"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Adhisaya ulagam ragasiya idhayam - Gauravam

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Wed Jun 23, 2010 7:02 am    Post subject: Lyrics - Adhisaya ulagam ragasiya idhayam - Gauravam Reply with quote

படம்: கௌரவம்
பாடியவர்: எல்.ஆர்.ஈஸ்வரி
பாடலாசிரியர்: கண்ணதாசன்
இசை: மெல்லிசை மன்னர்.


அதிசய உலகம், ரகசிய இதயம்
அழகிய உருவம், இளகிய பருவம்

பெண்ணுலகில் நான் உன்னை அழைப்பேன்
பொன்னுலகம் உன் கண்ணில் தருவேன்
(அதிசய)


சந்திக்கலாம் மனதால் நினைவால் உறவால்
முந்திக்கொண்டால் தரலாம் வரலாம் பெறலாம்
பளிங்கு கிண்ணம் ஒன்று மதுவை அள்ளிக்கொண்டால்
பருகிடலாம் பிறகு என்ன தரிகிடதோம்.
(பெண்ணுலகில்)


தித்திப்பதே இதுதான் அதுதான் தெரியும்
கட்டிக்கொண்டால் உலகம் முழுதும் புரியும்
பழக்கம் இல்லையென்று விளக்கம் சொல்லசொன்னால்
ஒருதரமோ, இருதரமோ தரிகிடதோம்.
(பெண்ணுலகில்)


1973- ல் வியட்நாம் வீடு சுந்தரம் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் இது. எப்பொழுதும் எழுதுவது போல், இந்த படத்தில் அனைத்து பாடல்களும் மெகா ஹிட். :D

எல்.ஆர். ஈஸ்வரி என்னை மிகவும் கவர்ந்த பாடகர். இவர் குரல் மிகவும் ஸ்பெஷல், அதற்கு ஒரு தனி வசீகரம் உண்டு. இவர் பாடி உள்ள எல்லா பாடல்களையுமே நான் மிகவும் ரசித்து கேட்பேன் என்றாலும், இந்த பாடலுக்குதான் என் மனதில் முதல் இடம். கேட்கும் ஒவ்வொரு முறையும் என்னை ரசிக்க வைக்கும், மனதை குதூகலிக்க வைக்கும்.

நம் மெல்லிசை மன்னர் அவர்கள் இவருக்கு அளித்துள்ள பல பாடல்கள் மிகவும் வித்தியாசமானது, ஜனரஞ்சகமானது. அவருடைய இசையில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய அநேகமாக எல்லா பாடல்களுமே அருமையிலும் அருமைதான்.

படத்தில் இந்த பாடல், மேஜர் அவர்கள், தன் மனைவியை கொலை செய்தும், சட்டத்தின் மூலம் தண்டனை பெறாமல் தப்பிக்க உதவிய வக்கீல் சிவாஜி அவர்களை, ஒரு விருந்துக்கு அழைப்பார். அந்த விருந்தில் அவர், தான் இரண்டாவதாக மணக்க போகும் ஒரு காபரே நடனக்காரியை அவருக்கு அறிமுகம் செய்து வைப்பார். அந்த விருந்தில். அந்த நடனக்காரி பாடுவதாக வரும் பாடல்தான் இது.

இது போன்ற விருந்தில் பாடும் பாடல்களுக்கு இசை அமைப்பது என்றாலே நம் மெல்லிசை மன்னருக்கு ஒரு தனி உற்சாகம் வந்து விடும் போல் இருக்கிறது. என்ன ஒரு பின்னணி இசை! எவ்வளவு அருமையான மெட்டு! கடும் கோடையில் ஐஸ் கிரீம் சாப்பிடுவதை போல், இந்த பாடலை கேட்டால் மனம் ஜில்லென்று ஆகிவிடும்.

பாடலின் துவக்க இசையே அடி தூள்தான். ஒரு காபரே நடன பின்னணி இசையில், கெட்டி மேளத்தை கொண்டு வரும் எண்ணம் அவருக்கு எப்படி தோன்றி இருக்கும், என்று எண்ணி எண்ணி நான் பலமுறை வியந்திருக்கிறேன். இந்த வரியை எழுதும் இந்த நேரமும் நான் வியப்பில் இருக்கிறேன். எனக்கு தெரிந்த வாத்தியங்கள் சில என்றால், தெரியாமல் இந்த பாடலை கலக்கியிருக்கும் வாத்தியங்கள் பல. பாடலின் துவக்கத்தில் இசையில் உள்ள அந்த விறுவிறுப்பு, பாடலின் இறுதிவரை சிறிது கூட குறையாமல், நம் செவியில் ஒரு மின்னல் வேக இசை பயணம் செய்கிறது. இந்த பாடலின் துவக்கத்தில் வரும் இசையும், முடிவில் வரும் இசையும் ஒரே மாதிரி இருக்கும்.

இந்த பாடலில் என்னை கவர்ந்த இன்னொரு விஷயம், இந்த பாடலில் 'அதிசய உலகம்' என்ற வரிகள் பல்லவி. 'பெண்ணுலகில் நான்' என்ற வரிகள் அனுபல்லவி. பொதுவாக எல்லா பாடல்களிலும், சரணம் முடிந்தவுடன் பல்லவி வரும், சில பாடல்களில் அனுபல்லவி வரும். ஆனால் இந்த பாடலில் இரண்டு சரணங்களும் முடியும்போது, அனுபல்லவி முதலில் வந்து, அதை தொடர்ந்து பல்லவி வருகிறது. இது மிகவும் வித்தியாசமாகவும், இந்த பாடலுக்கு மேலும் இனிமை சேர்பதாகவும் இருக்கிறது. நம் இசை கடவுள், நமக்காக இசையில் என்னென்னவோ மாயங்கள் செய்து நம் மனதை எப்படி எல்லாம் கொள்ளை கொண்டு விட்டார். இதை சாதாரண கொள்ளை என்று சொல்வதை விட, நம் மனம் முழுவதையும் சூரையாடி விட்டார் என்று சொல்வதுதான் பொருந்தும்.

பாடல் வரிகள் கவிஞரின் கைவண்ணத்தில் ஜொலிக்கிறது. தன்னை காதலிக்க, காதலனை அழைப்பதில்தான் அந்த பெண்ணின் மனதில் எவ்வளவு ஆசை, கிண்டல், மயக்கம். இந்த எல்லா உணர்வும் கண்ணதாசனின் வரிகளில் மனதை அள்ளுகிறது.

காதல் என்றாலே ரகசியமானதுதானே. அதற்கு அழகாக 'ரகசிய இதயம்' என்று ரசிக்கும்படி எழுதி இருக்கிறார்.
'பழக்கம் இல்லை என்று விளக்கம் சொல்ல சொன்னால், ஒரு தரமோ, இரு தரமோ.......' இந்த வரிகளில்தான் எத்தனை கிண்டல், மயக்கம்.

இந்த பாடலை எல்.ஆர். ஈஸ்வரியை தவிர வேறு யாராலையுமே, இவ்வளவு அற்புதமாக பாடி இருக்கவே முடியாது. பாடல் வரிகளுக்கு கண்ணதாசன் உயிர் கொடுத்திருக்கிறார் என்றால், எல்.ஆர். ஈஸ்வரி அதை அத்தனை உணச்சி பூர்வமாக பாடி நம் மனங்களில் உலவ விட்டிருக்கிறார். இந்த பாடலில் அவர் குரலில்தான் எத்தனை போதை, மயக்கம், கிண்டல், கெஞ்சல், கொஞ்சல் எல்லாம். இந்த பாடலின் இரண்டாவது சரணத்தின் முடிவில் வரும் 'ஒரு தரமோ, இரு தரமோ தரிகிடதோம்' என்ற வரிகளில் அவர் குரலை நன்றாக ஒரு தடவை கேட்டு பாருங்கள், அது அப்படி ஒரு கொஞ்சல் கொஞ்சும். இதற்காகவே இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.

இந்த பாடல் காட்சியில், காபரே நடனக்காரி ஆடுவதை விட, சிவாஜி அவர்கள் உட்கார்ந்த இடத்தில் இருந்தே பாடலின் இசைக்கு ஏற்றவாரு ஆடுவதை மிகவும் ரசிக்க முடியும்.
Back to top
View user's profile Send private message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Jun 23, 2010 5:25 pm    Post subject: Reply with quote

மிகவும் அருமையான பாடலைத் தெரிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள். மெல்லிசை மன்னரைத் தவிர இப்படிப்பட்ட புதுமைகளை வேறு யாராலும் செய்ய முடியாது, அதுவும் அந்தக் காலகட்டத்தில் அவர் மேற்கொண்ட புதிய யுத்திகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் பல நூறு ஆண்டுகள் ஆகும். அதுவும் அந்த ஆட்டக் காரியின் ஆட்டத்தின் தாளக்கட்டினை யூகித்து அதற்கு ஈடு கொடுக்க தவிலைப் பயன் படுத்திய அவரது சாதுர்யம் மிகவும் அற்புதம். அதிசய உலகம், ஆம். மெல்லிசை மன்னரின் இசைராஜ்ஜியம் ஒரு தனி உலகம், அதிசய உலகம்.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group