"MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com
Official Website of M.S.Viswanathan - Legendary Indian Composer
 
 FAQFAQ   SearchSearch   MemberlistMemberlist   UsergroupsUsergroups   RegisterRegister 
 ProfileProfile   Log in to check your private messagesLog in to check your private messages   Log inLog in 

Lyrics - Veru idam thedi - Sila nerangalil sila manidhargal

 
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics
View previous topic :: View next topic  
Author Message
Meenakshi



Joined: 23 Dec 2007
Posts: 119
Location: United States Of America

PostPosted: Fri Oct 09, 2009 4:07 am    Post subject: Lyrics - Veru idam thedi - Sila nerangalil sila manidhargal Reply with quote

படம்: சில நேரங்களில் சில மனிதர்கள்
பாடலாசிரியர்: ஜெயகாந்தன்
இசை: மெல்லிசை மன்னர்
பாடியவர்: வாணி ஜெயராம்

வேறு இடம் தேடித் போவாளோ
இந்த வேதனையில் இருந்து மீள்வாளோ
நூறு முறை இவள் புறப்பட்டாள்
விதி நூலிழழில் இவள் அகப்பட்டாள்

பருவ மழை பொழிய பொழிய பயிர் எல்லாம் செழிக்காதோ
இவள் பருவ மழையாலே வாழ்கை பாலைவனமாகியதே
(வேறு இடம்)

தருவதனால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ
இவள் தரவில்லை பெறவில்லை தனி மரமாய் ஆனாளே
சிறு வயதில் செய்த பிழை சிலுவயென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ, மலரெனவே முகிழ்ப்பாளோ
(வேறு இடம்)

திரு. ஜெயகாந்தன் அவர்களின் சாகித்ய அகாடமி விருதை வென்ற நாவலான சில நேரங்களில் சில மனிதர்கள் கதையை, 1975- ல் திரை படமாக எடுத்தவர் திரு. பீம்சிங் அவர்கள். இந்த படத்தில் லக்ஷ்மி, நாகேஷ், ஸ்ரீகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். லக்ஷ்மி அவர்களுக்கு ஊர்வசி விருதை பெற்று தந்த படம் இது.

ரங்கசுவாமி அவர்கள் 'காணவந்த காட்சி என்ன வெள்ளி நிலவே' பாடலை பற்றி எழுதி இருந்ததை படித்தபோது எனக்கு இந்த பாடல் நினைவுக்கு வந்தது. இந்த பாடல் திருமணம் ஆவதற்கு முன், அறிமுகமே இல்லாத ஒருவனிடம் தன் இளமையை பறிகொடுத்து அதனால் வரும் அத்தனை விளைவுகளையும் எதிர் கொண்டு போராடும் ஒரு பெண்ணை பற்றியது.

கல்லூரியில் படிக்கும் பெண்ணான லக்ஷ்மி, ஒரு மாலை நேரம் நல்ல மழையில் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது, காரில் வரும் ஸ்ரீகாந்த், அவளை இல்லத்தில் விடுவதாக அழைக்க, அவள் காரில் ஏறியவுடன், என்ன நடக்கிறது என்று உணரும் முன்னமே தன் இளமையை அவனிடம் பறிகொடுக்கிறாள். இதற்கு ஒரே சாட்சி எழுத்தாளரான நாகேஷ். ஆசாரமான பிராமிண குடும்பத்தை சேர்ந்த லக்ஷ்மி, இந்த விஷயத்தால் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். பின் தன் மாமாவின் உதவியுடன் தொடர்ந்து படித்து, ஒரு வேலையில் அமர்ந்த பின் தனித்து வாழ்கிறார். தற்செயலாக நாகேஷ் எழுதும் ஒரு கதையை படிக்க, அதில் தன் வாழ்க்கையே கதையாக வருவதை புரிந்து கொண்டு, அவர் மூலம் தன் வாழ்கை பறிபோனதற்கு காரணமான ஸ்ரீகாந்தை கண்டுபிடிக்கிறார். பின் இருவரும் நல்ல நண்பர்களாக பழகும்போது, லக்ஷ்மி அவருடன் வாழ விரும்புகிறார். ஆனால் ஸ்ரீகாந்த் அதை மறுக்கிறார். பிறகு அவள் வாழ்கை என்ன ஆகும் என்ற ஒரு கேள்விக்குறியுடன் படம் முடிகிறது.

திரை படத்தின் நடுவில் பாடல் காட்சி வரும்பொழுதே, சிலர் வெளியே சென்று வருவார்கள். இந்த பாடல், இந்த படத்தின் கடைசியில் வரும். ஆனால், நான் இந்த படத்தை திரை அரங்கில் சென்று பார்த்தபோது, ஒருவர் கூட இருக்கையை விட்டு எழுந்திருக்கவில்லை. எனக்கு இது இன்றும் நினைவிருக்கிறது. இந்த பாடலின் வரிகள், இசை, வாணி ஜெயராம் அவர்களின் குரல், எல்லாம் சேர்ந்து எல்லோரையும் அப்படியே கட்டி போட்டு இந்த காட்சியுடன் ஒன்றிட வைத்து விட்டது. அவ்வளவு அருமையான பாடல் இது.

பாடலின் வரிகளை ஜெயகாந்தன் அவர்கள் மிகவும் அற்புதமாக எழுதி இருக்கிறார். அந்த பெண்ணின் வாழ்வை அப்படியே இந்த சிறு பாடலில் கொண்டு வந்து விட்டார். இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் மிகவும் ஆழ்ந்த அர்த்தங்களை கொண்டது.

//நூறு முறை இவள் புறப்பட்டாள், விதி நூலிழையில் இவள் அகப்பட்டாள்.//
அந்த சில நிமிடங்களால்தானே இவள் வாழ்கையே தடம் புரண்டு விட்டது. இது விதிதானே.

//பருவ மழை பொழிய பொழிய பயிரெல்லாம் செழிக்காதோ, இவள் பருவ மழையாலே வாழ்கை பாலைவனம் ஆகியதே.//
காலத்தே பயிர் செய்து, நேரத்துடன் நடக்கும் எல்லாமே செழிப்பாகத்தான் இருக்கும். ஒரு பெண்ணிற்கு தாய்மை பேறை பெற்று தரும் அந்த புனிதமான உறவு கூட, கால நேரம் தவறி வந்தால், அவள் வாழ்கையையே பாலைவனமாக்கி விடுகிறது.

//தருவதானால் பெறுவதனால் உறவு தாம்பத்யம் ஆகாதோ//
என்னை மிகவும் கவர்ந்த வரி இது. அழகான தாம்பத்யம் என்பது 'தருவதும், பெறுவதும்' தான் என்று இந்த இரண்டு வார்த்தைகள் மூலம் எவ்வளவு அழகாக, எளிமையாக எழுதி விட்டார். இந்த இரண்டும் ஒரு தாம்பத்ய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம். அன்பு, காதல், சந்தோஷம், நிம்மதி எல்லாமே தம்பதிகள் இருவரும் பரஸ்பரமாக பரிமாறி கொள்ளும்போதுதானே அந்த தாம்பத்யம் நிலைத்து நிற்கிறது. இதை ஜெயகாந்தன் அவர்கள் இந்த பாடலுக்கு மிகவும் பொருத்தமாக எழுதி இருக்கிறார்.

//சிறு வயதில் செய்த பிழை, சிலுவையென சுமக்கின்றாள்
இவள் மறுபடியும் உயிர்ப்பாளோ? மலரெனவே முகிழ்ப்பாளோ?//
படத்தின் முடிவே இந்த பாடல் வரிகளில். இவள் வாழ்வு மறுபடியும் மலர்ந்து வாசம் வீசுமா? என்ற கேள்விக்குறியுடன் இந்த பாடலும் முடிகிறது, படமும் முடிகிறது.

இந்த பாடலின் மெட்டு நம்மை அப்படியே அசத்தி விடும். அப்படிப்பட்ட மெட்டு இது. இந்த அருமையான மெட்டுக்கு வாணி ஜெயராமின் குரல் மிகவும் பொருத்தம். அவரின் தெள்ள தெளிவான உச்சரிப்பும், இந்த பாடலை அவர் நிதானமாக, அழுத்தமாக, அனுபவித்து பாடி இருக்கும் விதமும் நம் மனதை அந்த பெண்ணின் சோகத்தை உணர வைத்து விடும்.

இந்த பாடல் துவங்குவதே நல்ல உச்ச ஸ்தாயியில். அதை வாணியும் கணீரென்ற குரலுடன் துவங்குவார். பல்லவி முழுவதுக்கும் பின்னணியாக வருவது கம்பீரமான மிருதங்கம். சரணத்தில் பின்னணியாக வருவது தபலா. மற்றபடி இந்த பாடல் முழுவதும் 'சோகமும் ஒரு சுகம்தானோ' என்று எண்ணும் வண்ணம் நம் மனதோடு இணைந்து இழைவது வயலின்.

ஒரு படத்திற்கு அதன் climax மிகவும் முக்கியம். இந்த படத்திற்கு இந்த பாடல்தான் climax. இதை அப்படியே இந்த பாடல் மூலம் ஆணித்தரமாக நம் மனதில் நிறுத்திவிட்டார் மெல்லிசை மன்னர்.

இந்த படத்தில் இன்னொரு பாடலான 'கண்டதை சொல்லுகின்றேன்' என்ற பாடலை நம் மெல்லிசை மன்னரே பாடி இருக்கிறார். இதுவும் ஒரு அற்புதமான பாடல். மெல்லிசை மன்னர் வெகு சில பாடல்கள்தான் பாடி இருக்கிறார். ஆனால் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே மெகா ஹிட் தான்.
Back to top
View user's profile Send private message
parthavi



Joined: 15 Jan 2007
Posts: 705
Location: Chennai

PostPosted: Sun Oct 18, 2009 9:58 am    Post subject: Reply with quote

அன்புள்ள மீனாக்ஷி,

மீண்டும் ஒரு அருமையான பாடலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். படத்தின் கதை இந்தப் பாடலில் சுருக்கமாகச் சொல்லப்படுவதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்தோவியத்துக்கு என் மனமார்ந்த பாரட்டுக்கள்.

இந்தப் பாடல் படத்தின் கிளைமாக்சாக அமைந்தது போல், இதே கூட்டணியில் உருவான 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' படத்திலும், கிளைமாக்சில்

நடிகை பார்க்கும் நாடகம்
இதில் ரசிகர் எல்லாம் பாத்திரம்

என்ற பாடல் அமைந்திருக்கிறது.

இந்த இரு கிளைமாக்ஸ் பாடல்களுமே படம் பார்ப்பவர்கள் மனதில் ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களை (அவர்கள் விரும்பினால் கூட) இருக்கையை விட்டு எழுந்து விட முடியாமல் செய்து விடுகின்றன.


இதே போல் 'அபூர்வ ராகங்கள்' கிளைமாக்ஸும் 'கேள்வியின் நாயகனே' பாடல் மூலம் சொல்லப் படுகிறது.

சமீபத்தில், எம் எஸ் விக்கு நடந்த ஒரு பாராட்டுக் கூட்டத்தில் பேசிய கே.பீ, 'இந்தப் படத்த்தின் கிளைமாக்ஸ் உங்கள் இருவர் கையிலும்தான் இருக்கிறது' என்று எம் எஸ் வியிடமும், கண்ணதாசனிடமும் கூறியதை நினைவு கூர்ந்தார்.

மேலும் பல அருமையான பாடல்களை பற்றிய உங்கள் எழுத்தோவியங்களை எதிர் நோக்குகிறேன்.
_________________
P Rengaswami (9381409380)
MSV, Un isai kettaal puvi asainthaadum, idhu iraivan arul aagum.
http://msv-music.blogspot.in/
Back to top
View user's profile Send private message Yahoo Messenger
Venkat



Joined: 18 Dec 2007
Posts: 601
Location: Chennai, where MuSic liVes

PostPosted: Sun Oct 18, 2009 12:50 pm    Post subject: Reply with quote

Dear Meenakshi,
As usual wonderful analysis for yet another lovely song from you. Thanks a lot.
You are coming with a bang in each of your analysis.

ஒரு படத்திற்கு அதன் climax மிகவும் முக்கியம். இந்த படத்திற்கு இந்த பாடல்தான் climax. இதை அப்படியே இந்த பாடல் மூலம் ஆணித்தரமாக நம் மனதில் நிறுத்திவிட்டார் மெல்லிசை மன்னர்.
மிகவும் சரியாக சொன்னீர்கள். இந்த பாடல் முடிந்தவுடன் படமும் முடிந்துவிடும்.
Bheemsingh used this song very effectively. The song used at the end will create a great impact for the viewers.

Please do more such analysis frequently.
உங்களது இந்த சேவை தொடர எனது வாழ்த்துக்கள்.
_________________
Meendum Santhippom Viraivil...
Regards,
Mahesh
Back to top
View user's profile Send private message
Display posts from previous:   
Post new topic   Reply to topic    "MSV CLUB" - The Discussion Forum of MSVTimes.com Forum Index -> Lyrics All times are GMT + 5.5 Hours
Page 1 of 1

 
Jump to:  
You cannot post new topics in this forum
You cannot reply to topics in this forum
You cannot edit your posts in this forum
You cannot delete your posts in this forum
You cannot vote in polls in this forum


Powered by phpBB © 2001, 2005 phpBB Group