"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Kanaak kaanum kangal mella - Agni Saatchi

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Feb 05, 2010 5:36 am    Post subject: Lyrics - Kanaak kaanum kangal mella - Agni Saatchi Reply with quote

படம்: அக்னி சாட்சி
பாடியவர்கள்: எஸ்.பீ.பீ., சரிதா (கவிதை)
பாடலாசிரியர்: வாலி
இசை: மெல்லிசை மன்னர்

கனாக்காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே
உலாப்போகும் நேரம் கண்ணே

குமரி உருவம் குழந்தை உள்ளம்
ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
தலைவன் மடியில் மகளின் வடிவில்
தூங்கும் சேயோ
நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
விளக்கு ஏற்றி வைத்தால் கூட
நிழல் போல தோன்றும் நிஜமே
நிழல் போல தோன்றும் நிஜமே

சரிதா:
நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
உன் நிழலையோ பூஜிக்கிறேன்
அதனால்தான் உன் நிழல் விழுந்த நிலத்தின்
மண்ணை கூட என் நெற்றியில்
நீறு போல், திரு நீறு போல் இட்டுக் கொள்கிறேன்
(எஸ்.பீ.பீ: கனாக் காணும்)

புதிய கவிதை புனையும் குயிலே
நெஞ்சில் உண்டான காயம் என்ன?
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
பாவம் என்ன?
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
வருங்காலம் இன்பம் என்று
நிகழ் காலம் கூறும் கண்ணே!
நிகழ் காலம் கூறும் கண்ணே!
(கனாக் காணும்)

1982 -ல் வெளிவந்த இந்த படத்தை இயக்கியவர் திரு. கே. பாலசந்தர். இந்த படத்தின் கதாநாயகன், கதாநாயகியாக சிவக்குமார் மற்றும் சரிதா நடித்துள்ளனர். படத்தில் சிவக்குமார் பொறுமையும், அன்பும் நிறைந்த கணவனாகவும், சரிதா சிறு சிறு விஷயங்களைக் கூட இயல்பாக எடுத்துக் கொள்ளாமல், மிகவும் உணர்ச்சி வசப்படும் ஒரு பெண்ணாக, மிகுந்த மன அழுத்தம் கொண்டவராகவும் நடித்துள்ளார்கள்.

இது ஒரு அழகான, இனிமையான தாலாட்டு பாட்டு. படத்தில் சிவக்குமார், சரிதா அவர்களை தூங்க வைக்க பாடுவதாக வரும் பாடல் இது. கணவன், மனைவியை தூங்க வைக்க பாடும் தாலாட்டு என்றால் அது காதல் தாலாட்டாகத்தான் இருக்கும். ஆனால் இந்த கணவன் மன அழுத்தம் கொண்ட தன் மனைவியை தூங்க வைக்க தாலாட்டு பாடுவதாக காட்சி இருப்பதால், ஒரு தகப்பன் மகளுக்கு பாடுவது போல, தன் மனைவியை உறங்க வைக்க தாலாட்டு பாடுகிறான்.

இந்த பாடலின் வரிகள் அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ளவை. கவிஞரின் வார்த்தை தேர்வு, பாடல் வரிகளில் சில இடங்களில் மிகவும் அற்புதமாக இருக்கும்.
பொதுவாக பலர், குழந்தைகளை தூங்கவைக்க தாலாட்டு பாடும்போது ஏதாவது ஒரு கதையையோ அல்லது அந்த குழந்தையின் விளையாட்டுத்தனம், குணம், பெருமை, சிறப்பு இவைகளை பற்றி பாடியோ உறங்க வைப்பார்கள். இந்த பாடலின் சரணங்கள் இரண்டுமே அந்த கணவன், தன் மனைவியை பற்றிய தன் கணிப்பையே, பாடல் வரிகளாக கொண்டு பாடுவது போல கவிஞர் எழுதி உள்ளார்.
பாடலின் முதல் சரணத்தில் 'குமரி உருவம், குழந்தை உள்ளம்' என்று அவள் மன நிலையை விளக்க ஆரம்பித்து, பின் தனக்கே இன்னும் புரியாத புதிராக இருக்கும் அவள் குணத்தை அழகாக 'நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி, விடைதான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி' என்றும், இந்த இரண்டு வரிகளுக்கு இடையில் அவளை கொஞ்சலுடன் 'தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ' என்றும் எவ்வளவு அற்புதமாக எழுதி இருக்கிறார்.

படத்தில் அந்த நாயகி பாரதியின் அபிமானி, மேலும் அழகாக புதுக் கவிதைகள் எழுதுபவள். அதை மனதில் வைத்துக் கொண்டு, இந்த பாடலின் இடையில் அவள் தன் அன்பான கணவனின் மேல் தனக்கிருக்கும் காதலை புதுக் கவிதையாக எழுதி, அதை அவளே சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இதற்கு கவிஞர் எழுதி இருக்கும் வரிகள் மிகவும் அழகு என்றால், படத்தில் அந்த கவிதையை, அந்த மனைவியாக வரும் சரிதாவே சொல்வதாக மெல்லிசை மன்னர், பாடலின் நடுவில் அதை அழகாக புகுத்தி இருப்பது இன்னும் அழகு. இந்த கவிதையை, வெறும் உரைநடை படிப்பது போலவும் இல்லாமல், பாடலாக ராகத்துடன் பாடுவது போலவும் இல்லாமல், அன்பான, ஆழமான காதலுடன், மனதில் இருந்து உணர்ச்சி ததும்ப சொல்வது போல் மெட்டமைத்து, அதை அற்புதமாக சரிதாவின் குரலில், நம் மெல்லிசை மன்னர் அழகாக வெளிக்கொண்டு வந்திருப்பது இந்த பாடலின் மிகவும் சிறப்பான அம்சமாகும்.

பாடலின் இரண்டாவது சரணம், இவ்வளவு அழகாக கவிதை எழுதும் தன் மனைவியை இந்த தாலாட்டில் பாராட்டுவது போல் 'புதிய கவிதை புனையும் குயிலே' என்றும், தனக்கும் புலப்படாத, அவளுக்கும் சொல்ல இயலாத அவள் மனக் காயங்களை தான் தெரிந்து கொள்ள விரும்புவதை 'நெஞ்சில் உண்டான காயம் என்ன?' என்றும், அடுத்து அவளுக்காக தான் படும் வேதனையை தாலாட்டின் வரிகளாக 'நினைவு அலைகள், நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன?' என்றும் பின் எல்லாவற்றுக்கும் ஒரு விடிவும், முடிவும் உண்டு என்ற உண்மையையே வரிகளாக 'கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்' என்றும், தன் அன்பான காதல் மனைவிக்காக தான் அந்த நாள் வரை காத்திருக்கப் போவதாக, அவளுக்கு நம்பிக்கையுடன் 'விடியும் நாள் பாத்து இருப்பேனே நானும்' என்றும், இறுதியில் 'வருங்காலம் இன்பம் என்று, நிகழ் காலம் கூறும் கண்ணே' அதாவது உன்னுடைய நிகழ் காலமாகிய நான், நம் வருங்காலம் இன்பமாக இருக்குமென்று உறுதி அளிக்கிறேன், நீ தூங்கு கண்ணே என்று பாடி, எவ்வளவு அழகாக தாலாட்டுகிறான்.

எஸ்.பீ.பீ. அவர்களுக்கு இந்த பாடல் ஒரு வரப் பிரசாதம். மெல்லிசை மன்னரின் அற்புதமான மெட்டுக்கு ஏற்ப அற்புதமாக பாடி இருக்கிறார். அந்த இரவில் இருக்கும் அமைதி, தன் மனைவியின் மனதில் இல்லையே என்று ஆதங்கப்பட்டு, ஒரு வேதனையுடன் பாடும் அந்த அன்பு கணவனின் சோகத்தை, எஸ்.பீ.பீ. தன் குரலில் கொண்டு வந்திருப்பார்.

மெல்லிசை மன்னரின் இசையை பற்றி என்னவென்று எழுதுவது! பாடலின் தொடக்கத்தில் இரவின் இதமாக தொடங்கும் இவரின் இசை, அந்த பெண்ணின் மன வேதனையை கண்களுக்கு உணர்த்தும் காட்சியில், அருமையான வயலினில் தொடங்கி, அற்புதமான இசையால், நம் செவிகளின் மூலம், நம் மனதை உணர வைக்கிறார். அப்படி ஒரு பின்னணி இசை இந்த பாடலுக்கு! கண்களை மூடிய வண்ணம் இந்த பாடலை கேட்டால், நம் மனமும் இரவில் மெதுவாக நடை போட துவங்கி, பின் வேகமாக சுழன்று ஆடி, களைத்து, பின் அமைதி கண்டு, உறங்க தொடங்கும்.
Back to top
View user's profile Send private message
madhuraman



Joined: 11 Jun 2007
Posts: 1226
Location: navimumbai

PostPosted: Fri Feb 05, 2010 6:49 am    Post subject: lyrics Reply with quote

Dear Meenakshi mam,

Your posting on 'kanA kANum kaNgaL mella' reveals a high profile writing style besides pinpointing the finer points of this number. Your write-up matches the merits of the piece. Easily it is a model writing for aspirants to understand the facets which deserve attention for a song analysis. A poor analyst of songs myself, now I am able to develop some concept on song analysis [Please donot worry, I wouldn't venture] My hearty appreciation.
Warm regards Prof.K.Raman Madurai
_________________
Prof. K. Raman
Mumbai
Back to top
View user's profile Send private message Send e-mail
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Feb 05, 2010 5:51 pm    Post subject: Reply with quote

Thank you very much for your appreciation Professor. உங்களது பாராட்டு என்னை மேலும் நன்றாக எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகப் படுத்துகிறது.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Mon Feb 08, 2010 4:53 pm    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாட்சி,

மீண்டும் உங்கள் பாணியில் ஒரு அருமையான பாடலைப் பற்றி அழகாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். பேராசிரியர் ராமன் அவர்கள் சுட்டிக் காட்டியிருப்பது போல், எதையுமே விட்டு வைக்காமல் முழுமையாக ஆய்வு செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

எண்பதுகளில், ரசிகர்கள், பத்திரிகைகள், விமர்சகர்கள் என்று அனைவர் கவனமும் புதிய இசை அமைப்பாளர்கள், மற்றும் கவிஞர்கள் பக்கம் திரும்பியிருந்த போது, 'என்றும் எம் எஸ் வி, என்றும் கண்ணதாசன்' என்று பறை சாற்றிய பாடல்களில் இதுவும் ஒன்று.

கதையின் மையக்கருத்தை உள்ளடக்கிய அற்புதமான பாடல் வரிகள், இது போல் இல்லாமல் வேறு எப்படியும் இருக்க முடியாது என்று தோன்ற வைக்கும் பொருத்தமான, அற்புதமான இசை, சிறப்பான பாடல் காட்சி, சிறப்பான நடிப்பு எல்லாம் ஒருங்கே சேர்ந்த பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. (இதே சிறப்புகளைக் கொண்ட மற்றொரு பாடல் 'கடவுள் அமைத்து வைத்த மேடை' என்பது என் கருத்து. இந்த இரு பாடல்களையும் எத்தனை முறை கேட்டாலும், சிறிதளவாவது உணர்ச்சி வசப்படாமல் என்னால் இருக்க முடியாது.)

சமீபத்தில், வசந்த் தொலைக் காட்ச்சியில், எம் எஸ் வி ப்ளாஷ்பாக்' நிகழ்ச்சியில், எம் எஸ் வி முன்னிலையில் இப்பாடலை எஸ் பி பி பாட, நடிகர் சிவகுமார் கண்களை மூடி இப்பாட்டை ரசித்துக் கொண்டிருந்தார்.

கவிஞரின் வரிகளைப் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. பிரமிப்பூட்டும் வரிகள்.கே பீ தனது வசனத்தாலும் காட்சி அமைப்புகளாலும் சொல்ல முடியாததை கவிஞரும், மெல்லிசை மன்னரும் பாடல் மூலம் சொல்லி விட்டார்கள்.

கவிஞரின் பல பாடல்களில் நம்பிக்கையூட்டும் வரிகள் உண்டு.

'காலம் ஒரு நாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும்.'

'காலம் ஒரு நாள் கை கொடுக்கும். அதுவரை பொறுத்து விடு.'

'எங்கே போய்விடும் காலம்? அது நம்மையும் வாழ வைக்கும்.'

'நாளைப்பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு.'

'உனக்கென ஒருவன் உலகத்தில் இருப்பான்.
ஒரு நாள் வருவான் உனைத் தேடி.'

'காலமகள் கண் திறப்பாள் கன்னையா' (நான் மேலே குறிப்பிட்ட அதே நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மனோபாலா, தான் தற்கொலை செய்து கொள்ள்ம் முடிவில் இருந்தபோது இந்தப் பாடலைக் கேட்டு மனம் மாறியதாகக் குறிப்பிட்டார்.)

அதேபோல், இந்தப் பாடலில், 'கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்' என்ற எளிமையான, அழுத்தமான வரிகளைக் கொடுத்திருக்கிறார் கவிஞர்.

உங்கள் சிறப்பான பணி மேலும் தொடர என் நல்வாழ்த்துக்கள்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Jeev



Joined: 09 Apr 2007
Posts: 130

PostPosted: Tue Feb 09, 2010 7:39 am    Post subject: Agini Saatchi Reply with quote

MM received the best music director award from Tamil Nadu government for this film.
Back to top
View user's profile Send private message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Feb 10, 2010 8:50 am    Post subject: Reply with quote

மிக்க நன்றி ரங்கஸ்வாமி அவர்களே. உங்களை போன்றவர்களது ஊக்கம்தான் நான் இந்த அளவாவது எழுதுவது.
கவிஞரின், நம்பிக்கை ஊட்டும் வரிகளை எல்லாம் அழகாக வரிசை படுத்தி இருக்கிறீர்கள். இதோ, என் நினைவில் வந்த வரிகள்,
'வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்' இந்த பாடலின் முதல் சரணம் முழுவதும் எவ்வளவு நம்பிக்கை தரும் வரிகள்!
இதை போல பாடல் வரிகளை ஆய்வு செய்ய தொடங்கினால், அது சுவாரசியமாக போய்கொண்டே இருக்கும்.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Wed Dec 15, 2010 8:45 pm    Post subject: Reply with quote

Dear Mr. Sivakumar,

I was under the impression that this song was written by Vaali. But when this song was played in Endrum MSV, MSV said that this was written by Kavignar. MSV may not remember correctly. But becauser Aahavan did not correct him, I thought it was written by Kavignar. This is one of those songs that either of the great lyricists could have penned. Though this song is listed at several places in the web, I didn't find the lyricist's name anywhere. At several places, there is a blank against the lyricist's name.
in your information. Though I am an admirer of Kavignar, I am also particular that credit should go to the right person. Thank you for correcting my information.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Sai Saravanan



Joined: 10 Jun 2008
Posts: 630
Location: Hyderabad

PostPosted: Fri Dec 17, 2010 11:35 pm    Post subject: Reply with quote

Dear Madam,
A beautiful, clear and lucid writeup. Rightly deserves praise for excellently explaining the situation and planting the lines appropriately at those junctures, and rapidly taking us to a climax-like ending.

The other interesting 'mistake' committed by many of us while reading this has been the mix up of the lyricists! Until Mr.Sivakumar pointed out, I assumed the image of Kannadaasan. Then, suddenly, Vaali came in! Both the geniuses deserve credit.

A small question to our friends: Was this film the last by our MM for KB?

Sai Saravanan
Back to top
View user's profile Send private message
N Y MURALI



Joined: 16 Nov 2008
Posts: 920
Location: CHENNAI

PostPosted: Sat Dec 18, 2010 8:01 am    Post subject: Reply with quote

Dear Mr. SS,
'Poi Kaal Kudhirai' is the last movie of MM & KB together. This came in the year 1983. After this there was a gradual decline in the number of movies by MM.

I have a graph about MSV's in which I plotter the year in the X axis and the no of movies per year in the Y axis. many people would expect the graph would in peak during 60s' but he peaked in the year 1978-79 about 28 movies when so called next generation music directors have established themselves and he held fort until 1984-85 and it came to a few in 1988-89.

This was the period when MM was struggling in the field for recognition for the early as well as the contemporary works in comparison with the other MDs (who later said that he used the spit of MSV in their composition) made me feel that the recognition and praise is not a genuine reflection of the knowledge and talent rather it is managed.

N Y MURALI
Back to top
View user's profile Send private message Send e-mail
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group