"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

MELLISAI MANNAR T.K. RAMAMURTHI PASSED AWAY

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Apr 17, 2013 9:58 am    Post subject: MELLISAI MANNAR T.K. RAMAMURTHI PASSED AWAY Reply with quote

With profound sorrow, it is difficult for us to digest the news of the passsing away of our legend T.K. RAMAMURTHI at the age of 92. Our MSV has lost his best half in his music career.

We do not know how to bear the loss of Shri T.K.R., that too immediately after that of Shri P.B. Sreenivas.

May their souls rest in peace.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Apr 17, 2013 12:01 pm    Post subject: Reply with quote

[URL=http://s1146.photobucket.com/user/imagivity/media/unspecific/TKRD01_zps14c0fc02.jpg.html][IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/TKRD01_zps14c0fc02.jpg[/IMG][/URL]

திரு டி.கே. ராமமூர்த்தி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்புவோருக்காக அவருடைய முகவரி

D-3, Third Floor, Apco Apartments, Door No.4, Balaji Nagar Third Street, Royapettah, Chennai - 14.

எம்.எஸ்.வி. அவர்களும் டி.கே. ஆர். அவர்களும் இணைந்து நிற்கும் புகைப்படம், ராமமூர்த்தி அவர்களின் இல்லத்தில் மாட்டப் பட்டுள்ளது.

[URL=http://s1146.photobucket.com/user/imagivity/media/unspecific/TKRMSV01_zps9b9c6e94.jpg.html][IMG]http://i1146.photobucket.com/albums/o528/imagivity/unspecific/TKRMSV01_zps9b9c6e94.jpg[/IMG][/URL]

திரு ராமமூர்த்தி அவர்கள் நேற்று பிற்பகல் வரை மிகவும் சுறுசுறுப்பாகவும் நல்ல நினைவுகளுடனும் இருந்துள்ளார். அவரும் எம்.எஸ்.வி. அவர்களும் சந்தித்து உரையாடியுள்ளனர். மாலை உடல் நிலை சற்று சீர்குலைந்து இன்று அதிகாலை 00.30 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார். அநேகமாக நாளை 18.04.2013 காலை இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
vaidymsv



Joined: 08 Nov 2006
Posts: 715
Location: Madras, India

PostPosted: Wed Apr 17, 2013 12:18 pm    Post subject: YET ANOTHER BLOW Reply with quote

Dear All,

Close on the heels of the sudden passing away of Shri. PBS, yet another blow in the form of loosing Shri. TKR has befallen MSV. The association of these giants for well over 6 decades has created songs that will live for 60 millenniums. It is a great loss for the entire MSV clan as without Shri. TKR, we may not have had MSV!!! Shri. TKR was always there in all our programmes and only recently his movement was curtailed by his age.

His startling revelations about MSV's spontaneous creativity during the launch of MSVTIMES.COM and our "Vaarthaigal Sollum Vaathiangal" concert took the entire industry by storm.

MSVTIMES.COM salutes this musician par excellence. On behalf of all of us, may I appeal to the State Government to accord him a State Funeral please?

Our condolences to the bereaved family & to Shri. MSV...

VAIDYMSV

_________________
vaidymsv
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Wed Apr 17, 2013 3:14 pm    Post subject: Reply with quote

ndeed It is a great loss to all MSV-TKR fans. My condolences to TKR family and particularly MSV.

We are planning to go to TKR's house at Royapettah to offer our condolences. We members from msvtimes will assemble at his house at 6.30 am. All forum members can join.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Apr 18, 2013 10:25 pm    Post subject: Reply with quote

loss of words to explain the loss of giants .
their creations are with me for more than 50 years may be for most of us .
i pray to God ,to give strength to their families to bear the loss which can never be overcome .
but these legends have established their class through their creations over the years which will remain with us for many more years to come

i am more concerned about our master .he has lost two of his close pals with in a week and my prayers to give strength to overcome these losses

with prayers
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Fri Apr 19, 2013 11:26 am    Post subject: Reply with quote

DEAR ALL,

Even before the sad news of PBS could sink in, we recevied another bad news. My Heartfelt condolences to the family members of TKR and all his fans.

V SIVASANKARAN
Back to top
View user's profile Send private message
RENGASAMY



Joined: 14 Jan 2007
Posts: 71

PostPosted: Fri Apr 19, 2013 4:39 pm    Post subject: Reply with quote

Dear All

Demise of Shri PBS and Shri Tkr is Great grief to the music lovers. They ruled the Tamil film music industry for more 5 decades and we never forgot their wonderful creations. Great loss to our Master and don't know how is going to digest the lose of both great legends who were part of his music life.

My heart felt condolence to their family members as well as their great fans. Pray with god for their soul is rest in peace.

With regrets
krs
Back to top
View user's profile Send private message Send e-mail
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 20, 2013 6:56 am    Post subject: Reply with quote

Dear All
Shri Ramki has forwarded to me a poem by Kaviri Maindan I am reproducing the text below.

Quote:

[KANNADASAN'S PHOTO

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்]

18.04.2013 – வியாழக்கிழமை – சித்திரை=05.

நாதமெனும் கோயிலிலே
ஞானவிளக்கேற்றி வைத்தேன்.

[TKR'S PHOTO']

ஆசிரியர் குழு.
கவியரசு மின்னஞ்சல்& குறுஞ்செய்தி சேவை

ஒருவராக வாழுகின்றோம்
பிரிவதற்கோ இதயமில்லை...

[PHOTO: TMS, MSV, TKR
- DESCRIBTION OF PHOTO: கண்ணதாசன் –விஸ்வநாதன் அறக்கட்டளை நிகழ்ச்சியில் மெல்லிசை மன்னர்களுக்கு பொன்னாடை அணிவிப்பவர் டி.எம்.சௌந்தர்ராஜன். ]

இன்றைய சிறப்புப் பாடல்

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
என்பாடல் சேய்கேட்கும் விருந்தாகலாம்
என்பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்

என்மேன்மை இறைவா அருளாதலால்
என்மேன்மை இறைவா அருளாதலால்..
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்
எரியாத தீபத்தில் ஓளிவேண்டினேன்

ஏழாம் கடலும் வானும் நிலவும்
என்னுடன் விளையாடும்
இசை என்னிடம் உருவாகும்
இசை என்னிடம் உருவாகும்

விதியோடு விளையாடும் ராகங்களே
விளக்கேற்றி உயிர்காக்க வாருங்களேன்
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே
கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே


த்த்தும் கடலை ஓடி ஓடி வரும்
எந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே..

எந்தன் இசையுடன் பாடல் கேட்டபின்னும்
இன்னும் வரவ்வில்லை செய்தபாவமென்ன தீபங்களே
கண்ணில் கனல் வர பாடவேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும்

தீபங்களே..தீபங்களே..தீபங்களே...

இசைக்கேட்டால் புவிஅசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்

படம்: தவப்புதல்வன்
பாடல்: கவியரசர்
குரல்: டி.எம்.எஸ்.

****************************************************


மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி
இசையே உனக்கில்லை இறப்பு!

குறிலும் நெடிலும் இணைந்தால் தமிழ் வார்த்தை..
நீ குறில்.. என்பதால் மரணத்தைக்கூட முன்பதிவு செய்தாயா?
மலைக்கோட்டை நகரைப் பிறப்பிடமாய்க் கொண்டு - எங்கள்
மனக்கோட்டைகளை இசையால் ஆட்சிசெய்பவனே!

உள்ளம் உருக வயலின் உன்னில்தான் உருவாகியது..
பார்த்த ஞாபகம் இல்லையோ?
உன்னை ஒன்று கேட்பேன்.. உண்மை சொல்ல வேண்டும்
என்னைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்..?
கவியரசு கண்ணதாசன் வரிகளுக்கு ஜீவன்தந்தவனே..
திரைப்பாடல்களுக்கு இசை என்பது உன் காலத்தில்
வார்த்தைகளுக்கு விரிக்கப்பட்ட ரத்தினக்கம்பளம்!

மறக்க முடியாத பாடல்கள் ‘மலர்ந்தும் மலராத’ முதல்..
தேடிக்கிடைக்காத திரவியமே.. தெள்ளமுதே..
நாடிநரம்பெல்லாம் உன்னிசையோடுதான் பின்னிக்கிடக்கிறதே!
வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் இசையில் மூழ்கித்திளைத்தவரே!
கேட்கும் காதுகளையெல்லாம் இனிமையில் மூழ்கச்செய்தவரே!
என்னதவம் செய்தோம் ஐயா நாங்கள் இந்தப்பிறவியில் பிறக்க
என்று ஏங்க வைத்தது உங்கள் இசைமட்டுமே!!

11.04.1993ல் கவியரசு கண்ணதாசன் விருதினை தங்களுக்கு
வழங்கி மகிழ்ந்த தமிழ்ச்சங்கம் என்கிற பெருமை தந்தீரே!

எளிமை, இனிமை என்று வாழ்க்கை முழுவதும்
அன்பில் ராஜாங்கம் நடத்தி மறைந்தீரே!
இல்லம் வந்து தங்கள் தனிவயலின் கச்சேரிகேட்டு
மகிழ்ந்த பாக்கியம் பெற்றவர் நாங்கள் என்பதை
நாளும்பொழுதுமல்லவா எண்ணி மகிழ்கிறோம்!

இசையின் நுணுக்கங்களை நன்கறிந்து - அதைத்
திரையிசைக்கு ஏற்றவாறு பரிமாறிய ஏந்தலே!
அசையும் சொல்லும் உன் இசைகேட்டு ஆடும்
திருவிழாவல்லவா அக்காலத்துப் பாடல்கள்?
“மறக்க முடியுமா?” நீ இசை அமைத்ததை
நாங்கள் எப்படி மறக்க முடியும்?

நெஞ்சிருக்கும் வரை உந்தன் நினைவிருக்கும்
செந்தமிழ் இருக்கும் வரை சேர்ந்தே உன் புகழிருக்கும்!

அன்புடன்,
காவிரிமைந்தன் - (மு.இரவிச்சந்திரன்)
ஜெ.சந்திரசேகர் மற்றும் சியாமளா சிவக்குமார் - துபாய்.
எம்.கே.மணி, ஏ.நாகப்பன், ந.கோபி, அப்துல் சலாம்,
மன்னார்குடி மலர்வேந்தன், ந.ஐங்கரன், ஜெ.ரவீந்திரன்,
ஜெகன்னாதன், வித்யாஜெகன்னாதன், கண்ணன்சேகர், புலவர் ராமதாஸ் போத்தீஸ் மீனாட்சிசுந்தரம், ராகப்பிரவாகம் கே.சுந்தர், ராமாபுரம் சரவணன்,
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் -
பம்மல் - சென்னை 600075
*************************************************************


மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி
கவியரசரோடு கலந்தார்.

---

டி. கே. இராமமூர்த்தி புகழ்பெற்ற தென்னிந்திய தமிழ் இசையமைப்பாளர் மற்றும் வயலின் கலைஞர். இவரும்
எம். எஸ். விஸ்வநாதன் அவர்களும் இணைந்து விஸ்வநாதன் - இராமமூர்த்தி இணையாக பல திரைப்படங்களுக்கு 1960/1970 காலங்களில் தமிழ்,தெலுங்கு,மலையாள திரைப்படங்களில் இசையமைத்து முடிசூடா மன்னர்களாக விளங்கினர். விசுவநாதனிடம் இருந்து பிரிந்த பிறகு ராமமூர்த்தி முதன்முதலாக இசையமைத்த படம் 1966 இல் வெளிவந்த சாது மிரண்டால். இவர் மூச்சுத்திணறல் காரணமாக 2013-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் நாள் காலமானார்.
சாது மிரண்டால், தேன்மழை, மறக்கமுடியுமா, மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, எங்களுக்கும் காலம்வரும், பட்டத்துராணி, மூன்றெழுத்து, நீலகிரி எக்ஸ்பிரஸ், சக்திலீலை, நான், பிராத்தனை, தங்கச்சுரங்கம், காதல்ஜோதி, ஆலயம், சோப்பு சீப்பு கண்ணாடி, சங்கமம், அவளுக்கும் ஆயிரம் கண்கள் உள்ளிட்ட 19 படங்களுக்கு தனியாகவும், விசுவநாதனுடன் இணைந்து சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்திற்காக இறுதியாக விசுவநாதனுடன் இணைந்து பணியாற்றினார்.
பழம்பெரும் இசையமைப்பாளர் டி.கே.ராமமூர்த்தி (17.04.13) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92. மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட 40க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் ராமமூர்த்தி. மறைந்த ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.
************************************************************

மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி ஆசிரியர் குழு.

[PHOTOS OF
புலவர்.வீர.இராமதாஸ் பேராசிரியை.சரஸ்வதிராமநாதன்
9994310459. 9443128369.

வழக்கறிஞர்.காந்திகண்ணதாசன். கவிஞர்.காவிரிமைந்தன்
9444079464. 00971502519693

ஸ்பிக்.A.K.நாகராஜன் கவிஞர்.பி.கண்ணன்சேகர்.
9500002967. 9698890108.

மின்னஞ்சல் வடிவமைப்பு: பி.கண்ணன்சேகர்
நெ:13,வரதாரெட்டித்தெரு, திமிரி-632152. வேலூர் மாவட்டம்.
_________________________________________________________
*மின்னஞ்சல் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறோம்


_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 20, 2013 6:59 am    Post subject: Reply with quote

Another poem forwarded by Shri Ramki, of Kaviri Maindan

வாழ்ந்த சரித்திரம்!!

பாரதிக்குப் பிறகு
முண்டாசு கட்டியவன்!
பாடகனாய் நம்
மனதில் ஒட்டியவன்!
சிங்காரச் சென்னையிலே
சி ஐ டி காலணியிலிருந்து
டிரைவ்-ன்-உட்லேண்ட்ஸிற்கு
தினமும் சென்ற பறவை!
எவரிடத்தும் அன்புகாட்டும்
எவரெஸ்டு இதயம்!
புகழனைத்தும் குவிந்திருந்தும்
அமைதிதவழும் நிலையம்!
நேற்றைக்குகூட பார்த்தேன் என்பது
நிரம்பவர்களின் கூற்று!
கறுப்புவெள்ளை காலத்தில்
காற்றில் தவழ்ந்த கானங்களில்
கணிசமானது இவர் பாடியது!
நடக்கின்ற வைபவங்களிலெல்லாம்
மறக்காமல் கலந்துகொண்டு
‘பா’ எழுதி வாழ்த்துகின்ற
பழக்கம் இவருடையது!
சட்டைப் பையில் வண்ணத்தூரிகைகள்
எப்போதும் இருக்கும்!
எண்ணங்கள் தோன்றும்போது
எடுத்தி எழுதி வைப்பார்!
சக்கரவர்த்திபோல் உடையணிந்து
சாமானியனைப் போல் வாழ்ந்த சரித்திரம்!!

அன்புடன்,
காவிரிமைந்தன்

தேவன் தந்த வீணை

தேவன் தந்த தேகத்தை
நாதம் தரும் வீணையாக்கி
கானம் பாடிய ஜீவநதி - இன்று
கால மரண கணக்கானது!

PBS என்னும் அட்சரங்களை
PLAY BACK SINGER என
விளக்கம் சொன்ன வித்தகன் நீ!
SPBக்கும் கலைத்துறையில் முன்னோடி!!

பாடலே வாழ்க்கையாய்
வாழ்க்கையே பாடலாய்
வாழ்ந்து முடித்தவனே!

சப்தஸ்வரங்களில் நிதம்மூழ்கி
சங்கீதசாகரம் படைத்தாய்!
நித்தமும்நின் குரல்கேட்டு
சொக்கித்திரிகிறோம் நாங்கள்!

மென்மையான குரலெடுத்து
மெல்லவருடும் தென்றல் நீ!
சொல்லும் சொல்லெல்லாம்
சுகந்தமன்றோ எங்களுக்கு?

கவியரசு கண்ணதாசன்
எழுதிக் குவித்த பாடல்களில்
எத்தனையோ நின் குரலில்!!

காலங்களில் அவள் வசந்தம்
காலங்களை என்றும் வெல்லும்!
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நேற்றுமின்றும் நாளை வரும்!!
நிலவே என்னிடம் நெருங்காதே பாடலில்
நெஞ்சமுருகாதோர் யாரிங்கே?
மயக்கமா கலக்கமா மனிதகுலமிருக்கும்வரை
மறக்கத்தான் முடியுமா?
விழிக்கதவை மூடத்தான் முடியாமல்
வழியும்கண்ணீர் விடை தருகிறதே!
விதியின் கரங்களில் பிரிவென்பது
தாங்கமுடியாமல் தொடர்கிறதே!!

தமிழ்மொழிமீது உனக்கிருக்கும் காதலை
தமிழ்வருடப்பிறப்பில் உயிர்நீத்து மெய்ப்பித்தாய்!
எடுத்தபிறவி முடித்தகளைப்பில்தானே தூங்குகிறாய்! –நீ
கொடுத்த பாடல்கள் இருப்பதால்நாங்கள் வாழுகிறோம்!!

என்றும் உன் நினைவில்..
காவிரிமைந்தன்
சியாமளா சிவக்குமார் - துபாய் - அமீரகம்
கண்ணன் சேகர் - இராமதாஸ் - திமிரி - வேலூர்
எம்.கே.மணி ஏ.கே.நாகராஜன் ஏ. நாகப்பன், ந. கோபி
முரளி வேணுகோபாலன் - பம்மல் - கண்ணதாசன் தமிழ்ச்சங்கம்.. சென்னை 75.

_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Sat Apr 20, 2013 7:26 am    Post subject: Reply with quote

images of two pdf documents forwarded by Shri Ramki




_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Sat Apr 20, 2013 10:27 am    Post subject: Reply with quote

Dear All,

In rememberance of PBS, a programme is organised by Vasanth TV on 22nd April by 6 pm. Venue is Kamaraj Memorial Hall.

Shri Msv, Tms, PS, SPB, KJY & VJ are partcipating. NO passes required. All are welcome.

V SIVASANKARAN
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group