lesson on how to handle a classical ragam like karaharapriya !

I have heard Mr. Madurai Mani ( who was associated with MSV during his halcyon days ) analysis of this song through his cassette .

Shall we say that this song is an epic of a composition !?

All songs from this movie are outstanding ones. Infact, MSV had given a variety like Maharaja oru maharani, kadavul thandha iru malargal , Annamitta kaigalukku, Velli mani osayile .


Finally, Happy married life dear Ram .
Back to top
View user's profile Send private message Send e-mail
P. Sankar



Joined: 03 Feb 2007
Posts: 142

PostPosted: Fri Mar 16, 2007 9:57 am    Post subject: Reply with quote

Balaji Saab,

How could you miss the evergreen duet "Mannikka Vendugiren" from the same film?

P. Sankar.

S.Balaji wrote:
Beautiful writeup about Madhavi pon mayilal dear Ram !

And that too in Tamil !

Its a clinical / professional analysis Very Happy

Besides, coming from a mirudhanga vidhwan like you adds colour .

True. It’s a beautiful compo of MSV .

And don’t forget the combination :

NAdigar thilagam
Natiya peroli
TMS
Valee

This song is a gem & a classic lesson on how to handle a classical ragam like karaharapriya !

I have heard Mr. Madurai Mani ( who was associated with MSV during his halcyon days ) analysis of this song through his cassette .

Shall we say that this song is an epic of a composition !?

All songs from this movie are outstanding ones. Infact, MSV had given a variety like Maharaja oru maharani, kadavul thandha iru malargal , Annamitta kaigalukku, Velli mani osayile .


Finally, Happy married life dear Ram .
Back to top
View user's profile Send private message Send e-mail
Ramesh.P



Joined: 07 Dec 2006
Posts: 177
Location: Chennai

PostPosted: Fri Mar 16, 2007 10:54 am    Post subject: Reply with quote

Dear Ram

Hats off to your article about this song. I would like to point out one more thing. Whenever I heard this song I feel some GAMBEERAM in this composistion.

Please write about I WILL SING FOR YOU.

thanks

regards
ramesh
Back to top
View user's profile Send private message Send e-mail Yahoo Messenger
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Mar 16, 2007 1:50 pm    Post subject: Madhavippon mayilaal Reply with quote

Dear Ram

It is an excellent analysis from you on the great song.
The writing especially its tamil scripts and language are wonderful.

In fact whenever I hear the song (during my morning walk), I used to
accompany the song with Aadi Thala with my hands, I always found a
difference which I used to wonder only , without getting any answer.

Now your article explains that and it is an amazing analysis.

As Saradha wrote : " Mellisai Mannarin Padalkalai thonda thonda idhu
pondara adhisayangal kidaithukkonde irrukkum !!!" - True.

Pl keep writing like this for the benefit of the rasikas and visitors.

Yes .. as you had acknowledged I inspired you listen to MSV's song
and it is your turn - You are inspiring me to write whatever small way I can.

Regards
Ramki

_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
saradhaa_sn



Joined: 17 Dec 2006
Posts: 268
Location: Chennai

PostPosted: Fri Mar 16, 2007 2:35 pm    Post subject: Reply with quote

Dear Ram...

It is an excellent analysis about the song 'Madhavi pon mayilal' from Iru Malargal.

It is a wonderful and evergreen song, which is being heared everyday in any part of the Tamil world. A fentastic composission by the Great Mellaisai Chakravarthi. (As Balaji anna said, the complete Iru Malargal album contains vareities of songs and all are hits too).

You have done a keen analysis with Ragam, Thaalakkattu, Swaram, Beats, Counts etc..etc.., which a musical man (like you) only can do.

I am already amazing on your dad's analysis on 'Oru naal iravil' in PanathOttam, and now you have gone further steps more.

Yes........

"A Tiger's kid can never be a Cat"


(by the way, I have sent a post thro your Yahoo mail. Kindly go through)
_________________
Saradha Prakash
Back to top
View user's profile Send private message
Ram



Joined: 23 Oct 2006
Posts: 782

PostPosted: Fri Mar 16, 2007 10:09 pm    Post subject: Manikka Isai! Reply with quote

எம்.எஸ்.வி யின் பாடல்கள் மாணிக்கக் கற்கள். ஆனால் பல மாணிக்கங்கள் மண்ணுக்கடியில் புதைந்து கிடப்பது வருத்தமளிக்கும் உண்மை. அந்த மாணிக்கங்களை பூமியில் இருந்து வெளியே கொண்டுவந்து உலக மக்களின் காட்சிக்கு வைக்க வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் உருவாக்கப் பட்டதுதான் இந்த MSVTIMES.COM.

மாணிக்கமெடுக்கும் சிறப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கையில் பெருமிதமாய் உள்ளது. பதிலளித்த சக குடும்பத்தார்க்கு நன்றி.

S.Balaji wrote:
Shall we say that this song is an epic of a composition !?
அதில் சந்தேகமென்ன பாலாஜி அண்ணா?

S.Balaji wrote:
Finally, Happy married life dear Ram
நன்றிகள்!

msvramki wrote:
You are inspiring me to write whatever small way I can.
அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம்!

saradhaa_sn wrote:
A fentastic composission by the Great Mellaisai Chakravarthi
சரியாகச் சொன்னீர்கள் சாரதாக்கா.

(உங்கள் கடிதத்திற்கு என் தந்தை பதிலளித்துள்ளார். என் பதில் கூடிய விரைவில்)
_________________
Ramkumar
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Mar 17, 2007 3:46 pm    Post subject: Reply with quote

Shankarji

Ennai mannikka vendugiren Very Happy No second thoughts about this beautiful song !

And Ram , I really admire your admiration towards MSV as I have not seen many guys of current generation appreciating or even have the intent to listen to such composers of yesteryears. I dont blame them because the trend is different now & naturally the interests are tuned accordingly.
I must appreciate your parents for having groomed as such . Hats off Very Happy

The beauty of Mellisai Mannar's music is that its everlasting. One will be hearing even after 50 years . Very Happy
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sat Mar 17, 2007 7:29 pm    Post subject: ENNA ENNA VAARTHAIGALO RAM!!! Reply with quote

Dear Ram,

Thank you for enlightening me on Maadhavi Pon Mayilaal.... But remember the other day when we were listening to this song, came the sangathi... maaaaaaaaaaaadhavi pon mayilaaaaaaaaaaaaal thogai virithaaaaaaaallllllll to end the song!!! What a genius of a composition Ram? The song ends with an amazing ensemble of Pancha Vaadhyam (normally played during Kerala festivals-espicially the Trichur Pooram) which no onle else has dared to use. MSV is a rare phenomenon Ram!!! Please continue and by the way Tamizh Pulavarey, eppadi Ayya tamizhil ivvalu aghagaga.... en kanney pattu vidum polirikkirathu Ram!

Cheers
Vaidy

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
irenehastings
Guest





PostPosted: Sun Mar 18, 2007 6:57 pm    Post subject: Reply with quote

mr. ram

a deep analysis about 'madhavi pon mayilal' song. we are expecting more and more 'maanikangal' from you.

as balaji sie mentioned, all songs are gems in that film. already saradha madam covered the song 'annamitta kaigalukku', which is in a seperate thread.

s.balaji sir,

you can also cover one song from iru malargal, in your own way of analysis. i noted many occations, when you cover a song, apart from music, you will describe about the piscturisataion also, which give more attraction to the report.

again thank you mr. ram for your glorious writing in tamil. keep it up.
Back to top
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group