"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

kannadasan vizha --on 10/12/10 with mellisai mannar music

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery
View previous topic :: View next topic  
Author Message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Thu Dec 02, 2010 10:14 pm    Post subject: kannadasan vizha --on 10/12/10 with mellisai mannar music Reply with quote

மலேசிய தமிழர்கள் அமைப்பின் சார்பில் வருகின்ற 10.12.2010 அன்று மாலை 6.00 மணிக்கு சென்னை காமராசர் அரங்கில் கண்ணதாசன் விழா நடைபெறுகிறது. கலையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்கும் சிறப்புமிகு இவ்விழாவிற்கு தாங்கள் நட்புடனும் சொந்தங்களுடனும் வந்திருந்து கண்டுரசிக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். அனுமதி இலவசம். திரு M .S விஸ்வநாதன் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். கண்ணதாசனின் திரை இசை பாடல்களின் மகத்துவத்தை நிகழ்ச்சியில் திரு பாண்டி துரை தொகுத்து வழங்குவார். இத்துடன் நிகழ்ச்சி அழைபிதற் உள்ளது. அலை கடலென திரண்டு வாரீர்.
கடல் கடந்து கண்ணதாசன் புகழ் பாட வரும் மலேசிய தமிழர்களின் அன்பு நெஞ்சங்களுக்கு நேரில் நன்றி செலுத்துவோம்
கண்ணதாசன் புகழ் காலமெல்லாம் வாழ்க! நாடுகள் பல கடந்து நாளும் உயர்க!!
அன்புடன்,
கவியரசு கண்ணதாசன் தமி்ழ்ச்சங்கம், பம்மல், சென்னை 600 075.
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sat Dec 04, 2010 6:22 am    Post subject: Reply with quote

கண்ணதாசன் இசை விழா”

நாள்; 10.12.2010. வெள்ளி மாலை 6.00மணி,
இடம்: காமராஜர் அரங்கம், சென்னை.

மலேசிய தமிழர் கண்ணதாசன் அமைப்பு
நடத்தும்
காலத்தால் நிலைத்த
கண்ணதாசன் வரிகளை
எம்.எஸ்.வி மீட்டுகிறார்,
இன்னிசை ராகங்களை
சுவைக்க நீங்களும் வரலாம்!
இது...
கன்னிதமிழுக்கு விழா!
கவிமன்னனுக்கு விழா!
எண்ண எண்ண இனிக்கும்
பாடல்களின் மெல்லிசை!
எல்லோரும் வாங்க..!
அத்தனையும் புதுசுகம்!
அனுமதியோ இலவசம்!


அன்புடன்: பம்மல் கண்ணதாசன் தமிழ்ச்சங்கம், சென்னை.
திமிரி கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம்.
$
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Wed Dec 08, 2010 10:15 pm    Post subject: Reply with quote

*கவியரசு கண்ணதாசன் இலக்கிய கலைவிழா..

*மலேசியத் தமிழ் அழைக்கிறது.

10.12.2010 வெள்ளிக்கிழமை மாலை 6.00மணிக்கு

சென்னை காமராசர் அரங்கில்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் தலைமையில்
காலத்தால் அழியாத்திரையிசைக் காவியஙகள் தந்த

காவியத்தாயின் இளையமகன் கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கு
புகழ்மாலை சூட்ட தங்களை உவகையுடன் அழைக்கிறோம்.

அன்புடன் சி.பாண்டித்துரை தலைவர்
கவியரசு கண்ணதாசன் விழாக்குழு மலேசியா.


அனைவரும் வரலாம்! அனுமதி இலவசம்!


அழைப்பது..
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்) சென்னை காரைக்குடி கம்பனுக்கு
கடலலையின் இசைவிழா!
கோலாகல திருவிழா-இது
கோலாலம்பூர் பெருவிழா..!

எம்.எஸ்.வி விரல்களாலே
மீட்டுகின்ற ராகங்கள்...
எல்லாமே மயங்கவைக்கும்
ஏழிசை கீதங்கள்...!

.
கவியரசு கண்ணதாசன் முத்தமிழ் மன்றம் திமிரி, வேலூர் மாவட்டம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Dec 18, 2010 7:26 am    Post subject: Reply with quote

Dear Friends,
I am giving below the gist of the programme about 'kannadasan vizha'


மலேசியா தமிழ் இலக்கிய விழா சார்பில் கண்ணதாசன் விழா திரு பாண்டிதுரை தலைமயில் சென்னையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 150 வருடங்களக்கு முன் மலேசியாவில் குடி பெயர்ந்த தமிழ் மக்களின் தமிழ் பற்றை உணர்த்தும் விதமாக இருந்த இந்த உன்னதமான விழாவின் வெற்றி திரு பாண்டிதுரை அவர்களக்கு முழுவதும் உரித்தாகும். ஒரு தனி மனிதனாக பிறர் உதவி முழுவதும் கிடைக்காமல் கடல் கடந்து வந்து உலக பொது சொத்தான செந்தமிழின் பெருமையையும், அருமையையும் இங்கு உள்ள தமிழ் மக்களுக்கு உணர வைத்த அவரது ஆற்றல் எல்லோராலும் பாராட்டப்படவேண்டும்
கண்ணதாசன் திரை உலகிற்கு அள்ளி தந்த சாக வரம் பெற்ற பாடல்களில் ஆழ்ந்துள்ள சில நல்ல கருத்துகளை தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்யாசமான நடையில் எடுத்து உரைக்கும் விதமாக விழாவின் முக்கிய நோக்கம் இருந்தது. அந்த "தங்க சுரங்கத்தை" தோன்றி அவர் எடுத்து கொடுத்த புதையல் உண்மையான தமிழ் ரசிகர்களுக்கு ஒரு விருந்து.
இசை நிகழ்ச்சியில் மலேசியா பாடகர்கள் சிலர் மேடையில் பாடினார்கள்.
முதல் பாட்டாக"செந்தமிழ் தேன் மொழியால் " வந்தது.
அடுத்ததாக "ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயுள் முழவதும் சுப தினம்" என்ற சீர்காழ்யின் கணீர் குரலில் மலேசியா பாடகர் பாடியது எல்லோரையும் மெய் சிலிர்க்க வைத்தது. அதில் வரும் "அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுப தினம் " என்ற வரிகளில் வாழ்வில் பொது நோக்குடன் செயல் பட வேண்டிய அவசியத்தை கண்ணதாசன் எழுதியது சுட்டிக்காட்டப்பட்டது.
சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த "கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே " - கர்ணன் பட பாடலை மிகவும் அருமையாக மலேசியா பாடகி ஷர்மிலா பாடினார்.
என்றென்றும் மார்கண்டேயனாக இருக்கும் நடிகர் சிவகுமார் மேடையில் "கந்தன் கருணையில்" கண்ணதாசனின் எல்லா பாடல்களையும் விறு விறு என்று பிழை இல்லாமல் அடுக்கிய விதம் அவரது நினைவாற்றலுக்கு ஒரு சவாலாக இருந்தது. பின்னர் "அர்த்தமுள்ள இந்து மதத்தில்" இருந்து கண்ணதாசனின் எழுத்து படைப்பை மேற்கோளுடன் அதி வேகத்தில் கூறியது கண்ணதாசனின் கருத்துகளின் அவர் கொண்டுள்ள ஈடுபாடு வெளிப்பட்டது.
அடுத்த பாடல் "வா என்றது உருவம் பார் என்றது பருவம் நீ போ என்றது நாணம்" அதற்கு பாண்டி துரை பின் வருமாறு கண்ணதாசனின் சார்பில் விளக்கம் அளித்தார்.
காதலுக்கு உருவம், பருவம் முக்கியம். அதில் வரும் வரிகளான "கண் கொண்டது மயக்கம் - அதற்கு அறிவில்லை "இரு கால் கொண்டது தயக்கம்" -பெண்ணின் இலக்கணம் வெளிப்பாடு - "மனம் கொண்டது கலக்கம் - காதல் நிறைவேறுமா என்ற சந்தேகத்தினால் . காதல் வந்துவிட்டால் உறக்கம் பொய் விடும் என்பதை கண்ணதாசன் எளிமையாக கூறிய தமிழை பாராட்டினர்
அடுத்த பாடல் TM சௌந்தரராஜன் அவர்களுக்கு "ஏகலைவனாக" கருதப்படும் கோவை முரளியின் அழுத்தமான குரலில் எழுந்த "கல்யாண நாள் பார்க்க சொல்லலாம்மா" அதற்கு பாண்டி துரை கொடுத்த விளக்கம் கண்ணதாசனே வியக்கும் வண்ணமாய் இருந்தது. திருமண வாழ்கையில் முழு தனிமைக்காக தேன் நிலவு முக்கிய அம்சமாக இருக்கவேண்டிய கட்டாயத்தை "சந்திரனை தேடி சென்று குடியிருபோமா" என்ற வரிகளிலும் அந்த இன்பத்தை நுகரும் வேளையிலும் "தமிழுக்கு செய்தி சொல்லி அழைத்திருபோமா" என்று வினவிய வரிகள் கண்ணதாசன் தமிழ் மேல் கொண்டுள்ள காதலுக்கு ஒர் உதாரணம். திருமணத்திற்கு முன் காதல் வாழ்கையின் உள்ள எல்லைகளை "செல்லாத இடம் நோக்கி செல்லலாமா" என்ற வரிகளில் நாயகன் வினவுவது காதல் நாகரிகத்தின் உச்ச கட்டம். (இதற்கு நேர் எதிர்பதம் _ டாடி மம்மி வீட்டில் இல்லை தடை போட யாருமில்லை என்ற தமிழ் ? பாடல் )
பின்னர் காதல் வசம் பெற்ற பெண்ணின் நிலைமையை விளக்கும் - இராமாயணத்தில் சீதையின் நிலையை (சுயவரம் நடக்கின்ற போது) எடுத்து சொல்லும் விதம் - ராமன் மேல் கொண்ட காதலினால் - அவன் வில்லை வளைப்பான என்ற கவலை கொண்டு சோகமே உருவாகிஇருந்த சீதையின் நிலையை கண்ணதாசன் தனது பாடலில் - கவலை, சோகம், துயரம் கொண்ட சீதையின் கொதிக்கின்ற முச்சினால்எழுந்த வெப்ப காற்றினால் அவளது கழுத்தின் மணி மாலை கருகி விழ்கின்றது - இதை "மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்" அச்சம் ஒரு புறம் நாணம் ஒரு புறம் " என்று மணி முத்து மாடதிலரிந்து ஜானகி காத்திருந்தாள் என வரிகளில் உள்ள "ஜனகனின் மகளை " பாடல் மூலம் விளக்கியது இரண்டு வரிகளில் பாடி காண்பிகபட்டத
MGR -கண்ணதாசன் இடையே இருந்த பகையை நீக்கிய "விழியே கதை எழுது - கண்ணீரில் எழுதாதே" என்ற பாடலை-தேனிசை குரல் கொண்ட "அனந்து" **பாடினார் (**புலி உறுமது புலி உறுமுது பாடல் புகழ்).பின்னர் "ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே"என்ற பாட்டும் இசைக்கப்பட்டது .
திருமதி ஜெயஸ்ரீ கே பி சுந்தரம்பாள் குரலில் வழங்கிய இறைவனை வரிசை படுத்தும் பாடலாகிய "ஒன்றானவன் - உருவில் இரண்டானவன்- உருவான செந்தமிழில் மூன்றானவன் ....என்று பத்து வரிகளில் இறைவனின் பெருமையை/நிலையை விளக்கிய கண்ணதாசன் பதினொன்றாம் வரியின் முக்கியதுவத்தை பன்னிரெண்டாம் வரியில் "முன்மைக்கும் பின்மைக்கும் நடுவானவன்" என கூறியது புகழப்பட்டது .
இறைவனக்கும் தாய் உண்டு என்பதை உறுதி செய்யவதற்கு கண்ணதாசன் கொடுத்த பாடல் "இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை" இதில் வரும் வரிகளான "தாய்க்கு ஒரு பழி நேர்ந்தால் ...........தமிழிக்கு பழி நேர்ந்தால் உணகிலையோ - வரிகள் மூலம் இறைவனுக்கும் தாய் தமிழ் என்று அதற்கு ஓர் உயரிய இடத்தை கொடுத்த விதம் சுடிக்காட்டபடது. (நான் புரிந்து கொண்ட விளக்கம் சரியா ?)
இதற்கு பின் கர்ணனின் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது" - ஏழு ஸ்வரங்களுக்குள் எதன்னை பாடல் இசைக்கப்பட்டது
விழாவை பற்றி என்னுடைய கருத்து:-
விழாவிற்கு வந்திருந்த திரை பிரபலங்களை/ இசை வித்தகர்களை விட வராது இருந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அமைப்பாளர்கள் வராமல் இருந்த ரசிகர்களுக்கும், வழக்கம் போல் தாமதமாக வரும் VIP காக 6 மணியளவில் தொடங்காமல் 7 .20 மணிக்கு தொடங்கியது வந்திருந்த என்னை போன்றவர்களுக்கு வருத்தமாக இருந்தது. மேலும் இசை நிகழ்ச்சியின் நடுவே எல்லா விருந்தினர்களையும் மேடை ஏற்றி கௌரவித்து, பேச சொல்லி மேலும் பொன்னான நேரத்தை பயனில்லாமல் வைத்தது ஒரு பெரிய ஏமாற்றம்.
திருமதி வாணி ஜெயராம் பாதி நிகழ்ச்சியில் 9 .30 மணிக்கு மேல் ரசிகர்களுக்கு ஆற்றிய தத்துவ உரை விழாவின் நோக்கத்திற்கு பெரும் தடையாக இருந்தது. அவர் பாடிய திரை பாடல்களில் இரண்டு வரிகளை மட்டும் கலந்து பாடி முடிக்கவே 10 .10 மணி ஆகிவிட்டது. இதனால் இசை திறமை வாய்ந்த பாடகர்கள் கோவை முரளி, ஜெயஸ்ரீ, ஆனந்து ஆகியோர் மேடையில் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாடல்களை நேரமின்மை காரணத்தினால் முழுவதும் பாடாமல் இருந்தது ஒரு பெரிய ஆதங்கமாக இருந்தது. கண்ணதாசன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிட்ட "சந்தித்தேன்- சிந்தித்தேன் " என்ற புத்தகத்தில் வாணி ஜெயராம் பற்றி எழுதியதற்கு நன்றி கூறினார் (இந்த தகவல் தான் எனக்கு உபயோகமாக இருந்தது - இது குமுதம் வார பத்திரிகையில் ஒரு தொடராக வந்தது). நிகழ்சிக்கு முதல் நாள் ஒரு கல்யாண மண்டபத்தில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இந்த விழாவிற்காக நடைபெற்ற rehersal சென்று இருந்தால் இரட்டிப்பு மக்ழிசியாக இருந்திருக்கும். அலுவல் நிமித்தம் காரணமாக செல்ல இயலவில்லை. இதை குறை சொல்வதற்கு எழுதவில்லை. இதை ஒரு பாடமாக எல்லா விழா அமைப்பாளர்களும் இரசிகர்களுக்காக தெரிந்து கொள்ள வேண்டும். திரு M .K .மணி , A K நாகராஜன் வந்திருந்தனர் .நமது சங்கம் சார்பில் திரு பாண்டி துரைக்கு பொன்னாடை போர்த்த எனக்கு வாய்ப்பு கிடைத்தது. உடல் நிலை காரணமாக திமிரி கண்ணன் வரவில்லை. ஆனால் மற்ற ரசிகர்கள் வந்திருந்தனர் . திரு பாண்டி துரையிடம் 2007il நீங்கள் அவருக்கு நீங்கள் அனுப்பிய மெயில் நகலை கொடுத்தேன்.
இத்துடன் இதை நிறைவு செய்கிறேன்.மற்றவர்களுக்கு அனுப்பும் போது இதில் உள்ள பிழையை திருத்தி அனுப்பவும். இதை திரு பாண்டி துரைக்கு அனுபலாமா ?


MURALI
Off: KARNATAKA BANK LIMITED
9841668398

Mr. Murali of Karnataka Bank is from 'Pammal Kannadasan Ilakkiya Sangam'

Thanks to him for mailing this information.


Thanks,

N Y MURALI


Last edited by N Y MURALI on Sat Dec 18, 2010 8:16 am; edited 1 time in total
Back to top
View user's profile Send private message Send e-mail
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Dec 18, 2010 7:28 am    Post subject: Reply with quote

Dear Friends,
Below the report in the Hindu about the programme


Memories from Malaysia
MALATHI RANGARAJAN
Kaviarasu Kannadasan Ilakkiya Kalai Vizha organised in Chennai by the Malaysian Tamils, made quite an impact.


REMEMBERING A LEGEND: (From left) Kamakotiyan, Pandithurai, MSV, Sivakumar.
With every passing year the writer-lyricist-poet nonpareil reiterates the fact that Death can never lay its icy hands on him. It's been decades since Kannadasan passed away but the confidence with which he wrote that he's eternal (‘Endha Nilayilum Enakku Maranamillai') has proved true, because every event organised in his honour continues to draw crowds.
A group of ardent Kannadasan lovers in Malaysia has been celebrating the poet and singing paeans in his name regularly. Recently, the team headed by C. Pandithurai came down all the way to Chennai, to hold a function for him here and fete veterans of cinema. And can any forum that celebrates Kannadasan be complete without M. S. Viswanathan? The ‘mellisai mannar' was very much present as the chief guest of the evening at the Kamaraj Arangam, Chennai.
Appropriately titled Kaviarasu Kannadasan Ilakkiya Kalai Vizha, the programme highlighted the lyrical prowess and craftsmanship of the poet -- film melodies were the prime focus. It wasn't a houseful show but those present enjoyed every moment of it. Pandithurai dwelt on the different ways Kannadasan depicted emotions of love, joy, sadness and kindness -- the emceeing, which was more on the lines of a dissertation, showed his deep interest in the lyricist's uniqueness of thought and excellent choice of words. In his enthusiasm to have the entire audience soaked in the beauty of the lyrics and the tunes they were set to, distractions from the audience's side irked him. He couldn't help harping on impeccable crowd behaviour and stage decorum he is used to, back home in Malaysia.
Everlasting compositions of the MSV-Kannadasan combo and also songs that the great lyricist created with other music directors were showcased appealingly. And conducting the orchestra was T. L. Thyagarajan (son of Tiruchi Loganathan). Well-known light music singers of the stage including Ananthu, Kovai Murali and Jayashri presented many a Kannadasan gem.


Vani Jairam enthrals the audience.
“Those who haven't read Kannadasan's literary treatise, ‘Arthamulla Indhu Madham,' kindly make a beeline for it,” exhorted actor Sivakumar in characteristic style and fluently quoted offhand a few salient lines from the book. With Pandithurai vociferously announcing that in their country “five minutes means only five minutes,” the speakers had little choice but to wind up in a jiffy. Brevity was the watchword that day and every special invitee restricted his speech to a few minutes.
Feting veterans
The Malaysia Tamils honoured yesteryear actor M.N.Rajam and her husband and playback singer A.L. Raghavan with Awards for Lifetime Achievement. Among the other eminent personalities who adorned the stage were T. M. Soundararajan, P. B. Srinivos, L. R. Easwari, S. P. Muthuraman, Vani Jairam, Kavignar Kamakotiyaan (who welcomed the gathering) and Malaysia Vasudevan.
Praising Pandithurai for organising such functions for the poet, eminent singer Vani Jairam touched a sentimental chord as she recalled her association with Kannadasan and the affection he had for her. And in typical style, Vani mesmerised the audience with her ever-popular hits.
“Sirkazhi Govindarajan still lives in Malaysia in the voice of our very own Raja Raja Chozhan,” announced Pandithurai with pride. And true to his words, when the Malaysian singer replicated the voice of the singer in ‘Aandukku Aandu … Suba Dinam,' the audience was awe-struck. Sharmila Ashok, another singer from Malaysia did a fine job too. When she presented Vani's award winning number ‘Ezhu Swarangalukkul …' the veteran went up the stage and congratulated her.
The evening proved that achievements can never fade into oblivion. Nor can creators such as Kannadasan!
Printer friendly page
Send this article to Friends by E-Mail


Thanks

N Y MURALI
________________________________________
Back to top
View user's profile Send private message Send e-mail
VaidyMSV & Sriram Lax



Joined: 15 Apr 2007
Posts: 852
Location: chennai

PostPosted: Sun Dec 19, 2010 9:41 am    Post subject: Reply with quote

thank you murali ,for the report .
after reading the report , those who missed the programme ,really didnot miss much

wregds
vk
_________________
vijayakrishnan
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> "How to Register?", News, Announcements, Photo Gallery, Video Gallery All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group