"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Most difficult song to tune
Goto page Previous  1, 2, 3, 4  Next
 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sat Aug 09, 2014 11:43 am    Post subject: Resp. Reply with quote

Ram, NYM, Vaithy, Sampath, everybody here enjoys light music in general only instinctively with focus on the mood only, for sure. Since there is a forum of this sort there is nothing wrong in peeling the layers and peering within, as a fun exercise. After all a forum is for technical aspects as well and I therefore do not see an issue with looking at a song at an atomic level as long as it does not become too clinical. Furthermore, I do not believe NYM alluded to MSV being a pureplay chords dependent composer but it can be easily proved that he used chords ALSO as a tool . MSV himself has admitted to that. He uses Harmonium as an aid in composing and he would certainly put it to optimum use , chords being one of the by-products. Fundamentally, for any light music composer, the feeling comes first, the tune occurs as an idea, the building blocks come in naturally and they could be chords or raaga or neither of the two. This is my understanding after having familiarized myself with composing wizardry across a few states in India or atleast take it as a humble surmise.

Shifting gears, NYM, only now I got to read most postings. The swarams for the pallavi should be parsed as pairs of PG, PM, GR, RS for each word starting with "ennanga" etc with the song being to set to Shankarabharanam scale.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Aug 09, 2014 12:55 pm    Post subject: Reply with quote

அன்புள்ள ராம்,
நேற்று நான் மிகவும் busyயாக இருந்ததால் பதில் எழுத முடியவில்லை. நீங்கள் கூறியது போல கருத்து பரிமாற்றம் என்பது எப்போதுமே எல்லா நிலையிலும் ஏற்று கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. மாற்று கருத்துகள் வரவேற்க படவேண்டியதே.

ஒரு theory என்பது ஒருவரால் உருவாக்கப்பட்டு அதை பல நிலைகளிலும் சோதிக்கப்பட்டு, சோதனை மீண்டும் மீண்டும் நிரூபணமானால் தான் அதனை ஏற்பார்கள். அவ்வாறு நிரூபணமாகத பொழுது அந்த theory, discard செய்யப்பட்டு வேறு ஒரு புதிய theory வெளிப்படும். பல முறை ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட theory லிருந்தே , புது ஆராய்ச்சிக்கு inspiration வரும்.

அதில் முக்கியமான அடிப்படை தேவை என்ன என்றால், சொல்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதனை திறந்த மனதோடு சீர் தூக்கி பார்க்க வேண்டும்.

ஆனால் இதை எல்லாம் செய்யாமல் ஒரு தனி மனித காழ்புணர்ச்சி காரணமாக சிலர் கூறும் விளக்கத்திற்கு மறுப்பு அளிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.

இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் நான் முன்னமே பதிவு செய்தது போல என்னுடைய நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டதற்கு இவர்கள் தான் காரணம். அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதை சொல்ல விட்டிருக்க வேண்டும். அதன் பின் வரும் மறுப்புகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் நானே பொறுப்பேற்று இருப்பேன்.

நம் இனைய தளத்தில் உள்ள குறையே ஒரு கருத்துக்கு மதிப்பளித்து அதனை பரிசீலிக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கிறதா என்பது கேள்விக்குறியே!

நீங்கள் குறைந்த பட்சம் 6 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்த தளத்தில் வந்து எழுதுகிறீர்கள். இந்த தளம் தொடங்கப்பட்ட பொழுது மிகுந்த ஆர்வமுடன் இதில் இனைந்து பின் மீண்டும் தொடர்ந்து பங்கெடுத்தது எத்தனை பேர் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் எனக்கு தெரியும். 'msvtimesல் ஒரு குரூப் இருக்கிறது', 'அங்கு அதன் ஆதிக்கம் தான் அதிகம்.' 'எனவே அங்கு பங்குபெறுவதில்லை' என, வேறு ஒரு இனைய தளத்தில், நம் தளம் பற்றி கருத்து பரிமாற்றம் நடந்ததை நீங்கள் அறிவீர்களா? 2008 வருடம் நான் இதில் இணைந்த பொழுது, ஒரு social websiteல் எனக்கு புதிய அனுபவம் என்பதால் ஒருவரிடம் உதவி கேட்க சென்ற எனக்கு என்ன அனுபவம் ஏற்பட்டதென்று உங்களுக்கு தெரியாது. எனக்கு ஏற்ப்பட்ட அந்த அனுபவம் மற்றவர்களுக்கும் ஏற்ப்பட்டதால் தான் மற்ற தளங்களில் நான் மேலே கூறியது போன்ற comments கள் வந்தன.


ஆயினும் உங்களை அவ்வாறு நான் காணவில்லை. ஏனெனில் புதிய விஷயகளை தெரிந்து கொள்ளும் ஆவல் உங்களுக்கு இருக்கிறது. எனவே உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறுகிறேன்.

சரி. நீங்கள் கூறும் குற்றச்சாட்டு என்ன ? MSV யை, chords என்ற அடிப்படை தத்துவத்தில் வைத்து பார்ப்பது என்பது அவர் இசைக்கு நான் இழக்கும் அநீதி என்று கூறுகிறீர்கள்.

முதலில் இசை என்பதே 7 ஸ்வரங்களுக்குள் அடங்கிவிடுகிறது. அந்த 7 லிருந்து மேலும் 5 பிரிந்து 12 ஆக உள்ள ஸ்வரங்களை கொண்டே இன்று இத்தனை இசை வடிவங்கள் உருவாகியுள்ளன. அவ்வாறு இருக்கும் பொழுது அந்த 12 லிருந்து உருவான combination of chords, ஏன் ஒருவருக்கு inspiration ஆக இருக்க கூடாது ?

நான் பண்ணிசையில், அதன் இலக்கணப்படி triads என்ற 3 ஸ்வரம் கொண்ட chords மற்றும் 7th என்ற 4 ஸ்வரம் கொண்ட chords உள்ளது என்று கூறினேன். ஆனால் ஏன் 5 ஸ்வரம் கொண்ட chords கள் இல்லை என்ற கேள்வியை நீங்கள் எழுப்புவீர்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் இன்னும் அதனை புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறன். அவ்வாறு 5 அல்லது 6 அல்லது 7 ஸ்வரங்கள் கொண்ட chords களை ஏன் பண்ணிசையில் அமைக்கவில்லை என்றால் 3 மற்றும் 4 ஸ்வரங்கள் கொண்ட திரிகோணம் மற்றும் சதுரம் என்று தான் பார்த்தார்களே தவிர 5 ஸ்வரம் கொண்டதை pentagon, 6 ஸ்வரம் கொண்டதை hexagon மற்றும் 7 ஸ்வரம் கொண்டதை சப்த கோணம் என்றோ அவர்கள் இலக்கணம் எழுதவில்லை. அதன் காரணம் 5,6,7 என்று ஸ்வரங்களை அவர்கள் பண் என்றார்கள். அதாவது நாம் சொல்லும் ராகம்.

சரி அப்படி என்றால் எதற்கு 3 மற்றும் 4 ஸ்வரங்களை அவர்கள் இலக்கண படுத்தினார்கள். அது ஏன் என்றால் அந்த 5, 6 அல்லது 7 ஸ்வரம் கொண்டு வரும் பண்களின் ஜீவ ஸ்வரம் எது என்பதனை கண்டறிவதற்காக உண்டாக்கினார்கள்.

எனவே ஒரு ஸ்வரத்துடன் மற்றொரு ஸ்வரத்தின் உறவினை இலக்கணத்தில் விளக்கினார்கள்.

அந்த இலக்கண படி ஒரு விதி இருக்கிறது.

தொட்ட ஸ்வரத்திற்கு 7 வது ஸ்வரம் இணை. 4 நட்பு. 5 கிளை. 3ம் 6ம் பகை.

எனவே ஸ என்ற ஸ்வரத்திற்கு 7 வது ப என்பது இணை. 4 வது க2 என்பது நட்பு. எனவே ச-க2-ப என்று வரும் இந்த உறவு நட்பானது.

இப்போது ஸ என்ற ஸ்வரத்திற்கு 3 வது ஸ்வரமான க1 மற்றும் 6வது ஸ்வரமான ம2 என்பது பகை. எனவே ச -க1-ம2 என்ற உறவு பகையானது. இதைத்தானே dischord என்கிறீர்கள்.

இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றியும் எழுத முடியாது. நீங்கள் திறந்த மனதுடன் இருந்தால் நாம் ஒரு நாள் பேசலாம்.
மேலும் பண்ணிசையில் 7 ஸ்வரம் கொண்ட ராகம், மற்றும் 6 ஸ்வரம், மற்றும் 5 ஸ்வரம், வெறும் நான்கே நான்கு 4 ஸ்வரம் கொண்ட ராகம் என மொத்தம் 103 பண்களே இருந்தன. அந்த 103 பண்களும் மேலே கூறிய 7 தாய் ராகத்தில் தான் பிறக்கிறது.

இப்போது நான் மேலே கூறியபடி உள்ள இலக்கணப்படி நட்பு, பகை என்பதனை கண்டு ஒவ்வொரு பண்ணிற்கும் ஸ்புடம் போட்டு பார்த்து அதன்படி இசை அமைத்தால் அந்த இசை இனிமை நிறைந்ததாகவும், உணர்வுடன் கூடியதாகவும் இருக்கும் என்று தான் அந்த இலக்கணம் அமைத்தார்கள்.

எனவே MSV இன் இசையிலும் இது போல வரும் உறவு முறையில், ஸ்வரங்கள் அமைவதினால் தான் இனிமை நிறைந்ததாக இருக்கிறது என்பது என் எண்ணம்.

சரி. இப்போது நீங்கள் குறிப்பிட்ட விஷயத்திற்கு வருவோம். நான் குறிப்பிட்ட chords என்பது, நம் தமிழ் பண்ணிசையில் இசையின் ஸ்வரங்களின் உறவுகளை குறிக்கும் அடிப்படை ஆதாரம்.

அந்த அடிப்படை படி MSV இசை அமைக்கிறார் என்று நான் சொல்வது எந்த வகையில் அவருக்கு நான் இழைக்கும் அநீதி ஆகும் ?

ஒரு புளியன்கொட்டையை எடுத்து நன்றாக அதன் தோல் பகுதியை தேய்த்து விட்டு பார்த்தீர்களானால் அதில் அந்த புளிய மரத்தின் imprint தெரியும். நீங்கள் கூறுவது அது புளிய மரம் போல நெளிவு சுளிவுகள் இல்லாது இருக்கிறதே என்பது. அது மரம் வளந்த பின் வரும் நிலை. நான் சொல்வது மரம் உருவாகும் நிலை. நீங்கள் 3 dimension ஆக பார்க்கிறீர்கள். நான் 2 dimension னாக பார்க்கிறேன்.

இறுதியாக ஒன்று சொல்கிறேன். MSV இன் இசை பற்றிய என் கருத்துக்கு 4 அடிப்படை காரணங்கள் உள்ளன.

1. நான் அடிப்படையில் ஒரு composer. 3 devotional cassette கள் உருவாக்கி வெளியிட்டிருக்கிறேன். ராஜ் குமார் பாரதி, தீபன் சக்ரவர்த்தி, T K S கலைவாணன், மற்றும் திரு வீரமணி போன்றவர்களை பாட வைத்துள்ளேன்.

என் முதல் cassette, AVM ஆடியோ மூலம் வெளியிடப்பட்டது. 2வதை நான் வெளியிடவில்லை. 3வது வீரமணியை கொண்டு Madras Recording Co(Sargam) மூலம் வெளியிடப்பட்ட ஐயப்பன் பாடல்கள். சுமார் 30000 cassette விற்றது.

எனவே ஒரு பாடல் உருவாகும் நிலை எனக்கு நன்றாக தெரியும்.

2. நான் மேலே குறிப்பிட்ட MSV பற்றிய கருத்து மதிப்பீடு நானாக கண்டு பிடித்தது இல்லை. அதனை எனக்கு விளக்கியவர் D தியாகராஜன் என்ற அன்பர். MSV யுடன் 1980-90 களில் அவரிடம் harmonium player ஆக பணிபுரிந்தவர்.

3. Anand Chellappa அவர்கள் ஏற்கனவே கூறியபடி horizontal மற்றும் vertical composition எது என்பதனையும், மேலும் MSV அவர்கள், Augment மற்றும் Diminished போன்ற chords களை உபயோகிக்க மாட்டார் என்பதும் தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு வேண்டும் என்றால் அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

4. இறுதியாக ஆனால் உறுதியாக ஒரு point. இதை உருவக்கியவரிடமே கேட்கலாமே என்று MSV யிடமே கேட்டேன்.

நான் கேட்ட கேள்வி.
'உங்கள் பாடல்கள் பெரும்பனவற்றில் chords இல் வரும் ஸ்வரங்களே வார்த்தைகளுக்கு இசை கோர்வைகளாக வருகிறதே. அவ்வாறு chords களை அடிப்படையாக கொண்டு இசை அமைப்பீர்களா ?' என்று கேட்டேன்.

அதற்கு அவர் கூறிய பதில்

'Chords கொண்டும் பாடலகளுக்கு நான் இசை அமைப்பது உண்டு. ஆனால் அதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அந்த Chords பெயர் கூட எனக்கு தெரியாது'

இது நான் கூறும் சத்தியமான நிகழ்ச்சி. Film பண்ண மறந்து விட்டேன்.

எனவே உருவாக்கியவரே சொல்லும் போது நீங்கள் மறுத்தால் நான் என்ன சொல்ல முடியும் ?

உண்மை என்பது எது என்பதை, நாம் தான் தேடி போக வேண்டுமே தவிர அதுவாக நம்மிடம் வராது.

அதனை அறியும் ஆர்வமும் ஊக்கமும் உங்களுக்கு இருந்தால் என்னை போலவே நீங்களும் உங்கள் தேடல் பயணத்தை சீர் தூக்கி பார்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி பயணிக்க வேண்டும் என்பதனை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நான் ஒன்றும் செய்வதற்கில்லை.

எனவே இதோடு என் விளக்கத்திற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன்.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.SAMPAT



Joined: 27 Jan 2007
Posts: 234
Location: CHENNAI

PostPosted: Sat Aug 09, 2014 3:03 pm    Post subject: Reply with quote

அன்புள்ள MSV ரசிகர்களுக்கு,



MSV அவர்கள், chord based songs (better Swaram based) பண்ணியிருக்கிறார் என்பதில் மறுப்பேதுமில்லை. உதாரணம்,

1. மலரென்ற முகம்

2. நான் ஆணையிட்டால் (சில பகுதிகள்)

3. அதோ அந்த பறவைபோல (ஒரு சில பகுதிகள் மட்டும்)

'chord based' songsக்கு முக்கிய character என்ன ?

"Plain Notes"composition ARE ONLY CHORD BASED SONGS


E-g Most of the Western compositions...

Some of the film songs like

1. உறவுகள் தொடர்கதை
2. Fur Elise


When there is "Oscillation or Gamakams", It can not be said as the song based on CHORD AT ALL.. In that sense even the above songs of MSV can not be said based on chords in the strict sense of the tool.

NO NEW THEORY CAN BE INTRODUCED BY ANYONE HOWEVER GREAT ONE MAY THINK SO.. ANY COMBINATION OF TWO NOTES OR MORE CONSTITUTE A CHORD SUBJECT TO SOME RULES. THEN EVERY SONG AND ALL SONGS COMPOSED, BEING COMPOSED, TO BE COMPOSED IN THE WORLD SHOULD BE SAID TO BE BASED ON CHORDS.. WOULD ANYONE ACCEPT THIS? I LEAVE IT TO THE IMAGINATION OF THE RASIKAS AND "SO CALLED" KNOWLEDGEABLE ONE....
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Aug 09, 2014 3:18 pm    Post subject: Reply with quote

Ram
Quote:
அதாவது CHORDS இல்லாமல் அதன் உணர்வு கொண்டு இசை அமைப்பவர் மெல்லிசை மன்னர் என்று தாங்கள் கூற வந்ததை முழுவதுமாகப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. சொல்லப்போனால் வத்ஸன் கூறியது போல் எனது கணிப்பும் அதுவே. ஆக நாம் இருவரும் ஒத்துப்போன விஷயத்திற்கு வாதிட்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது
.

இல்லை ராம். ஒரு வார்த்தைக்கு இசை மூலம் ஸ்வரம் ஏற்றும் போது 'ஸ்வர உறவுகளை அடிப்படியாக கொண்டு' என்று தான் நீங்கள் பார்க்க வேண்டும். 'ஸ' ஸ்வரத்திற்கு க2 என்பது நட்பு சுரம். 'ரி 2' என்பது நட்பும் அல்ல பகையும் அல்ல. 'ஸ' வை அடுத்து 'ரி2' என்பதனை விட 'க2' என்று வந்தால் அது தான் அந்த இசைக்கு ச்வீட் ஸ்போட். அதற்காக 'ச' வுக்கு அடுத்து 'ரி2' வரவேயில்லை என்றுnaan சொல்லவில்லை. ஆனால் பெரும்பாலான பாடல்களை பார்த்தல் அவ்வாறு தான் இருக்கிறது.
அது தான் நான் சொல்ல வந்த ச-க2-ப.

மேலும் 'ப' விலிருந்து 'ம2' க்கு வர வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதனை 'ப' லிருந்து 'ரி2' க்கு கொண்டு வந்து அதன் பின் 'ரி2' விலிருந்து 'ம2' க்கு கொண்டு சொல்லுங்கள். அதன் இனிமையே தனி.

ஏனெனில் 'ப' க்கும் 'ரி2' க்கும் தொடர்புண்டு. ப-நி2-ரி2. எனவே 'ப' க்கு 'ரி2' என்பது இணை.

எனவே 'ப' விலிருந்து 'ரி2' கொண்டு வந்த பின், 'ரி2' விலிருந்து 'ம1' க்கு செல்லுங்கள். ஏனெனில் 'ரி2' க்கு 'ம2' என்பது நட்பு. நான் சொன்ன இந்த உறவு என்பது MSV in இசைக்கு அடிப்படை ஆதாரம்.

உணர்வு என்பது அந்த காட்சிக்கும், வார்த்தைக்கும் பொருந்தி வரக்கூடிய இசை. அது ராகத்தின் மூலமாக கிடைக்கலாம். நான் சொன்ன முறையிலும் கிடைக்கலாம். எனவே உணர்வு என்பது வேறு. உணர்வு என்பது MSV இன் இசையில் வேறு ஒரு பரிமாணம்.

மேயர் மீனாட்சி படத்தில் வரும்
எவளோ ஒரு பெண்ணாம் அவள் நான் இல்லையாம்
இதயம் அது பொன்னாம் அதில் நீயில்லையா
புரிகின்றதா.


இந்த பாடல் C scale என்று வைத்து கொள்ளுங்கள்.

பாடல் C major, C 7th , F major என்று போய் விட்டு

'புரிகின்றதா' என்ற இடத்தில 'D major' ஸ்வர கோர்வை ரி2-ம2 என்று வருவதை காண முடியும்.

இப்போது உணர்வு படி இது எவ்வாறு உள்ளது என்று காணலாம். நான் மேலே சொன்ன C major, C 7th, F major க்கு, D major என்பது complete shift of chord ஆக இருப்பதை உணர முடியும். அவ்வாறு அமைவது 'calling for attention' என்ற உணர்வில் தான் இருக்கும்.

ஒரு Character இன்னொரு character கு ஒரு விஷயத்தை கூறி 'புரிகின்றதா' என்று கூறும் போது அதனை இசை மூலம் உணர வைக்க இம்மாதிரி 'shifting of chord' என்பது எவ்வளவு கச்சிதமாக பொருந்துகிறது. எனவே Chord இங்கே காட்சி மற்றும் வார்த்தையின் உணர்வினை இசை மூலம் வெளிபடுத்த உதவி செய்கிறது.


Quote:
மேற்கூறிய தங்களின் இக்கருத்துக்களைப் படிக்கையில் வேதனையாக உள்ளது. இதில் "ஒரு தனி மனித காழ்புணர்ச்சி" கொண்டவர், "'msvtimesல் ஒரு குரூப் இருக்கிறது', 'அங்கு அதன் ஆதிக்கம் தான் அதிகம்", நீங்கள் யாரைக் குறிபிடுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. MSVTIMES ஒரு புனித நோக்குடன் உருவாக்கப் பட்டது. இதைப் புரிந்து கொள்ளாமல் விலகி இருப்பவர்களையும், வேறு தளத்தில் புறம் சொல்லித் திரிபவர்களையும் பற்றி எனக்கு துளியும் கவலை இல்லை. இது போன்ற மக்களின் கருத்துக்களைத் தாங்கள் பெரிதாக எடுத்துக் கொண்டு மனம் வருந்த வேண்டாம் என்பதே தங்களுக்கு நான் விடும் அன்பு வேண்டுகோள். காய்த்த மரத்திற்குக் கல்லடி விழும் என்ற பழமொழி நீங்கள் அறியாததில்லை. அவற்றையெல்லாம் பெரிதாகப் பொருட்படுத்தாமல் தங்களின் உயர்ந்த இசைப் பணி, இத்தளத்தில் எழுத்துப் பணி போன்றவற்றை குதூகலத்துடன் தொடருமாறு தாங்களிடம் வேண்டிக்கொள்கிறேன்.


விஷயம் அதுவல்ல ராம். இம்மாதிரி நமது தவறான அணுகுமுறையால் எத்தனையோ ராம்களையும், முரளிகளையும் நாம் இழந்திருக்க கூடும்.
Back to top
View user's profile Send private message Send e-mail
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Sat Aug 09, 2014 4:54 pm    Post subject: IT'S THE LISTENER'S RIGHT AFTER ALL!!! Reply with quote

Dear All,

Superlative stuff Ram. Music is for the Soul and nothing else...No one can be more blatantly true than this...

I am happy that the near blood shed was finally avoided but not before some disturbing points mentioned by Murali. As Ram had mentioned, our site was started with all the pomp & glory only to glorify, propagate the great works of MSV and not to unleash a reign of terror in the form of some harsh writings. I also played my part in this area for sometime as the subject in question was none other than MSV and finally felt that it wasn't worth it as everyone has a right over their perceptions as long as it is not thrust upon anyone!!! My idea of MSV is simple. Nothing in the world pleases me like MSV's music and the world is welcome to have it's own choice!!

RVS Mani, Late Kannan, Sundararajan have all been rasikas of MSV for so many years and have crossed all the stages of similar analysis being done by us those days itself and finally concluded that MSV's music is something new and that it has a cascading effect on an unassuming listener. As I said earlier, the so called research by some of the forum members ventured into probably was only to quench the insatiable thirst of those wanting to spread their perceptions and their proficiency in technical & analytical prowess. Welcome indeed but unfortunately HIS music is for all & not for a select musically literate audience who are dime a dozen!!!

Let the learned understand that MSV probably never scored music keeping in mind all the technicalities involved while composing, that are being discussed here but HIS sole aim was to touch the inner soul of people like us and technicalities hence needn't fill up pages after pages of our site narrowing down the interest of those who are not interested in these!!!

Let's not deny ourselves the right to adore MSV's music only on technicalities alone. After all, HIS music has stood the toughest of times and in spite of that, we enjoy HIS music even at this moment as I am penning this ....oooops typing this down!!!

Surprised at my stance members??? Peace is declared!!!

CHEERS

MSV
IS MUSIC!!!

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Aug 09, 2014 5:03 pm    Post subject: Reply with quote

Ram wrote:
எனதன்பு முரளி மாமா, மாமா, மாமா!!

"அநாவசிய வாதங்கள்", "மாமன் - மருமகன் விளையாட்டு விபரீதம் ஆகிறது", "சர்ச்சை சண்டை ஆகிறது" என்று VK, பேராசிரியர், மற்றும் பலர் கருதியமையால் ஒரு புள்ளியில் இருவரும் ஒன்று பட்டு அழகாய் விலகி விடலாம் என்று பார்த்தால், மீண்டும் மீண்டும் நீங்கள் என்னைச் சண்டைக்கு இழுக்கிறீர்கள். நண்பர்களே இதற்கு நான் பொருப்பல்ல. நீங்கள் தான் சாட்சி.

ஒரு கட்டத்திற்கு மேல் தங்களது கருத்துகள் இங்கு திணிக்கப் படுகின்றன என்பது என் தாழ்மையான எண்ணம்.

Vatsan - please note - as you cautioned - Murali's arguments are getting too clinical to accept, agree, comprehend and digest.

முரளி wrote:
'ஸ்வர உறவுகளை அடிப்படியாக கொண்டு'.....நான் சொன்ன இந்த உறவு என்பது MSV in இசைக்கு அடிப்படை ஆதாரம்
.

Hello Murali - You are trying to build a framework around MSV's music. I DO NOT CONCUR WITH THAT WHOLE CONCEPT AT ALL. எம்.எஸ்.வி இசைக்கு "அடிப்படை", "ஆதாரம்" - அதாவது "BASIC RULE", "FOUNDATION" என்று ஒரு புதிய விளக்கத்தை அளிக்க முயலுகிறீர்கள். இது எம்.எஸ்.வி இசை மீது நான் கொண்ட நம்பிக்கைக்குப் புரம்பான விஷயம். இதில் என் உயிர் இருக்கும் வரை ஒரு போதும் இதற்கு உடன்பட மாட்டேன்.

உங்கள் ஆராய்ச்சி எப்படி இருக்கிறது தெரியுமா? திருப்பதி பெருமாளின் திரு-உருவச்சிலையை "அது வெறும் கல் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கிறேன். இதை அனைவரும் ஏற்க" என்று கேட்கிறீர்கள். மன்னிக்கவும் ஒரு பக்தனான நான் இதற்கு ஒரு போதும் ஒத்துப் போகமாட்டேன். இதற்காக நீங்கள் என்னை "CLOSED MINDED IDIOT" என்று கூறினாலும் அதை நான் ஏற்கத் தயார்.

எந்த ஆராய்ச்சி அவசியம். எங்கு அது அவசியம் என்று தெரிந்து ஈடுபடுங்கள். PLEASE.

இசை அறிவு அவசியம் தான். அதற்காக அந்த அறிவு கொண்டு இசைக் கடலையே எடைபோடும் அளவிற்கு அறிவு எனக்கு அவசியம் இல்லை.

இசை என்பது அறிவு சார்ந்த விஷயம் அல்ல. உணர்வு சார்ந்த விஷயம். புரிந்து கொள்ளுங்கள்.

உங்களின் இசை நிகழ்ச்சி ஏன் வெற்றி பெற வில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது. நீங்களும் அதைப் புரிந்து கொண்டு உங்கள் தேவையற்ற ஆராய்ச்சிகளை நிருத்தினால் உங்கள் வாழ்க்கை சற்றே SMOOTH ஆக இருக்கும்.

பெருமாளுக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்து என்னையே அர்ப்பணிக்கத்தான் எனதுள்ளம் ஏங்குகிறது. அவரை நோண்டிப் பார்த்து அவர் "அடிப்படை ஆதாரங்களைக்" கண்டறிய எனக்கு விருப்பம் இல்லை.


இந்த உங்களது ஆராய்ச்சி எனக்கு அவசியமற்ற ஒன்று. என்னை தயவு செய்து மன்னித்து விட்டு விடுங்கள். PLEASE.

மீண்டும் வேறு ஏதாவது நல்ல தலைப்பில் நாம் சந்திப்போமாக.


SURRENDERING IS FULFILLING THAN RESEARCHING. MY PATH IS FINDING THE TRUTH THROUGH SURRENDERING AND UNKNOWING AND NOT BY KNOWING TRUTH THROUGH BRAINS. SORRY MY OUTLOOK IS DIFFERENT.

THIS TOPIC IS A TUSSLE BETWEEN KNOWLEDGE AND WISDOM. YOU SEEM TO RELY ON KNOWLEDGE. I RELY ON WISDOM. BOTH THESE PATHS WILL NEVER MEET.

WHAT I'M TELLING IS MUCH MUCH DEEPER SENSE. As DEEP AS MUSIC AND CREATOR ITSELF.

ராம்.


Quote:
அதாவது CHORDS இல்லாமல் அதன் உணர்வு கொண்டு இசை அமைப்பவர் மெல்லிசை மன்னர் என்று தாங்கள் கூற வந்ததை முழுவதுமாகப் புரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. சொல்லப்போனால் வத்ஸன் கூறியது போல் எனது கணிப்பும் அதுவே. ஆக நாம் இருவரும் ஒத்துப்போன விஷயத்திற்கு வாதிட்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகத்தான் இருக்கிறது.


இவ்வாறு ஒரு போதும் நான் சொல்லாததை, நான் சொன்ன மாதிரி நீங்கள் எழுதியது எனக்கு சம்மதமல்ல.
எனவே தான் நான் பதில் எழுத நேர்ந்தது.

நான் ஏற்கனவே கூறியது போல ஏற்பதும் ஏற்காததும் உங்கள் சொந்த நம்பிக்கையை பொறுத்தது. அதை நான் மதிக்கிறேன்.

Quote:
இசை அறிவு அவசியம் தான். அதற்காக அந்த அறிவு கொண்டு இசைக் கடலையே எடைபோடும் அளவிற்கு அறிவு எனக்கு அவசியம் இல்லை.

இசை என்பது அறிவு சார்ந்த விஷயம் அல்ல. உணர்வு சார்ந்த விஷயம். புரிந்து கொள்ளுங்கள்.


எது அறிவை படைத்ததோ, அதுவே அதனை அறிய தூண்டுகிறது. அது மற்றவர்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கத வரையில் அதனை பற்றி அறிவது அல்லது அறிய முயற்சிப்பது தவறில்லை என்பது என் கருத்து.


Quote:
உங்களின் இசை நிகழ்ச்சி ஏன் வெற்றி பெற வில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது. நீங்களும் அதைப் புரிந்து கொண்டு உங்கள் தேவையற்ற ஆராய்ச்சிகளை நிருத்தினால் உங்கள் வாழ்க்கை சற்றே SMOOTH ஆக இருக்கும்
.

இல்லை. அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பது தெரியாமல் நீங்களாகவே இம்மாதிரி முடிவுக்கு வருவது தவறு. ரொம்ப சிம்பிள் ஆக தான் வைத்திருந்தேன்

Quote:
பெருமாளுக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் செய்து என்னையே அர்ப்பணிக்கத்தான் எனதுள்ளம் ஏங்குகிறது. அவரை நோண்டிப் பார்த்து அவர் "அடிப்படை ஆதாரங்களைக்" கண்டறிய எனக்கு விருப்பம் இல்லை


இதுவும் தவறு. அவரை அறியும் நோக்கத்தில் இருப்பவர்களுக்கும் அவர் மேல் பக்தியும் பணிவும் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

ராம். இவை அத்தனையும் நீங்கள் எழுதிய மறுப்பு பதிப்பினால் வந்தது. இல்லை என்றால் நான் எழத வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது.

எனவே நான் யார் மீதும் என் கருத்தை திணிக்க எண்ணியதில்லை.

ஆனால் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு எனக்கு சுதந்திரம் வேண்டும். அந்த சுதந்திரம் என்னிடம் பறிக்கப்படுவதாக இதுவரை நினைத்ததில்லை. ஆனால் இப்போது உங்கள் மேற்கண்ட பதிவு அவ்வாறு என்ன தூண்டிகிறது.

உண்மையை சொல்ல வேண்டுமானால் இந்த இனைய தளம் எனக்கு ஏற்றதா அல்லது இந்த இனைய தளத்திற்கு நான் ஏற்றவனா? புரியவில்லை.

மனம் மிகவும் காயப்பட்டுவிட்டது

எனவே எனது எல்லா பதிப்புகளையும் அழித்து விட்டு வெளியேற முடிவு செய்து விட்டேன்.

நன்றி.
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Aug 09, 2014 6:00 pm    Post subject: Reply with quote

அன்பான முரளி, ராம்,

மிகவும் எதார்த்தாமாக தொட்ங்கிய இப்பதிப்பு, ஒரு பாசிடிவ் ஆன அலசலாகத் தொடர்ந்தது, திடீரென ஒரு போர்க்களமாக மாறி, இருவரும் இனி எழுதப்போவதில்லையென்றும், தன் எல்லாப்பதிப்புகளையும் அழித்துவிட்டு வெளியேறப்போகிறேன் என்றும் சொல்லும் அளவு சென்றுவிட்டது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது !

இத்தனைக்கும் இருவருமே எம் எஸ் வி யின் இசைமீது அபார பற்று கொண்டு ஒவ்வொரு கோணத்தில் விவரிக்கும் போது, அடிப்படைக்கருத்து ஒன்றாய் இருந்தும், ஏன் இந்த வேறுபாடுகளும், கோபங்களும் ?

தயவுசெய்து, வாதத்தைவிடுத்து, இசை பற்றிய் உங்கள் வண்ணமயமான வர்ணனைகளை நன்றே தொடருங்கள்.

ராம் நீ அத்தனை ஆசையுடன் ஆரம்பித்த இந்த தளம்,முரளியின் தொடர்ந்த ஆத்மார்த்த முயற்சி யால் மேடை ஏறி உயர்வுபெற்றிருக்கிறது என்பதை நினைவில் கொள். மற்ற நண்பர்களின் உதவிகளும், பொறுப்பான முயற்சிகளாலும் மிகச் சிறப்புப்பெற்றிருக்கிறது என்பது நீ அறிவாய்.

முரளி . ஆர்வமிகுதியினால் ராம் எழுதியவை உங்களைப்புண் படுத்திய்யிருப்பின், உங்கள் மருமான் என மறந்து, மன்னித்து, சினம் விட்டு, பணி தொடரவும்.

மிகுந்த வேதனையில், ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sat Aug 09, 2014 7:45 pm    Post subject: Reply with quote

Let there be discussions between NYM and Ram. Don't stop just because of disagreement. Perceptions differences are bound to be there .
I wish to witness more constructive arguments so that we are enlightened. So please continue.
In a forum there will be negative characters who will try to dictate . NYM , don't get irritated please resume. I am your ardent fan.
Back to top
View user's profile Send private message Send e-mail
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sat Aug 09, 2014 8:26 pm    Post subject: PICK A SONG AND ANALYZE Reply with quote

Dear Friends, [Ram and NY M]
There is no point in leaving the forum. If you choose to leave the forum, you are leaving the forum in lurch. I think it was not the purpose of our membership here. Being an 'observer', I am able to perceive your agitated frame of mind. If I am not wrong, both of you sustain your viewpoints with no mind to 'tolerate' the contradiction. By pulling out or erasing your views off the forum, only the labour spent on the work turns a waste. Please do not deny the pleasure of reading your views to anyone. Be that as it may. NOW IT LOOMS LARGE BEFORE ME AS TO WHY-MSV The Creator CHOOSES TO PLAY INNOCENT. [ JUST TO PRECLUDE ANY SCOPE FOR DISAGREEMENT MATURING INTO A DIABOLIC BREAK POINT]. AS ARDENT FANS OF MSV let us emulate him -keep our views within , discuss our perceptions revealing no contempt whatsoever.
I trust my age permits my intervention.

Warm regards K.RAMAN Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sun Aug 10, 2014 10:47 am    Post subject: Reply with quote

Dear Mr. Ramki,
Thanks for your post. I have no ill feeling or anger against anybody and hence the question of forgiving them does not arise. However our friendship is beautiful that it will continue. I shall be a regular visitor to your house and so you will. Speak over phone when ever your are free.

Dear Prof,
Thanks for your affectionate post. As I said henceforth it will be very difficult for me to participate. But as usual come to my house when ever you come to Chennai and call me when you are free.

Dear Balaji,
Thanks for your post. I am forced to reply to you all due to your love and affection towards me. But how can I write Balaji in future. Forget about the negative characters, when ever I start writing, doubt will creep in my mind whether my opinion would receive some wrath. In that frame of my mind I just cannot do that. Mind is like a mirror. It is broken. It has lost its purpose.

But we shall share our views in any other forum like You tube where there is no restriction. I hope you have my contact number. Be in touch.

Dear Ram

You quote

Quote:
உங்களின் இசை நிகழ்ச்சி ஏன் வெற்றி பெற வில்லை என்பது எனக்கு இப்போது புரிகிறது. நீங்களும் அதைப் புரிந்து கொண்டு உங்கள் தேவையற்ற ஆராய்ச்சிகளை நிருத்தினால் உங்கள் வாழ்க்கை சற்றே SMOOTH ஆக இருக்கும்


That programme was a disappointment only to me as I my hands were tied to express my opinion. Since that be the case the reason for the success or failure is not due to technical reason. From the audience point of you I think that was a successful programme.

Also so far, my life had been very smooth by God's grace. The only problem is that it is not a smooth riding for me in the forum.

Any way I am happy for your clarification post. It is good that it shows that though we are poles apart in the perception, we will still have reverence to each other.

Thanks.

Dear VK,
Thanks for receiving my resignation letter from the post of trustee. Please do the needful to relieve me at the earliest.


For all other friends in this forum and outside,

Just feel free to call me whenever you wish to share anything about MSV. It is just we may not meet in the forum. But our touch with his music would remain the same as before.


Thanks for all.

Good Bye.
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sun Aug 10, 2014 12:45 pm    Post subject: resp. Reply with quote

NYM, yow vidappA ...!!! There is opposition at every point in life if you view it all as opposition !!! Soak it in and simply continue or write a rebuttal here and yes.....continue. View it all as an artiste would, public opinion could be extremely polarized, meaning...could be against or for him but he embraces that as a part of existence in this relative world, as some quantum of objectivity would have crept into him. Take a snapshot of the larger picture and you will feel comfortable enough to revert your decision and continue with your high octane enthusiasm which pumped in oxygen when the forum was badly in need of it.
Back to top
View user's profile Send private message Send e-mail
Vatsan



Joined: 20 Jan 2007
Posts: 352

PostPosted: Sun Aug 10, 2014 12:47 pm    Post subject: Corr. Reply with quote

I meant to write *revise your decision and revert to the forum *
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sun Aug 10, 2014 1:51 pm    Post subject: Reply with quote

Dear friends,
The most difficult song to tune... The title has got life... The most difficult times to pass ...
NYM & RAM ... No doubt both are diehard MSVians. Everybody has his own points of view.

For a layman like me who is very poor or nil of knowledge of the theory of music, what we know is only msv and his compositions which stay in our hearts .

நம்முடைய இதயம் மென்மையானது என்பார்கள். ஆனால் மெல்லிசை மன்னர்களின் பாடல்களின் குவியல் என்கின்ற போது எவ்வளவு வேண்டுமானாலும் தாங்கும்.

அவர் ஸ்வரம் அடிப்படையாகக் கொள்கிறாரோ.. கார்ட்ஸ் அடிப்படையாகக் கொள்கிறாரோ.. அதைப் பற்றிய விவாதங்களில் எதுவும் என் சிற்றறிவுக்குத் தெரியாது..

ஆனால் அவருடைய பாடல்களில் உணர்வும் உயிரும் கலந்து தருகிறார் என்பதை மட்டும் என்னால் தீர்மானமாக் சொல்ல முடியும். அந்தப் பாட்டைக் கேட்கும் போது நரம்புகளும் ரத்த நாளங்களும் சிலிர்ப்பை எதிர்கொள்வது என்பது ஒவ்வொருவருக்கும் நிகழும் நிதர்சனம் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

என்னைப் பொறுத்தவரையில் அவர் அந்த கதாபாத்திரத்தின் அடிப்படையில் தான் அவர் இசையமைக்கிறார். அந்த இசை அந்த கதாபாத்திரத்தை பேச வைக்கிறது.. அழ வைக்கிறது.. சந்தோஷப்பட வைக்கிறது... துள்ள வைக்கிறது.. ஒடிந்து போக வைக்கிறது... ஒரு மனித இனம் என்னென்ன உணர்வுகளை எதிர்கொள்ளுமோ அத்தனையும் அவருடைய இசை செய்ய வைக்கிறது..

உணர்வும் உயிருமே மெல்லிசை மன்னரின் இசையின் அடிப்படை. மற்ற சங்கதியெல்லாம் அதிலிருந்து வருபவை.

இந்த அடிப்படையே அவருடைய இசையின் வெற்றி
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Sun Aug 10, 2014 4:13 pm    Post subject: mayakkamA kalakkamA manadhilE kuzhappamA Reply with quote

நண்பர் முரளி அவர்களே
நான் சொல்லி நீங்கள் அறியவேண்டியதில்லை என அறிவேன். எனினும் பொதுநலம் கருதி இவ்வேண்டுகோளை வெளியிடுகிறேன். தனது நெஞ்சு அறிவது பொய்யற்க எனும் வாக்கின் படி அவரவர் உள்ள்க்கிடக்கை உணர்த்துவதே சரி. ஆயினும், பொது மேடைகளில் சர்ச்சை தவிர்க்க இயலாது. தயை கூர்ந்து நமது களத்திற்கு மீண்டும் தங்களின் பங்களிப்பினை தொடரவேண்டும் என்பதை அன்பர்கள் அனைவரின் சார்பாக இங்கே சுமைதாங்கி பட பாடல் தனை [உனக்கும் கீழே உள்ளவர் கோடி] நினவூட்டி , விடை தேடி நிற்கும் அன்பன். வேண்டுகோளை ஏற்பீர் என நம்பும்- ராமன் மதுரை
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
S.Balaji



Joined: 10 Jan 2007
Posts: 772

PostPosted: Sun Aug 10, 2014 5:38 pm    Post subject: Reply with quote

NYM ,

Please continue to write your analysis as usual. All your articles will be reference points in future. The current and future will come to understand more about MSV through you. Its very important.
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Goto page Previous  1, 2, 3, 4  Next
Page 3 of 4

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group