"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

indha matter kku eppadi meter kodukka ????

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze!
View previous topic :: View next topic  
Author Message
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Fri Mar 22, 2013 9:47 pm    Post subject: indha matter kku eppadi meter kodukka ???? Reply with quote

இப்படி ஒரு மைல் நீள மேட்டர் தருகிறார் கவியரசர்.....
.
" திருமஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ

நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க "

இது முதல் சரணத்தின் முதல் பகுதி.

அடேயப்பா ! இந்த வரிகளுக்கு எப்படி ஐயா டியூன் போடமுடியும் ?

இந்த வரிகளை எந்த ஒரு இசையமைப்பாளருக்குக் கொடுத்தாலும், ஒன்று, அந்தக்கவிஞர் அன்றோடு வாய்ப்புக்கள் இன்றி மறைந்திருப்பார் - இசையமைப்பாளர் பிரபலமாக இருந்தால் ! அல்லது இசையமைப்பாளர் துண்டைக் காணும், துணியைக்காணும் என்று ஒடியிருப்பார், பாடலாசிரியர் பெரிய கை என்றால் !!

ஆனால் நம் மெல்லிசை மன்னரோ ( தன் ஹார்மோனியத்தில் விரல்களைப் படரவிட்டு, கவிஞரை ஒரு நமட்டுச்சிரிப்புடன் பார்த்தவண்ணம் ) கொடுக்கிறார் மனம் கொள்ளைகொள்ளும் இசைவடிவம் !!

அலை அலையாக அழகாக ஒடும் சங்கதிகள், மனத்தை வருடும் இசை, என மேட்டரை மீட்டரில் "நச்" என உட்கார்த்திவிடுகிறார் !
- ".......வந்தே பார்வதீப ரமேஸ்வரௌ" என்பது போலல்லாமல் !!

இப்படி ஒரு நீண்ட வரிகளைப் பார்த்த பின்னும், எப்படி ஐயா இப்படி ஒரு சங்கதிகள் உங்களுக்கு உதிக்கின்றது ? உயிரோட்ட இசை ஊற்றெடுக்கிறது ?

சரணத்தின் அடுத்த பகுதிக்கு வேறு ஒரு மீட்டர் :

"தினம் உன்னால் என் சுகம் வளர்க
இனி என்னால் உன் நிலை உயர்க "

வரிகளில் பொதிந்துள்ள அர்த்தமோ அபாரம்.
தன்னை கைப்பிடிக்கும் கணவன் வாழ்வில் உயர்வான் என்று எவ்வளவு அழுத்தமாக சொல்கிறார் கவிஞர் !

அடுத்த சரணம் பல் உடைப்பதைப் பாருங்கள் :

"எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தான் தன் முகம் கனிய

இந்தப் பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்றும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக

குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக"

இப்பாடலை அலுவலகத்திலிருந்து வரும்போது என் ஐப்பாடில் கேட்டேன், கேட்டேன்..... கேட்டு முடிக்கத்தெரியவில்லை.

எழுதத்தீர்மானித்து எழுதிகிறேன்.

முரளி, வத்சன் போன்றோர், பாடலின் லிங்க் கொடுத்து மேலும் அலசவேண்டிகிறேன்.

ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Fri Mar 22, 2013 10:10 pm    Post subject: Reply with quote

திரு ராம்கி அவர்களே,

இந்த சரணம் எந்த பாடலில்? விடை கிடைக்கும் வரை மண்டை காய்ந்துவிடும் போலிருக்கிறது.



N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
msvramki



Joined: 18 Dec 2006
Posts: 418
Location: Chennai

PostPosted: Sat Mar 23, 2013 1:00 pm    Post subject: Reply with quote

நண்பர்களே,

பதிவைப் பாதியிலே நிறுத்தியதற்கு மன்னிக்கவும். தொடருகிறேன்.

பாடலின் பல்லவி :

"உன்னை அடைந்த மனம் வாழ்க
இனி ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக
நல்ல வாழ்வும் வளமும் மலர்க "

படம் : ஆனந்தி
பாடல் : கவியரசர் கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விசுவநாதன்.

"இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக" இவ்வரி என்ன ஒரூ அழகு !

பல்லவிக்குப் பின் வயலின்களின் ஒரு அருமையான இசையைத் தொடர்வது, நஞ்சப்பாவின் குழலின் குழைவு. அதற்குத்தான் எத்தனை இனிமை.

இதனைத்தொடர்வது தான் நான் முன் விவரித்த பல்லுடைக்கும் பல்லவி .

இடையிசையின் இனிமையைச் சொல்லி மாளாது. குறிப்பாக சந்தூரின் இனிய அதிர்வு.

அத்தனை வாத்தியங்களும் எப்படி இவரது கையசைப்புக்கு இனிமையைக்கொட்டுகின்றன என்பது தெரியவில்லை !

அதன் பின் சரணம் 2.

இந்தப்பாடல் பிசுசீலா.ஆர்க் தளத்தில் உள்ளது. கேளுங்கள், கேட்டுக்கொண்டே இருங்கள்.

நன்றி
ராம்கி.
_________________
isaiyin innoru peyar thaan emmessvee.
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 23, 2013 2:16 pm    Post subject: Reply with quote

திரு ராம்கி அவர்களே,
காக்க வைத்து பதிவு செய்தாலும் நோக்க வைக்கின்ற தகவல்களை தந்ததற்கு நன்றி.
பலமுறை கேட்காத பாடல் என்பதால் இதன் youtube தொடர்பை தேடினால் ஏமாற்றம்! என்னுடன் உள்ள 2000 பாடல்களில் இருந்ததால் போட்டு கேட்டேன். அலை அலையாய் வரும் வார்த்தைக்கு சுகமாக இசை அமைத்திருக்கிறார். சுசிலாவே அதை பாடும் போது மூச்சு திணறல் வருகிறது. இது முதல் இருவு பாடலா? வழக்கமாக வரும் முதல் இருவு பாடல்களில் வரும் ஒரு மயக்கம் இல்லை என்பதால் திருமணதிற்கு பின் உள்ள செண்டிமெண்ட்ஸ் பற்றியும் இருக்கலாம். பாடலின் tune 'ஆயிரம் இரவுகள் வருவதுண்டு' என்ற பாடலை நினைவு படுத்துகிறது.ஹம்மிங்கை கவனிக்கவும்.ஒவ்வொரு செண்டிமேண்டிர்க்கும் ஒரு tune வைத்திருப்பார் போல் உள்ளது.

பாடலில் கவிஞரின் வார்த்தைகளை சிதையா வண்ணம் இசை அமைத்திருப்பது தான் இதன் விசேஷம். சரணம் முடிந்தவுடன் MSVக்கு Tuneஐ, negotiate செய்து பல்லவியுடன் இணைக்க வார்த்தைகள் இல்லை. ஆனால் அதை பற்றி கவலை படாமல் ஹம்மிங் மூலமாக negotiate செய்வது அவருக்கு கை வந்த கலை.

இந்த பதிவு தொடர்பாக நண்பர் திரு அசோக் iyer சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு முறை Solidaire கம்பெனி இன் 25 ஆண்டு விழாவுக்காக ஒரு பாடல் பதிவு செய்ய MSVஐ அணுகினார்களாம். திரு அசோக் iyer, MSVயுடன் ஹோட்டல் Swagathஇல் கம்போசிங் செய்யும் போது கூட இருந்தாராம். அப்போது எழுதிய வார்த்தைகளுக்கு காலை 11 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் முடித்துவிட்டாராம். மேலும் மெட்டு அமைத்து முடித்து எல்லாம் ஓகே என்ற பின்பு, கவிஞர் இடையில் சில வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்று கூறினாராம். மற்றவர்கள் தயக்கத்துடன் MSVயை அணுக அவரும் அதற்கென்ன செய்தால் போச்சு என்று சர்வ சாதாரணமாக கூறியது மட்டும் அல்லாமல், அந்த TUNE மாறாமலேயே மேலும் இடை இடையே கொடுத்த வார்த்தைகளையும் TUNEஇல் உட்கார வைத்ததை, அதிசயத்துடன் பார்த்தார்களாம். இந்த தகவலை என்னிடம் பகிர்ந்து கொண்ட போது அசோக் IYER கூறியது 'MSVக்கு வார்த்தைகள் பயப்படுகின்றன. அவைகள் தானாகவே எங்கு சென்று உட்கார வேண்டுமோ அங்கே போய் உட்கார்ந்துகொள்கின்றன'.

இந்த தகவல், இந்த பாடல் பதிவிற்கு மேலும் வலு சேர்க்கும்.

இதே போல உள்ள மற்றொரு பாடலை நினைவு படுத்துகிறேன்.

'மஞ்சள் வண்ண வெயில் பட்டு கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கொஞ்சும் போது ஆசை இல்லையா?"
(பாடல்: பால் வண்ணம் பருவம் கொண்டு)


பதிவிற்கு நன்றி.


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 23, 2013 2:26 pm    Post subject: Reply with quote

Dear Friends.

The link for the song

http://psusheela.org/tam/list.php?offset=1620&ord=song&cos=solo


N Y Murali
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Mar 23, 2013 2:58 pm    Post subject: Reply with quote

ராம்கி Quote
Quote:
அலை அலையாக அழகாக ஒடும் சங்கதிகள், மனத்தை வருடும் இசை, என மேட்டரை மீட்டரில் "நச்" என உட்கார்த்திவிடுகிறார் !
- ".......வந்தே பார்வதீப ரமேஸ்வரௌ" என்பது போலல்லாமல் !!


அடடா. இந்த விஷயம் இப்போது தான் புரிகின்றது.
'வந்தே பார்வதி ப....ரமேஸ்வரி'. இதன் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். சமயம் நேரிடும் போது பாடலை எழுதி இசை அமைக்காமல், இசை அமைத்த பின்னரே வார்த்தைகளை எழுத வேண்டும் என்ற Rigid mentalityயின் விளைவு தான் இந்த கோரம்.

அதுவும் இசையை அமைத்து அதன் notationகளை மேற்கத்திய இசை குறியீடுகளில், Bar கணக்குகளில் எழுதி அதை வாசிப்பவர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டதால் வந்த விளைவு.

இதில் Theoryக்கு முக்கியத்துவமும், வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் இரண்டாம் பட்ச மதிப்பும் தந்ததால் வந்த வினை.

ம். என்ன செய்ய ? எல்லாம் காலத்தின் கோலம்


N Y Murali[/quote]
Back to top
View user's profile Send private message Send e-mail
RENGASAMY



Joined: 14 Jan 2007
Posts: 71

PostPosted: Sat Mar 23, 2013 10:08 pm    Post subject: Reply with quote

Dear Mr. Murali

Thanks for giving such an excellent song. Also my thanks to Mr.Ramki Avl. One more excellent song is there is in this film.

"Kannile Anbirundhal Kallile Dheivam Varum" What a song? No words to say.

K.rengasamy (krs)

N Y MURALI wrote:
ராம்கி Quote
Quote:
அலை அலையாக அழகாக ஒடும் சங்கதிகள், மனத்தை வருடும் இசை, என மேட்டரை மீட்டரில் "நச்" என உட்கார்த்திவிடுகிறார் !
- ".......வந்தே பார்வதீப ரமேஸ்வரௌ" என்பது போலல்லாமல் !!


அடடா. இந்த விஷயம் இப்போது தான் புரிகின்றது.
'வந்தே பார்வதி ப....ரமேஸ்வரி'. இதன் காரணம் என்ன என்பதை நாம் ஆராய வேண்டும். சமயம் நேரிடும் போது பாடலை எழுதி இசை அமைக்காமல், இசை அமைத்த பின்னரே வார்த்தைகளை எழுத வேண்டும் என்ற Rigid mentalityயின் விளைவு தான் இந்த கோரம்.

அதுவும் இசையை அமைத்து அதன் notationகளை மேற்கத்திய இசை குறியீடுகளில், Bar கணக்குகளில் எழுதி அதை வாசிப்பவர்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டதால் வந்த விளைவு.

இதில் Theoryக்கு முக்கியத்துவமும், வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் இரண்டாம் பட்ச மதிப்பும் தந்ததால் வந்த வினை.

ம். என்ன செய்ய ? எல்லாம் காலத்தின் கோலம்


N Y Murali
[/quote]
Back to top
View user's profile Send private message Send e-mail
V Sivasankaran



Joined: 13 Nov 2008
Posts: 152

PostPosted: Mon Mar 25, 2013 1:47 pm    Post subject: Reply with quote

Dear Ramki \ Murali sir,

Had taken note of this huge blemish in the song nadha vindhongal after reading Mr. Ramki's posting. Just wanted to know if this could have been averted had it been mattereku meter.

V Sivasankaran
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sat Mar 30, 2013 11:24 pm    Post subject: Reply with quote

இந்தப் பாடலைப் பற்றி எழுத வேண்டும் என்று பல நாட்களாக (மாதங்களாக, சில வருடங்களாக!) நினைத்ததுண்டு.

ராம்கி அவர்கள் மூலமாக இந்த வாய்ப்பு இப்போது கிட்டியிருக்கிறது. முதலில் பாடல் வரிகளைத் தருகிறேன்

உன்னை அடைந்த மனம் வாழ்க - இனி
ஒவ்வொரு இரவும் வாழ்க
இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக - நல்ல
வாழ்வும் வளமும் மலர்க

(உன்னை)

சிறு மஞ்சள் கொஞ்சும் மயில்
உன்னைத் தஞ்சம் என்று
வந்தாள் உன்னுடன் மகிழ - நடை
அஞ்சும் பெண்ணின் நெஞ்சில்
வஞ்சம் என்றும் இல்லை
மன்னா காத்தருள் புரிக - இனி
உன்னால் என் சுகம் வளர்க - இனி
என்னால் உன் நிலை உயர்க

(உன்னை)

எந்தன் தந்தை என்னை
உந்தன் கையில் பிள்ளை என்று
தந்தார் தன் மனம் கனிய - இந்தப்
பிள்ளை தன்னை உந்தன்
அன்னை என்னும் உள்ளம்
தன்னால் காத்தருள் புரிக
குறை இல்லாத வாழ்வொன்று அருள்க
துணை என்னோடு நீ கொள்ள வருக

(உன்னை)

இதில் அற்புதமாக எனக்குத் தோன்றிய ஒரு விஷயம் - இதில் கதாநாயகி தன்னைத்தானே வாழ்த்திப் பாடிக் கொள்கிறாள், மிகவும் சாமர்த்தியமாக!

உன்னை அடைந்த மனம் வாழ்க!
'உன்னை அடைந்த மனம்' என்று அவள் குறிப்பிடுவது தன்னைத்தானே?


அடுத்த வரியில், 'இனி ஒவ்வொரு இரவும் வாழ்க!' என்று இரவை வாழ்த்துகிறாள்

அவள் இரவையா வாழ்த்துகிறாள்? ஒவ்வொரு இரவும் நமக்கு இன்பமாக அமைய வேண்டும் என்று தன்னையும் கணவனையும் தானே ஆசிர்வாதமும் செய்து கொள்கிறாள்!

தொடர்ந்து,

'இந்த மஞ்சம் உன் நெஞ்சில் தேனாக - நல்ல
வாழ்வும் வளமும் மலர்க.'

என்று
தன் கணவனையும் வாழ்த்துகிறாள்.

முதல் சரணத்தில் 'நான் உன்னைத் தஞ்சம் அடைந்து விட்டேன். நீதான் என்னைக் காக்க வேண்டும்' என்று கேட்டு விட்டு,
'இனி உன்னால் என் சுகம் வளர்க,
என்று மீண்டும் தன்னை வாழ்த்திக் கொள்கிறாள்.

'இனி என்னால் உன் நிலை உயர்க.'

என்று மீண்டும் கணவனுக்கு ஒரு ஆசீர்வாதம்!

இரண்டாவது சரணத்தில். 'என் தந்தை உன்னை நம்பி என்னை உன்னிடம் ஒப்படைத்து விட்டார். இனி என்னை எந்த விதக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வது உன் பொறுப்பு.' என்கிறாள்.

அதுவும் எப்படி? என் தந்தை என்னை ஒரு குழந்தையை ஒப்படைப்பதுபோல் உன்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அதனால் நீ ஒரு தாய் போல் இருந்து என்னைப் பார்த்துக் கொள்ள வேண்டும்' என்கிறாள். பொதுவாகப் பெண்களுக்குத்தான் தாயுள்ளம் என்று சொல்வது வழக்கும். ஆனால் இங்கே மனைவி தன்னைக் குழந்தையாகவும் , கணவனைத் தாயாகவும் கருதச் சொல்கிறாள்.

'குறை இல்லாத வாழ்வொன்று அருள்க' என்று மீண்டும் ஒரு விண்ணப்பம்.

'துணை என்னோடு நீ கொள்ள வருக,' என்னும்போது, 'ஏதோ இப்படியெல்லாம் சொல்வதால் நான் உனக்கு ஒரு சுமை என்று நினைத்து விடாதே. நானும் உனக்கு ஒரு துணையாக இருப்பே'ன் என்று நம்பிக்கை அளிக்கிறாள்.

இறுதியில் வரும் ஹம்மிங் ஒரு அமைதி, திருப்தி, முழுமை, நிம்மதி போன்ற உணர்வுகளை உள்ளடக்கியிருக்கிறது. அதனால்தான் சுருக்கமாகவும் இருக்கிறது.

'இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது? எனக்கு நல்ல வாழ்க்கை கிடைத்திருக்கிறது' என்ற சங்கதியுடன் கூட, 'எனக்கு என் கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அதனால் நீங்கள் விடை பெற்றுக் கொள்ளுங்கள்' என்று சொல்வதுபோல் சீக்கிரமாகவும் இந்த ஹம்மிங் முடிந்து விடுகிறது.

இந்தப் பாடலில், பல்லவிக்குப் பிறகு வரும் இசை 'சிரித்தாள் தங்கப் பதுமையின்' முன்னிசையை நினைவு படுத்துகிறது. அதேபோல், இரண்டாவது சரணத்தில் வரும் இணைப்பிசை, தண்ணீரிலே தாமரைப்பூவின் இரண்டாவது சரணத்தின் இணைப்பிசையை நினைவு படுத்திகிறது. இது பற்றி முரளியின் கருத்தை (விளக்கத்தை) அறிய ஆவாலாக இருக்கிறேன்.

'நீயும் நானும் மகிழ்ச்சியாக வாழப்போகிறோம்' என்று த்ங்கள் இருவரையும் சேர்த்துத் தானே வாழ்த்துவது போல் பாடல் அமைந்திருக்கிறது. முதல் இரவுப் பாடல்களில் சற்றே வித்தியாசமானது இது. இன்னொரு வித்தியாசமான முதல் இரவுப்பாடல் 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்.' இது பற்றிய என் உணர்வுகளைப் பின்னொரு சமயம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Pick a Song and Analyze! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group