"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

'Sonnadhu nee thaana'

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Oct 18, 2014 4:36 pm    Post subject: 'Sonnadhu nee thaana' Reply with quote

'சொன்னது நீதானா ! '

இந்த பாடல் பற்றி பல நாட்களாக என் உணர்வின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியிருப்பேன். ஆயினும் பாடல் பற்றி நினைக்கும் பொழுதும் அல்லது பாடலை கேட்டு முடிந்த பின்னும் ஏற்படும் உணர்வினில் எண்ணங்கள் எழ மறுத்தன. இன்று எப்படியும் எழுதி விட வேண்டும் என்று துணிகிறேன்.

இந்த பாடலை ஒரு சோக பாடல் என்று பொதுவாக விளக்கம் சொல்லலாம். ஆயினும் இதில் சோகம் மட்டும் தானா உள்ளது. சோகம், தாபம், விம்மல், விசும்பல், துக்கம், மயக்கம் ,அச்சம் ,ஏக்கம்,வேகம், ஆச்சரியம், தெளிவு ,உறுதி என பல உணர்வுகளை அடக்கி உள்ள பாடல். பொதுவாக MSVயின் பாடல்கள் உணர்வுகளின் அடிப்படை கொண்டது என்பதனை அறிவோம். இப்பாடலில் அது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

பாடல் எழுதி இசை அமைக்கப்பட்டது. பாடலின் பல்லவி நாம் கேட்கும் முறையில் எழுதப்பட்டதா என்று யோசித்தோமானால் அவ்வாறு இல்லை என்பது புரியும். எவ்வாறு எழுதப்பட்டது? கீழ் கண்ட முறையில் எழுதப்பட்டிருக்கலாம்.

'சொன்னது நீதானா சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் என் உயிரே
இன்னொரு கைகளிலே யார் நானா
எனை மறந்தாயா ஏன் என் உயிரே'

இவ்வாறு தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த வார்த்தைகளுக்கு இசை என்ற பெயரில் இசை சுரசாயம் பூசினால் சுமார் 20 அல்லது 25 நொடிகளில் பல்லவி முடிந்துவிடும். ஆயினும் அவ்வாறு தான் உள்ளதா? 4.31 நிமிடங்கள் செல்லும் இந்த பாடலின் இந்த நான்கு வரிகள் மட்டும் சுமார் 1.51 நிமிடங்கள் ஆக்கிரமிக்கின்றன. MSV அவர்கள் ஒரு பாடலின் பல்லவி அந்த பாடலுக்கு முகத்திற்கு ஒப்பானது என்று அடிக்கடி கூறுவார். பல்லவியிலே நம்மை அடித்து போட்டுவிடுகிறார்.

இது எவ்வாறு நிகழ்ந்தது? அதன் காரணம் மேற்குறிப்பிட்ட வரிகளின் சந்தம் உடைக்கப்பட்டு பிரித்து பிரித்து இசை கோர்வை செய்யப்பட்டது. முன்பெல்லாம் நான் ஒரு பாடலின் இசை பற்றி மட்டுமே பேசி வந்த போது இவ்வாறு சந்தம் பிரித்து பார்க்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தியது நண்பர் வத்சன் தான். இதனை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறுவேன். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது தான் எவ்வாறு உணர்வுகள் அந்த வார்த்தைகளுக்கு உயிரூட்டம் பெறுகிறது என்று புரியும்.

சரி சந்தம் எவ்வாறு பிரிக்கப்பட்டது என்று பார்க்கலாம்.

சொன்னது நீதானா ! (இங்கு ஒரு pause)
நாம் சொல்லும் ஒரு விஷயம் நாம் யாரிடம் சொல்கிறோமே அவர்களை சென்றடைந்து அவர்களின் கவனத்தை ஈர்த்ததா என்று எண்ணி பார்க்கும் நேரம் தான் இந்த pause உணர்த்துகிறது. பாடலின் காட்சியை கவனியுங்கள். அந்த வார்த்தை வந்தவுடன் நாயகன் அவள் முகம் காண முடியாமல் திருப்பி கொள்கிறான்.

மீண்டும்

'சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே'

இங்கு நீ என்ற வார்த்தைக்கு ஒரு அழுத்தம். ஒரு முறை எழுதப்பட்ட 'சொல்' என்ற வார்த்தை மூன்று முறை பாடப்பட்டு விம்மலும் விசும்பலுமாக வெளிப்படுகிறது.

MSV பாடல்களில் பாடலை பாடுபவர்கள், அந்த காட்சி மற்றும் அதன் அடிப்படையில் வரும் வார்த்தைகளின் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் என்று அல்லாமல் அந்த பாடலுக்கு உரிய இசை கருவிகள் வாசிப்பவர்களும் அந்த உணர்வினை துல்லியமாக வெளிப்படுத்துவார்கள். இந்த பாடலில் வரும் பிரதானமான இசை கருவியான சிதார் அதனை மெய்சிலிர்க்க வைக்கும் விதத்தில் வெளிப்படுத்தும்.

மேற்கூறிய வார்த்தை முடிந்தவுடன் வரும் சிதார் இசை இதன் சோகத்தையும் உருக்கத்தையும் வெளிப்படுத்துவதை உணரலாம். மீண்டும்

'சொன்னது நீதானா
சொல் சொல் சொல் என் உயிரே'

தான் இறக்க நேரிட்டால் அவள் வேறு ஒருவனை மணந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்திய அவனுக்கு, அவன் மனைவி கேட்கும் கேள்வி இந்த பல்லவி. திருமனத்திற்கு முன் தான் வேறு ஒரு ஆடவனை விரும்பி இருந்தாலும் மற்றொருவனுக்கு மனைவி ஆன பின் எவ்வாறு அவன் கேட்கலாம் என்று புரியாமல் மேற்கூறிய பல்லவியை திரும்ப திரும்ப பாடுவதன் மூலம் அவளுக்கு ஏற்படும்
மயக்கம் இதன் மூலம் உணர்கிறது.

இப்போது மீண்டும் சிதார் இசை.

'சம்மதம் தானா '

'சம்மதம் தானா' என்ற வார்த்தையை பாடிவிட்டு மேலே பாட அவளுக்கு துணிவில்லை. அங்கு அவளின் அச்சம் தெரிகிறது.

இந்த வரி முடிந்தவுடன் வரும் சிதார் இசையை கூர்ந்து கவனியுங்கள்.

'சம்மதம் தானா' என்ற இசை முறையிலேயே வாசிக்கப்பட்டு பின் அந்த வார்த்தையின் துக்கம் தாங்காது உருண்டு வழிந்தோடும் கண்ணீரின் வேகம் தெரிகிறது.

மீண்டும்

'சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என் உயிரே'
அவள் மீண்டும் மீண்டும் கேட்கும் கேள்வியிலேயே இதன் தாபம் தெரிகிறது.

ஆயினும் அந்த வரிகளை திரும்ப பாடும் பொழுது

'ஏன் ஏன் ஏன்' என்னும் வாரிகளை பாடும் பொழுது அவளின் ஏக்கம் தெரிகிறது.

மீண்டும்

சொன்னது தானா சொல் சொல் சொல் என் உயிரே' என்று முடிப்பதற்கு ஆகும் நேரம் 1 நிமிடம் 10 நொடிகள்.

இப்போது அடுத்த வரிகள். இங்கு ஒரு நிமிடம் நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாடலில் வரும் நான்கு வரிகள் முழுவதும் பல்லவியா அல்லது முதல் இரண்டு வரிகள் பல்லவி பின் மற்ற இரண்டு வரிகள் அனு பல்லவியா ? அணு பல்லவி என்பது பல்லவிக்கு அனுசரணையாக இருப்பது. பொதுவாக பல்லவிக்கும் அனு
பல்லவிக்கும் இடையில் இடை இசை வரும். இங்கும் சிதார் இசை வருகிறது. எனவே இதனை அணு பல்லவி என கொள்ளலாம். ஆயினும் வேறு ஒரு காரணமும் இருக்க வேண்டும். மேலும் இதை பற்றி நாம் அறிய வேண்டியிருக்கிறது.

அனு பல்லவி

'இன்னொரு கைகளிலே யார் யார் நானா
எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே'

'யார் யார் நானா' என்னும் பொழுது அவளின் சோகம் கலந்த ஆச்சரியம் தெரிகிறது. 'எனை மறந்தாயா' என்னும் பொழுது அவளின் துக்கம் தெரிகிறது.

இவ்வளவு விஷயங்களையும் உள்ளடக்கிய இசைக்கு எழுதப்பட்ட வார்த்தைகளை மீண்டும் நினைவு கூறுவோம்.

'சொன்னது நீதானா சொல் என் உயிரே
சம்மதம் தானா ஏன் உன் உயிரே
இன்னொரு கைகளிலே யார் நானா
எனை மறந்தாயா ஏன் என் உயிரே'

மேற்கூறிய நான்கு வரிகளுக்கு இசையை சந்தம் பிரிக்காமல் பாடி பாருங்கள். 15 அல்லது 20 நொடி துளிகள் தான் ஆகும். ஆனால் பாடலை கவனியுங்கள். சுமார் 1 நிமிடம் 50 நொடிகள் செல்லுவதை காணலாம். சந்தம் பிரித்து உணர்வுகளை உள்ளடக்கி வார்த்தைகளை உயிரூட்டம் செய்து முடிக்க ஆகும் நேரம் இது.

சரணம் கவனிப்போம். இப்போது வரும் இடை இசை சிதார். அதன் வேகத்தினை கவனியுங்கள். அவளின் உணர்வுகள் பொங்கி பெருகி வரும் உணர்வின் இசை அதுதான்.

பல்லவி அனு பல்லவி இவற்றிற்கு மாற்றாக சரணம் வேகம் பெறுவதை உணரலாம். கவியாசர் பாடல்களில் உள்ள சிறப்பு அவர் பாடலின் பகுதிகளை பிரித்து சொல்ல வேண்டிய கருத்துகளை சொல்லுவார்.

பல்லவி மற்றும் அனு பல்லவியில் அவள் கணவன் ஏன் இவ்வாறு கேட்டுவிட்டான் என்ற உணர்வினில் எழுதிவிட்டு சரணத்தில் அதனை மறுக்கும் விதமாக அவள் வைக்கும் வாதங்களை வெளிபடுத்துகிறார்.

'மங்கல மாலை கும்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
என் மனதில் உன் மனதை இணைத்தும் நீதானே
இறுதி வரை துணையிருப்பேன் என்றதும் நீதானே'

பல்லவியில் 'நீதானா' என்ற கவிஞர் சரணத்தில் 'நீதானே' என்கிறார்.

'தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா'

இங்கு தான் நான் MSVயின் இசை அமைப்பை பார்த்து வியந்து போகிறேன். பொதுவாக சோக பாடல்கள் மந்த கதியில்தான் செல்லும். ஆனால் இங்கு சிதாரின் இடையிசையும் சரணத்தின் வார்த்தைகளுக்கு அமைக்கப்பட்ட இசையும் துரித கதியில் செல்லுகின்றன. காரணம் சரணத்தின் வார்த்தைகளில் உள்ள 'வாதம்'. ஒரு பொருள் குறித்து தெளிவாக இருப்பவர்களுக்கு வேகமும் இருக்கும் அந்த வேகத்திற்கு தேவையான உறுதியும் இருக்கும்.

நிற்க. பொதுவாக நான் இசை அமைப்பாளர்களை ஒப்பிட்டு எழுதுவதை தவிர்க்கிறேன். ஆயினும் இங்கு ஒப்பிட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்த படம் ஹிந்தியில் 'DIL EK MANDHIR' என்ற பெயரில் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' வெளியாகி ஒரு வருடம் பின்பு உருவாக்கப்பட்டது. எனவே இதற்கு இதே காட்சியின் இசை எவ்வாறு இருக்கும் என்று காண 'YOU TUBE' பார்த்தேன். குறிப்பாக சரணத்திற்கு 'வேகத்தை' எதிர்பார்த்தேன். வட நாட்டு இசை அமைப்பாளர்கள் வட இந்திய இசை கருவியான சிதார் மற்றும் தபலாவை எவ்வாறு கையாண்டுள்ளார்கள் என்று காண விழைந்தேன். எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே தான் அதில் கீழ் கண்டவாறு பதிவு செய்தேன். சில கண்டனங்கள் வந்தன. ஆயினும் என் கருத்தில் உறுதியாக இருக்கிறேன்.

Quote:
A Hindustani semi classical style. Normally for pathos the tempo is slow. But given this situation the emotions erupts in between. This is nicely portrayed by the sitar interlude and the speed of the charanam. This movie was remade in Hindi 'dil ek mandir'. The north indian composers SJ did not notice this aspect and produced a ordinary sitar phrase. No complaints about the tune but similiar emotion is missing. South Indian composer excelled in Hindustani music. But north Indian composer ???


மேலும் இப்பாடலை பாடிய P சுசிலா பற்றி ஒரே ஒரு வார்த்தை. அவரை தவிர யார் பாடியிருந்தாலும் இந்த பதிவை எழுதியிருக்க முடியாது. சுசிலா அம்மாவிற்கு MSV சொல்லி கொடுத்த விதம் எவ்வாறு இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்

முடிவாக பாடலை எவ்வாறு MSV முடிக்கிறார் என்று பாருங்கள். பொதுவாக பாடல்கள் பல்லவியில் ஆரம்பிக்கப்பட்டு பல்லவியிலேயே முடிக்கப்படும். ஆனால் MSVஇன் சில பாடல்கள் மீண்டும் பல்லவியில் முடிக்கபடாமல் சரணதுடனேயே முடிக்கப்படும் அதற்கு பாடலின் தன்மைக்கு ஏற்றபடி காரணங்கள் இருக்கும். இந்த பாடலிலோ 2வது சரணம முடிந்தவுடன் அப்படியே முடிக்கப்படாமல் அனு பல்லவியின் தொடக்க வார்த்தையான 'இன்னொரு கைகளிலே' என்று பாடப்பட்டு பின் அவளின் விசும்பலுடன் முடிக்கபடுகிறது. இது ஒரு வித்யாசமான அணுகுமுறை. அதன் காரணம் என்னவாக இருக்கும்? எனக்கு புரிந்த வரையில் அவன் வேறொரு ஆடவனை மணந்து கொள்ள சொன்ன பொழுது 'சொன்னது நீ தானா' என்று கேட்டவள் அது ஏன் முடியாது என்பதற்கான காரணங்களை சொன்ன பின் மீண்டும் பல்லவியில் 'சொன்னது நீ தானா' என்று சொல்லி முடித்தால் சரணத்தின் வரிகளுக்கு உள்ள ஆற்றல் இழக்கப்பட்டுவிதும். எனவே தான் இவ்வாறு அமைக்கப்பட்டது என்று நான் எண்ணுகிறேன்.

http://youtu.be/znRUzlYa3bk


Last edited by N Y MURALI on Tue Oct 21, 2014 9:51 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sat Oct 18, 2014 11:42 pm    Post subject: Reply with quote

Murali sir!
Excellent choice. Last year I also had a chance to hear you speak about this song. Now the details, in depth, are so interesting to understand.
The Hindustani base of this song, and the choice of MM's musical instruments are marvellous! Only God (alone) knows how MM conceives such a song! The emotionally loaded jugalbandi of the sitar/saarangi combo with one of the best tabla/dholak accompaniments ever created in the history of Indian film music, shall we say?
Unfathomable creation! No wonder such marvels cannot be emulated by anyone or synthesised by any other MD....
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Oct 19, 2014 9:03 am    Post subject: Reply with quote

dear Murali

As usual your write up is as great as melodies from the master . we are short of adjectives .

i just want to concur two points - this song is cut out for PS, cannot fit in any one else .this is one of the master pieces of KD-MSV-PS no question about that .

the second point on usage of shenpy Sitar Santoor tabla or any instruments north of Vindya's are mostly used better by MSV and his team much much (you can add any number you want ) than any one in the industry may be vatsan can dispute or agree --

continue your great trend
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Oct 19, 2014 12:50 pm    Post subject: Reply with quote

முரளி,

வழக்கம்போலவே விரிவான, ஆழமான ஆராய்ச்சி.

ஆழமான கருத்துக்களை எளிய சொற்களில் அழகாகவும் வியப்பூட்டும் விதத்திலும் சொல்லி விடும் கவிஞரின் கவித்திறன் உங்கள் உரைநடையிலும் வெளிப்படுகிறது.

இது போன்று மேலும் பல வைரங்கள் உங்களிடமிருந்து வெளிப்பட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தப்பாடலைப் பற்றி, 'ஒரு பெண்ணின் விம்மலுக்குக் கூட இசை அமைக்க முடியுமா?' என்று வைரமுத்து வியந்து பாராட்டி இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Oct 19, 2014 6:34 pm    Post subject: PICK A SONG AND ANALYZE Reply with quote

‘sonnadhu nee dhAnA?’
Dear Friends,
This particular song from ‘nenjil Or aalayam’ is a crown in the jewel of PS. Of course the crown has been a gift to PS from all the composers in general and MSV in specific. A range of PS songs from MSV’s compositions have been instant hits and have captivated the listeners for all time to come. ‘sonnadhu nee dhAnA’ simply hijacked the listeners by its rendition of emotions to a precise scale. To me the song is an epitome of virtues elegantly woven to yield a large canvas portraying the emotions of a devout wife, fighting to save her husband from the claws of death from cancer.
In this endeavour, KD- MSV have dealt the item to its logical end. But, what have admirably helped the ‘elevation’ of this piece are the earlier songs in the same movie; 1 rendered by the former lover of the girl –now a Doctor entrusted with the responsibility of saving the husband. 2. the song by the patient While the heroine has had a love-life, her loyalties to her husband are unquestionably pure. Equally, the Doctor has been such a genuine lover that he honours the sentiments of the lady and does his best and saves the husband’s life. However, the husband unaware of the earlier friendship between the Doctor and the lady, infers the earlier background but does not suspect his wife’s fidelity. So, all the 3 characters stay in the limits of decency with distinct but interconnected mission. The Doctor quietly buries his memories of love and chooses to take extraordinary care to save the husband. The patient [husband] expects to die and seeks to advise his wife to marry the doctor in the event of his succumbing to the disease himself. The wife does not wish to entertain the thought of her reverting to Doctor and wants only her husband to survive and preclude the option. All the three stand relieved of the predicament while, the Doctor drops dead after saving her husband from the dreaded disease. The finer emotions of the plot have been brilliantly handled by the lyrics and tunes for the songs in this movie. Among the songs, three are quite important [one each by the Doctor, the patient and the wife in predicament]. Enough if we look at the charaNam stretches carrying crux of the story.

Doctor’s song ‘engirundhAlum vAzhga’ [AL Raghavan]

Critical Charanam ‘varuvAi ena nAn thanimaiyil ninrEn,
vandhadhu vandhai thuNaiyudan vandhAi
thuNaivarAi kAkkum kadamaiyum thandhAi
thooyavaLE nee vAzhga’

Patient’s song ‘ninaippadhellAm nadandhu vittAl’ [PBS]

Critical Charanam ‘1000 vAsal idhayam adil 1000 eNNangaL udhayam
yAro varuvAr yAro iruuppAr varuvadhum pOvadhum theriyAdhu
oruvar mattum kudi irundhal thunbam Edhumillai
onrirukka onru vandhAl enrum amaidhi illai’

Lady’s song “sonnadhu nee dhAnA” [PS]
Crical charaNam ‘innoru kaigaLilE yAr yAr nAnA’
Enai marandhAyA eEn eEn eEn ennyuirE’

These lyric frames have been set to tune to carry the rich emotions to a height in portraying the purity of characters. Where are such story treatments these days?
Warm regards
K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sun Oct 19, 2014 8:00 pm    Post subject: Reply with quote

Dear Murali,

Wonderful writing on one of the wonder creations of MM !

The song's construction (sorry, I cannot use this word since it 'happens' when our Master composes! ) of the song, after reading your article, looks amazing!

The line ' sonnathu Nee thaanaa' (like the the words 'kandane Seethaiyai' of Hanuman to Lord Rama' , time ratio of Pallavi to Charanam, the reason why Charanam's is faster, closing of the song not with usual Pallavi, but a phrase of anupallavi..... Great analysis, Murali !

Just looking at the lyrics and touching The Harmonium, it 'happens' like this in
Him ? Oh God !!

Ramki
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sat Oct 25, 2014 2:52 pm    Post subject: SIMPLY OUTSTANDING Reply with quote

Hi Murali,

Just brilliant.....

CHEERS
MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sat Oct 25, 2014 2:54 pm    Post subject: SIMPLY OUTSTANDING Reply with quote

Hi Murali,

Just brilliant.....

CHEERS
MSV IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sun Oct 26, 2014 1:35 pm    Post subject: Resp. Reply with quote

Great write-up NYM !!! Strangely enough, MSV the "raaga agnostic", atleast while discussing music in general, excitedly blurted out "Jaunpuri" when a mention of this song was made !!! So unlike him !!! He said "Jaunpuri"yil amainthathu !!! And our immediate quip to that raaga allusion was "well sir, 'sammatham thAnA' stretches outside of Jaunpuri" for which I am sure his response would have been one of his beaten to death, cliched phrases. A casual travel through the lyrics would indicate why "sammatham thAnA" was carried through with a conspicuous tonic shift. First things first, "sonnathu nee thAnA" is sheer incredulity heaped on top of a heap of intense imploration. She is indeed alarmed that her soul mate could conjure up such a resolution to her future predicament. MSV, based on KD's lyrics gives the top priority to the incredulousness, the effect of the surprise, earth shaking request placed by her husband. Now MSV rips the melody and pastes it onto a different canvas, a tonic shift they call it technically at "sammatham thAnA", after all the almost accusatory imploration needs to exist on its own and deserves a special place of pride in the emotional drama, why would he not place it on a separate pedestal, namely a shift in tone !!! NYM, I look at it this way, the pallavi is set to a very slow pace (11 beat cycle as told to us by Thumba Shekhar) to indicate the disposition of a woman thoroughly startled, shaken our of her sensibilities and in the process of getting to terms with some new reality, not yet sure footed is she !!!! The faster pace at the charanams indicate a certain amount of comfort level with the shock dished out by her husband and ofcourse depicts a forceful explanation to her husband of why she is offended by it all as well !!!

Once again, a great write-up !!! There has not been an occasion where the repeat of "sol" and that of "yen" have not me left me as shaken up and as the chief protagonist herself !!!! To lighten things up, there were some perverted critics up in arms those days against the way "sol" was pronounced, they wanted that to be "chol. chol. chol"........Guess they needed to be reminded that it was a human being singing the song and not a human being's best friend outside of the human race, a member of the canine family !!!
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sun Oct 26, 2014 2:57 pm    Post subject: sonnathu Reply with quote

NYM, the semblance of a dissonance in your posting was the mention of the Hindi counterpart. It does not deserve to be even quoted as the North Indian answer to "sonnathu nee thAnA". Jaikishen, like Ilaiyaraja always insisted on composing the tune first and what you have hotch-potch of a filler called song. Shankar (of the S-J fame) actually did approach Sridhar on the sly and told him that Jaikishen's tunes will not satiate the demands of S-J fans and that he himself had several worthy replacements. Sridhar then told Shankar that was indeed happy with the options offered by Jaikishen !! I am not saying that Shankar would have done a better job, because both S and J were after all spoilt by Raj Kapoor's tame composing values of wanting songs to be simple enough to be "singable" by the common man. Well...being simple is one, being simplistic is bordering on the infantile.
Back to top
View user's profile Send private message Send e-mail
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Oct 27, 2014 4:18 pm    Post subject: Reply with quote

Vatsan,

On the purists' intransigence on the pronunciation of 'sol,' I think they have not fully grasped the subtleties of Tamil pronunciation. Admittedly, Tamil doesn't have the alphabet S but the sound S is very much there. Just as the letter 'க' stands for both ka and ga (leaving out the kha and gha, which in my opinion are superfluous), the letter ச stands for both sa and cha. When the word starting with ச comes in the beginning of a sentence, it is generally ( I am reluctant to say 'always' because I am aware that there could be exceptions!) be pronounced as 'sa' as in sangam, sol, saattai etc. Only when a lord starting with the letter ச comes in the middle of a sentence, it is sometimes (but not always) pronounced as cha. It is 'Sangam vaLarththa thamizh' but 'Thamizhch changgam). 'sol avanidam' but 'varach chol avanai.'

The distinction can be observed in another PS' song, 'Sollach cholla inikkuthadaa' composed by KVM. In fact, a few months back, PS herself corrected a participant of Supersinger when he/she sang 'solla solla inikkuthadaa."

The purists should note that even a Sanskrit word Chakra becomes Sakkaram in Tamil.

There are many songs like 'sollaththaan ninaikkiREn,' 'sollaathE yaarum keeTTal' 'sollavo sugamaana kathai sollavo' etc. where this pronunciation sa is used.

Vatsan, I am sure you will understand that I am not addressing you but those whom you referred to in your post!
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Oct 31, 2014 10:41 pm    Post subject: Reply with quote

Dear Vatsan sir,
Very beautifully analysed! S-J indeed brought out simple tunes, with some simple orchestration as noticed by you, with probably both of them composing tunes separately in almost many of their films. This used to be the regular feature in all their films. What could be believed perhaps is the fact that Jaikishen, being an admirer and friend of MM, adapted MM's tunes, in general, and especially for the remake movies with original score by MM. Even the Rafi version 'yaad na jaaye' for the 'Engirinthaalum vaazhga' song is very nearly another tune of MM, resembling a PBS/MM song (Yaar siritthaal enna??). But then, as you so emphatically wrote, there can be no real comparison, as such a thing does not exist when it is MM!
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sat Nov 01, 2014 1:18 pm    Post subject: Resp. Reply with quote

"yAr sirithhAl enna" was inspired from "yAd na jAyE". Infact the song was born out of the common interest both MSV and PBS discovered in each other for the Hindi original Smile They loved it and wanted an off-shoot of a song from the Hindi original and thus was born "yAr sirithhAl enna". The interesting part is that Director Sridhar forced Jaikishen to finish the line "dil kyun bhulAyE" as in Besame Mucho pretty much as he had later forced MSV to deliver a similar Keeravani punch at "ponnAna kai pattu..puNNAna kannangaLE". S-J orchestration especially S's orchestration used to be tremendous and scintillating with Jaikishen being more Ghazalesque. With respect to tuning, with Raj Kapoor's suggestion they started composing one-liner charanams with the same tune being repeated twice with differenct words and voila...the pallavi would be back again !!! Wasted potential is all I can say about S-J !!!!
Back to top
View user's profile Send private message Send e-mail
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Sun Nov 02, 2014 8:53 pm    Post subject: Reply with quote

Dear Sir,
Thanks for your nice clarifications. Your appreciation of the real potential of S-J is so informative. Their high-pitched orchestrations in many films, and equally, their simple compositions in some films, all possessed catchy tunes that people still remember.
Thanks,
Sai
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group