"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

one word - whole Universe

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans!
View previous topic :: View next topic  
Author Message
ragasuda



Joined: 17 May 2007
Posts: 1532

PostPosted: Wed Dec 30, 2009 8:33 pm    Post subject: one word - whole Universe Reply with quote

"
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு"

- நாடோடி படத்தில் கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் இந்த வரிகளை எதை நினைத்து எழுதினாரோ நமக்குத் தெரியாது (படத்திற்காக என்பது வேறு விஷயம்). நம்மைப் பொறுத்தவரை அவர் அதற்குள் உள்ளர்த்தம் வைத்துத் தான் எழுதியிருக்கிறார் எனத் தோன்றுகிறது. அவர் எழுதாமல் விட்ட இன்னொரு வரியை நாம் சேர்த்துக் கொள்வோம் -
வார்த்தை ஒன்று உணர்வுகள் வேறு -
ஆம். இந்த வரி மெல்லிசை மன்னரை வைத்து கவியரசர் எழுதியிருப்பார் என நாம் நம்பலாம்.

இதைக் கூறக் காரணம் - புதிய தேடலை மெல்லிசை மன்னரின் கற்பனைக் கடலில் நாம் காண்போம் என்பதற்காகத் தான்.

ஒரு வார்த்தை - அதை எப்படியெல்லாம் மெல்லிசை மன்னர் பிரயோகப் படுத்தி உயிரூட்டியுள்ளார் என்பதை அலசுவதே இப்பகுதியின் நோக்கம். இதில் நாம் அனைவரும் பங்கு கொண்டு அவரவர் தேடலை வெளிக் கொணர வேண்டும் என்பதே என் ஆவல். இப்பகுதி எந்த அளவிற்கு வரவேற்புப் பெறுகிறது என்பது அந்தந்த வார்த்தைகளைப் பொறுத்து இருக்கிறது, அந்தந்த தேடலைப் பொறுத்து இருக்கிறது.

இனி நாம் நம்முடைய முதல் வார்த்தையைத் தொடங்கலாம். தொடக்கம் என்றாலே தாய்தான். அந்தத் தாயைக் குழந்தை அழைப்பது அம்மா என்று தான். அதே அம்மா என்ற சொல், வழக்கில் இரு முறை கூறப்படும் போது பல்வேறு வகையான உணர்வுகளுக்கு உட்படுத்தப் படுகிறது. அந்த சொல் - அம்மம்மா. அந்த அம்மம்மா என்ற சொல்லே இந்தப் பகுதிக்கு முதல் சொல்லாக அமைகிறது.

அம்ம்மா -
அம்ம்மா எனத் தொடங்கும் பாடல்களைப் பார்ப்போம் -
உடனே நினைவுக்கு வரும் பாடல்கள்
1. அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும்.
2. அம்மம்மா கேளடி தோழி
3. அம்மம்மா தம்பி என்று நம்பி

இந்தப் பட்டியலைப் படிக்கும் போதே உங்களுக்குள் வெவ்வேறு உணர்வுகள் ஏற்படுகின்றன அல்லவா. அதுவே மெல்லிசை மன்னரின் வெற்றிக்கு சான்று.

முதல் பாடல்
அம்மம்மா காற்று வந்து - வெண்ணிற ஆடை

மன நோய் பீடித்த பெண் வெளியுலகிற்கு, இயற்கைச் சூழலுக்கு அழைத்து வரப் படும் போது அவள் உள்ளத்திற்குள் உள்ள உணர்வுகளைப் பாடலின் பல்லவியிலேயே கொண்டு வந்துள்ளார் கவிஞர் -
அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டுப் பாடும் ..
அந்ந அம்மம்மா என்ற சொல் பாடலின் தொடக்கத்தில் புத்தம் புதிய உணர்வை வெளிப்படுத்தும் வகையில் மெட்டமைக்கப்பட்டு பாடகியால் பாடப் பெறுகிறது - பி.சுசீலாவின் குரலை இந்த் இடத்தில் கேளுங்கள். சற்றுப் பொறுத்து சரணம் முடியும் தருணத்தில் சரணத்தை முடிப்பது போல் பல்லவியை அமைத்திருப்பார் .. அதாவது அம்மம்மா.... வல்லிய தொனியில் இழுத்து மீண்டும் அம்மம்மா என்று மெல்லிய தொனியில் இசைத்து பல்லவியைத் தொடர்வார். இதுவரையில் இப்படி ஒர் முயற்சியை யாரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்க்து. அந்த அம்மம்மா பாடல் தொடங்கும் போது வரும் பின்னணி இசைக்கருவிகள் அந்த உணர்வுக்கு பீடிகை போட்டு நம்மை தயார் படுத்திய பின் இந்த வார்த்தை வரும் போது நாம் நம்மை மறந்து அந்த அம்மம்மாவுக்குள் ஒன்றி விடுகிறோம்.

இந்தப் பாடலில் இப்படி என்றால் அடுத்த பாடலைப் பார்ப்போம்.

அம்மம்மா கேளடி தோழி - கருப்புப் பணம்

அம்மம்மா கேளடி தோழி சொன்னாளே ஆயிரம் சேதி

இந்தப் பாடலில் உள்ள உணர்வுகள் முற்றிலும் வித்தியாசமானவை. அதே அம்மம்மா என்ற பல்லவி தான். ஆனால் உணர்வு வேறு, குரல் வேறு - எல்.ஆர். ஈஸ்வரி - உணர்வுக்கேற்ற குரல் தேடல் - இதற்கும் மெல்லிசை மன்னரை விட்டால் வேறு யாரும் இல்லை. இந்தப் பாடலிலும் சரணம் அம்மம்மாவில் முடிந்து அம்மம்மாவிலேயே ஆரம்பிக்கும். முடியும் அம்மம்மாவில் குரல் கம்மி தாபத்தை அதிகமாக்கி, பின்னர் அந்த தாபத்தை குறைத்து மெல்லியதாக அம்மம்மா என்று பல்லவியைத் தொடங்கும். இந்த இரண்டு்க்கும் இணைப்பாக வசன நடையில் வரிகள் கமலா அவர்க்ளின் குரலில் ஒலிக்கும்....
பின் மீண்டும் பல்லவி ... சரணம்
முடியும் போது அம்மம்மா என்று பாடலே முடிவடையும்.

அடுத்த பாடல் அம்மம்மா தம்பி என்று நம்பி - ராஜபார்ட் ரங்கதுரை

இந்தப் பாடல் படத்தில் இருமுறை வரும். இளம் வயதில் பிழைப்புக்காகப் பாடுவது, பின்னர் இறுக்கமான சூழ்நிலையில் பாடுவது...

முதல் முறை பாடப்ப்டும் சூழ்நிலை ... வறுமையை எதிர்கொள்ள வேண்டி ரயிலில் பாடிப் பிழைக்கும் சிறுவன் ... அந்த நிலையிலும் தேச பக்தியைக் கடைப்பிடிக்கிறான் .. வந்தே மாதரம் என்னும் வார்த்தையினால் தேசத்தை ஒன்றாக்கி வைத்தவராம் உத்தமராம் காந்தயண்ணல் அவரை மறவாதீர் அன்புடைய பெரியோரே என்ற தொகையறாவில் ஆரம்பித்து அம்மம்மா .... என்று துவங்கும் பல்லவி.

இந்த இடத்தில் வறுமையிலும் தேச பக்தியைப் பார்க்கும் உணர்வைப் பல்லவியிலேயே கொண்டு வந்து விடுகிறார்கள் கவியரசரும் மெல்லிசை மன்னரும் பாடிய புஷ்பலதாவும். அந்த சிறுவனை ஒரு நாடக நடிகர் அழைத்து சென்று வளர்த்து பெரியவனாக்குகிறார். அந்தச் சிறுவன் மிகப் பெரிய நடிகராக பரிமளித்து தன்னுடைய உடன் பிறப்புகளுக்காக உழைத்து தம்பியை வளர்த்து படிக்க வைத்து முன்னேற்றுகிறான். அந்தத் தம்பியோ நன்றியை மறந்து இவனை எடுத்தெறிந்து பேசுகிறான். அவனை மதிக்காமல் காதல் திருமணம் செய்கிறான். அவனுடைய மாமனார் ரங்கதுரையின் ரசிகர். தன் அண்ணன் நாடக நடிகன் என்பதை மறைத்து பெரும் செல்வந்தர் எனப் பொய் சொல்லி அழைத்து மாமனாரை ஏமாற்ற முயற்சிக்கிறான் தம்பி. ரங்கதுரை இந்த இடத்தில் உண்மையை மாமனாருக்கு உணர்த்துகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு பழைய நினைவு வருகிறது. தான் ரயிலில் பாடிப் பிழைத்து தன் தம்பி தங்கைகளைக் காப்பாற்றியது நினைவுக்கு வருகிறது. அந்தப் பாடலையே இந்த சூழ்நிலைக்குப் பயன் படு்த்துகிறான். அந்த சூழ்நிலையில் தம்பியை எண்ணி மனம் நொந்து அம்மம்மா என்ற வார்த்தையைப் பயன் படுத்துகிறான். எப்படி ...

அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான் ...

இந்த அம்மம்மாவில் தம்பி தன்னை தூக்கி எறிந்து நன்றி கெட்டவனாக நடந்து கொள்கிறானே என்கிற ஏக்கம், தன்னுடைய பாசத்தை அர்த்தமில்லாமல் ஆக்கிவிட்டானே என்கின்ற துக்கம். இப்படி பல உணர்வுகள் அந்த ஒரு சொல்லில் வர வைத்திருக்கிறார் மெல்லிசை மன்னர். இதிலும் அம்மம்மா என்று சரணம் முடிந்து மீண்டும் அம்மம்மா என்று தொடரும்.

மெல்லிசை மன்னர் என்கிற புத்தகத்தில் முதல் அத்தியாயத்தின் முதல் பக்கத்தின் முதல் வரியையே நாம் இன்னும் தாண்டவில்லை என்பதே இதிலிருந்து நமக்குப் புரிய வருகிறது.

இதில் அனைவரும் பங்கு பெற்று தத்தம் தேடல்களை, தத்தம் சொற்களைக் கொண்டு தொடரலாம்.

இந்தத் தொடருக்கு காரணமாயிருந்த அன்பு நண்பர் சம்பத் அவர்களுக்கு என் நன்றிகள்.

ராகவேந்திரன்
_________________
Visit my website for Viswanthan-Ramamurthi
http://mellisai.tripod.com
My blogs:
http://msvquiz.blogspot.com/
http://oldtamilfilmsongs.blogspot.com/
http://oldtamilfilms.blogspot.com/
http://mellisaititle.blogspot.com
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Articles & Writings by Fans! All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group